Published:Updated:

``திராவிடத்தை எருமைமாடுடன் ஒப்பிடுவதா?" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

"அரசியல் ரீதியாக யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம். ஆனால், எருமை மாட்டுடன் திராவிடத்தை ஒப்பிட்டுப் பேசுவது திராவிடத்தைக் கொச்சைப்படுத்துவதாகும்" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

``திராவிடத்தை எருமைமாடுடன் ஒப்பிடுவதா?" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

"அரசியல் ரீதியாக யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம். ஆனால், எருமை மாட்டுடன் திராவிடத்தை ஒப்பிட்டுப் பேசுவது திராவிடத்தைக் கொச்சைப்படுத்துவதாகும்" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Published:Updated:
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சமீபத்தில் இசையமைப்பாளர் இளையராஜா அம்பேத்கரையும், பிரதமர் மோடியையும் ஒப்பிட்டு பேசியது தமிழகத்தில் விவாத பொருள் ஆனது. இதற்குக் கலவையான பல விமர்சனங்கள் வந்தன. 

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இளையராஜா சர்ச்சை குறித்து செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ``இளையராஜா சொன்னது அவரின் தனிப்பட்ட கருத்து. அதற்காக அவரை விமர்சிக்க வேண்டியதில்லை. யுவன்ஷங்கர் ராஜா சிறுபிள்ளை என்பதால் புரிதல் இல்லை. ஒன்று திராவிடனாக இருங்கள். இல்லை என்றால் தமிழனாக இருங்கள். 

இளையராஜா
இளையராஜா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கே.ஜி.எஃப் பட நடிகர் யஷ் கூட தன்னை `பெருமைமிகு கன்னடிகா’ என்றே கூறுகிறார். அதேபோல நீங்களும் பெருமைமிகு தமிழன் என்று சொல்ல வேண்டியதுதானே? கருப்பா இருந்தால் திராவிடர் என்று பொருளா? எருமை மாடு கூடத்தான் கருப்பாக இருக்கிறது அதற்காக எருமை திராவிடரா? உழைக்கும் மக்கள் நிறம் கருப்பாகத்தான் இருக்கும்" என்று பேசியிருந்தார்.

சீமான்
சீமான்

இதைத் தொடர்ந்து, இன்று சிவந்தி ஆதித்தனாரின் 9-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரின் நினைவு இல்லத்தில் அவருக்கு மரியாதை செலுத்துவதற்காக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம், "சீமான் எருமைமாடு கூட கருப்பாகத்தான் இருக்கிறது. அதற்காக எருமைமாடு திராவிடராக முடியுமா என்று கேட்டிருக்கிறார். இது திராவிடத்தை இழிவுபடுத்தும் கருத்தாகும். பகுத்தறிவு உள்ளவர்கள் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அரசியல் ரீதியாக யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம். ஆனால், எருமை மாட்டுடன் திராவிடத்தை ஒப்பிட்டுப் பேசுவது திராவிடத்தைக் கொச்சைப்படுத்துவதாகும். அதைச் செய்த சீமானுக்கு எங்களது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். முதலமைச்சர் எப்போது பார்த்தாலும் அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டுகிறார். முதலில் தேர்தலுக்கு முன் தி.மு.க சொன்ன வாக்குறுதிகள் என்ன ஆயிற்று? அதை அவர்கள் ஆராய வேண்டும். ஆளுநர் மீது பழிபோடுவதற்காகவே அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுகிறார் முதலமைச்சர். அரசியல் அமைப்பு சட்டத்தில் என்ன இருக்கிறதோ அதைத்தான் ஆளுநர் பின்பற்ற முடியும்" எனத் தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism