Published:Updated:

``வாழ்வில் நீங்கள் என்ன செய்தாலும் தாய்மொழியை மட்டும் விட்டுவிடாதீர்கள்!" - மத்திய அமைச்சர் அமித் ஷா

அமித் ஷா

``ஒருவன் தன்னுடைய தாய்மொழியில் சிந்தித்து ஆராய்ச்சி, பகுப்பாய்வை மேற்கொள்ளும்போது அதற்கான திறன் பல மடங்கு அதிகரிக்கிறது." - அமித் ஷா

Published:Updated:

``வாழ்வில் நீங்கள் என்ன செய்தாலும் தாய்மொழியை மட்டும் விட்டுவிடாதீர்கள்!" - மத்திய அமைச்சர் அமித் ஷா

``ஒருவன் தன்னுடைய தாய்மொழியில் சிந்தித்து ஆராய்ச்சி, பகுப்பாய்வை மேற்கொள்ளும்போது அதற்கான திறன் பல மடங்கு அதிகரிக்கிறது." - அமித் ஷா

அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``வாழ்வில் நீங்கள் என்ன செய்தாலும் தாய்மொழியை மட்டும் விட்டுவிடாதீர்கள்" எனத் தெரிவித்திருக்கிறார்.

அமித் ஷா
அமித் ஷா
ட்விட்டர்

நேற்றைய தினம் பரோடா மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தின் 71-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அமித் ஷா, தேசிய கல்விக் கொள்கையை (NEP) படிக்குமாறு மாணவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

மேலும் மொழி குறித்து மாணவர்களிடம் பேசிய அமித் ஷா, ``உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யுங்கள், ஆனால், உங்கள் தாய்மொழியை மட்டும் ஒருபோதும் விட்டுவிடாதீர்கள். மொழி என்பது உணர்வின் வெளிப்பாடே அன்றி வேறொன்றுமல்ல. ஒருவன் தன்னுடைய தாய்மொழியில் சிந்தித்து ஆராய்ச்சி, பகுப்பாய்வை மேற்கொள்ளும்போது அதற்கான திறன் பல மடங்கு அதிகரிக்கிறது. அதோடு, முடிவெடுக்கும் திறனும் அதிகரிக்கிறது.

அமித் ஷா
அமித் ஷா

நம் நாட்டின் மொழிகளில் சிறந்த இலக்கணம், இலக்கியம், கவிதை, வரலாறு ஆகியவை இருக்கின்றன. அவற்றை நாம் வளப்படுத்தாவிட்டால், நம் நாட்டின் எதிர்காலத்தை மேம்படுத்த முடியாது. இதன் காரணமாகவே பிரதமர் மோடி, தேசிய கல்விக் கொள்கையின்கீழ் தொடக்கக் கல்வியில் தாய்மொழியைக் கட்டாயமாக்க நினைத்தார்" என்று இந்தியில் கூறினார்.