Published:Updated:

``காவி உடை வேண்டாம்... கொஞ்சம் மாடர்னாக இருங்கள் யோகி!" - உ.பி முதல்வருக்கு காங்கிரஸ் தலைவர் அறிவுரை

யோகி ஆதித்யநாத் - ஹுசைன் தல்வாய்

மகாராஷ்டிரா மூத்த காங்கிரஸ் தலைவர் ஹுசைன் தல்வாய், யோகி ஆதித்யநாத்தின் காவி உடை குறித்து அவருக்கு அறிவுரை வழங்கியிருப்பது பா.ஜ.க-வினரிடையே எதிர்ப்பைக் கிளப்பியிருக்கிறது.

``காவி உடை வேண்டாம்... கொஞ்சம் மாடர்னாக இருங்கள் யோகி!" - உ.பி முதல்வருக்கு காங்கிரஸ் தலைவர் அறிவுரை

மகாராஷ்டிரா மூத்த காங்கிரஸ் தலைவர் ஹுசைன் தல்வாய், யோகி ஆதித்யநாத்தின் காவி உடை குறித்து அவருக்கு அறிவுரை வழங்கியிருப்பது பா.ஜ.க-வினரிடையே எதிர்ப்பைக் கிளப்பியிருக்கிறது.

Published:Updated:
யோகி ஆதித்யநாத் - ஹுசைன் தல்வாய்

பா.ஜ.க ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசத்தில் முதல்வராக இருப்பவர் யோகி ஆதித்யநாத். தீவிர இந்துத்துவவாதியான இவர், முதல்வராக மத வேறுபாடின்றி அனைத்துத் தரப்பினருக்கும் அரசு கடமைகளைச் செய்யும் மக்கள் பிரதிநிதியாக இருந்தாலும்,

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

தான் செல்லும் இடங்களிலெல்லாம் காவி உடையிலேயே வலம் வருவார். அது அரசு நிகழ்வாக இருந்தாலும், வேறு எதாவது விழாவாக இருந்தாலும் சரி, காவி உடையே அவரின் பிரதான உடையாக இருக்கிறது.

இந்த நிலையில், அடுத்த மாதம் லக்னோவில் நடைபெறவிருக்கும் உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டுக்கு முன்னதாக உள்நாட்டு முதலீட்டாளர்களை தன்பக்கம் ஈர்க்கும் வண்ணம் இரண்டு நாள்கள் பயணமாக யோகி ஆதித்யநாத் மும்பை வந்தடைந்தார். இந்தச் சூழலில் மகாராஷ்டிரா மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் எம்.பி-யுமான ஹுசைன் தல்வாய், யோகி ஆதித்யநாத்தின் காவி உடை குறித்து அவருக்கு அறிவுரை வழங்கியிருப்பது பா.ஜ.க-வினரிடையே எதிர்ப்பை கிளப்பியிருக்கிறது.

ஹுசைன் தல்வாய்
ஹுசைன் தல்வாய்

நேற்று செய்தியாளர்களிடம் யோகி ஆதித்யநாத்தைக் குறிப்பிட்டுப் பேசிய ஹுசைன் தல்வாய், ``தொழில்துறைக்கு மகாராஷ்டிரா பல சிறப்பான வசதிகளை வழங்கியிருக்கிறது. எனவே, மகாராஷ்டிராவிலிருந்து தொழிற்சாலைகளை எடுக்காமல், தன் மாநிலத்தில் புதிய தொழிற்சாலைகளை அவர் உருவாக்க வேண்டும். நாள்தோறும் மதத்தைப் பற்றி பேசாதீர்கள். காவி உடையை அணியாதீர்கள். கொஞ்சம் மாடர்னாக மாறுங்கள். நவீன யோசனைகளை ஏற்றுக்கொள்ளுங்கள்" என்றார். ஹுசைன் தல்வாயின் இத்தகையப் பேச்சு பா.ஜ.க-வினரிடையே பெரும் அதிருப்தியையும் எதிர்ப்பையும் பெற்றுவருகிறது.