தமிழக காங்கிரஸ் கட்சியின் பட்டியலினப் பிரிவின் சார்பாக எழுதப்பட்டிருக்கும் `தலித் உண்மைகள்’ என்ற புத்தகத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அந்த விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, செல்வப்பெருந்தகை, குஜராத் சட்டப்பேரவை உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய குஜராத் எல்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி, ``பா.ஜ.க தமிழ்நாட்டில் வேகமாகக் காலூன்ற செயல்பட்டுவருகிறது. தமிழ்நாட்டுக்கு சாவர்கர் தேவையில்லை. பெரியாரைக் கொண்டாடுங்கள். தமிழ்நாட்டில் குஜராத் மாடலை அனுமதிக்காதீர்கள். ஏனெனில் அதன் கொடுமை அவர்களுக்கு நன்றாகவே தெரியும். மதம், சாதி இரண்டும் ஒன்றிணைந்த ஒன்று. அதை நாம் எதிர்க்க வேண்டும். பட்டியலின மக்களைக் காப்பதற்கு நாம் அனைத்தையும் செய்ய வேண்டும்'' எனத் தெரிவித்தார்.
