Published:Updated:

``ஆளுநரை எதிர்க்கும் கட்சிகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும்" - திமுக-வின் அடுத்த மூவ்

முதல்வர் ஸ்டாலின் - ஆளுநர் ரவி

"ஆர்.என்.ரவியின் பேச்சும் நடவடிக்கையும் மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டின் மாநில ஆளுநருடையதைப்போல இல்லை" எனக் குற்றம்சாட்டப்படுகிறது.

``ஆளுநரை எதிர்க்கும் கட்சிகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும்" - திமுக-வின் அடுத்த மூவ்

"ஆர்.என்.ரவியின் பேச்சும் நடவடிக்கையும் மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டின் மாநில ஆளுநருடையதைப்போல இல்லை" எனக் குற்றம்சாட்டப்படுகிறது.

Published:Updated:
முதல்வர் ஸ்டாலின் - ஆளுநர் ரவி

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் சமீபகாலப் பேச்சுகள் தொடர்ந்து சர்ச்சையாகிவருகின்றன. “நாட்டில் இருக்கிற பிரச்னைகளுக்குத் தீர்வுகளைக் கொண்டுவருவார், அமைதிக்குப் பாடுபடுவார் என்று பார்த்தால், இவரே பிரச்னைகளைக் கிளப்புவதும், அமைதியைக் கெடுக்கும்விதமாகவும் பேசிக்கொண்டிருக்கிறார்.

‘ரிஷிகளாலும், சனாதன தர்மத்தாலும் உருவானதுதான் பாரதம்’ என்றதில் தொடங்கி, ‘கோவை கார் குண்டு வெடிப்புச் சம்பவத்தை என்.ஐ.ஏ விசாரணைக்கு உடனடியாக ஏன் மாற்றவில்லை?’ என்று உள் அர்த்தம் கற்பித்துப் பேசுவது வரையில் ஆர்.என்.ரவியின் பேச்சும் நடவடிக்கையும் மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டின் மாநில ஆளுநருடையதைப்போல இல்லை.

ஆளுநர் ரவி
ஆளுநர் ரவி

குறிப்பாக, கல்வி நிலையங்களில், தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலெல்லாம் மதம் சார்ந்த கருத்துகளைத் தூவுவதை வழக்கமாக்கியிருக்கிறார். ஆளுநரின் செயல்பாடுகள், நாளுக்கு நாள் பிரிவினையைத் தூண்டும்விதமாகவே இருக்கின்றன. ஒரு கட்சியின் அரசியல் பிரசாரகர் போன்ற அவரது தேவையற்ற பேச்சுகளை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடுகடுக்கிறார்கள் .

தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., ம.ம.க., கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்கு மக்கள் தேசக் கட்சி, தி.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டாகச் சேர்ந்து அறிக்கை வெளியிட்டிருக்கின்றன. இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியைத் திரும்ப பெற குடியரசுத் தலைவரிடம் முறையிட தி.மு.க முடிவுசெய்திருக்கிறது.

எம்.பி டி.ஆர்.பாலு
எம்.பி டி.ஆர்.பாலு

இதைத் தொடர்ந்து, ஆளுநரைத் திரும்பப்பெறும் குறிப்பாணையில் கையொப்பமிட, தி.மு.க கூட்டணிக் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. இது தொடர்பாக தி.மு.க மற்றும் தோழமைக் கட்சி எம்.பி-களுக்கு அதன் பொருளாளரும், எம்.பி-யுமான டி.ஆர்.பாலு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், ``நாளைக்குள் தி.மு.க அலுவலகமான அண்ணா அறிவாலயம் வந்து, இந்தக் குறிப்பாணையில் கையெழுத்து இட வேண்டும். அதை குடியரசுத் தலைவரிடம் கொடுக்கவிருக்கிறோம். ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்” என்று அவர் அழைப்பு விடுத்திருக்கிறார்.