Published:Updated:

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: பேரறிவாளன் விடுதலை மற்ற ஆறு பேருக்கும் பொருந்துமா?! - ஒரு சட்டப் பார்வை

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் மற்ற ஆறு பேருக்கும் இந்தத் தீர்ப்பு பொருந்துமா என்பதை விவரிக்கிறது இந்த கட்டுரை.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: பேரறிவாளன் விடுதலை மற்ற ஆறு பேருக்கும் பொருந்துமா?! - ஒரு சட்டப் பார்வை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் மற்ற ஆறு பேருக்கும் இந்தத் தீர்ப்பு பொருந்துமா என்பதை விவரிக்கிறது இந்த கட்டுரை.

Published:Updated:
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவந்த பேரறிவாளனை அரசமைப்புச் சட்டத்தின் 142-வது பிரிவின் கீழ் தங்களுக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்துள்ளது உச்ச நீதிமன்றம்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழ்நாடு அமைச்சரவை 2018, செப்டம்பர் 9-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றியது. சிறையிலுள்ள ஏழு பேர் விவகாரத்தில் 161-வது பிரிவின் கீழ் தமிழ்நாடு ஆளுநர் முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் 2018, செப்டம்பர் 6-ம் தேதியன்று தீர்ப்பளித்தது. இதையடுத்து இவர்கள் எழுவரையும் விடுதலை செய்ய அப்போதைய அதிமுக அரசு முடிவெடுத்து ஆளுநருக்குப் பரிந்துரை அனுப்பியிருந்தது.

பேரறிவாளன்
பேரறிவாளன்

ஆனால், அந்தப் பரிந்துரை மீது முடிவெடுப்பதில் தமிழ்நாடு ஆளுநர் கால வரம்பற்ற தாமதம் செய்தார். இதைச் சுட்டிக்காட்டியே அரசமைப்புச் சட்டத்தின் 142-வது பிரிவின் கீழ் தங்களுக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்தத் தீர்ப்பு மற்ற ஆறு பேருக்கும் பொருந்துமா... அவர்களையும் விடுவிப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளனவா... என்கிற கேள்வியை சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் உதயம் மனோகரனிடம் முன்வைத்தபோது, “நிச்சயமாக மற்ற ஆறு பேருக்கும் இந்தத் தீர்ப்பு பொருந்தும்” என்றவர், அதை விரிவாகப் பகிர்ந்துகொண்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“இந்த வழக்கைப் பொறுத்தவரை ஆளுநருக்கு என்று தனி அதிகாரம் கிடையாது. மாநில அரசின் அமைச்சரவையின் அடிப்படையில்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் பேரறிவாளனுக்கு மட்டுமல்ல, மற்ற ஆறு பேருக்கும் சேர்த்துத்தான் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினார்கள். எனவே ஆறு பேருக்கான விடுதலைக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. தீர்ப்பிலும் தமிழ்நாடு அரசு சொல்லியிருப்பதை ஆளுநர் கேட்க வேண்டும் என்று தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது” என்றவர், இந்தத் தீர்ப்பில் குறிப்பிட்ட சட்டப் பிரிவுகள் 142, 161 குறித்துக் கூறினார்.

வழக்கறிஞர் உதயம் மனோகரன்
வழக்கறிஞர் உதயம் மனோகரன்

“சட்டப்பிரிவு 72, கருணைமனு அடிப்படையில் தண்டனைக் குறைப்போ அல்லது முன் விடுதலை செய்யப்படலாம் என்பது குடியரசுத் தலைவருக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரம். அதேபோல் ஆளுநருக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரம்தான் சட்டப்பிரிவு 161. இது மாநில அமைச்சரவையின் ஆலோசனையின் அடிப்படையிலும், முடிவின் அடிப்படையிலும் செயல்படுத்தப்பட வேண்டும். சட்டப் பிரிவு 142 என்பது உச்ச நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரமாகும். பட்டியலிடாத சில விஷயங்கள் வரும்போது உச்ச நீதிமன்றம் சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி எந்த முடிவும் எடுக்கலாம் என்பதுதான் இதன் சிறப்பு. இதற்கு முன் நிலோஃபர் நிஷா (Nilofer Nisa) வழக்கில் சட்டப் பிரிவு 142-ஐ பயன்படுத்தி ஐந்து பேரை விடுதலை செய்திருக்கிறார்கள்” என்றவரிடம், `மாநில அரசுக்கு அதிகாரம் இருந்தும் ஏன் ஏழு பேர் விடுதலை தாமதமானது?’ என்கிற கேள்வியை முன் வைத்தோம்.


``பிரதமர் கொலை வழக்கு என்பதால் தமிழக அமைச்சரவையில் முடிவெடுக்கத் தயங்கியிருக்கலாம். 2018-ம் ஆண்டில்தானே ஏழு பேர் விடுதலை பற்றி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள். ஆரம்பத்தில் நளினிக்கு மட்டும் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக மாற்றுகிறார்கள். அதுவும் சாதாரணமாக நடக்கவில்லை. அப்போது கருணாநிதி ஆட்சியில் ஆளுநராக இருந்த பாத்திமா பீவி, இவர்கள் கருணை மனுவைப் புறக்கணித்தார். இதை எதிர்த்து உயர் நீதிமன்றம் சென்றபோது, ‘ஆளுநர் தன்னிச்சையாக மனுவைப் புறக்கணிக்க முடியாது. சட்டசபைக்குத்தான் அனுப்ப வேண்டும். அங்கு என்ன ஆலோசனை வழங்கப்படுகிறதோ அதைத்தான் கேட்க வேண்டும்’ என்று கூறிய பிறகு, அதை ஏற்றுக்கொண்டு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படுகிறது. இது அப்போதே உயர் நீதிமன்றத்தில் நடந்திருக்கிறது. இன்றைக்கு வரைக்கும் இந்த வழக்கில் சரியான முடிவு எடுப்பதில் பயப்படுகிறார்களா அல்லது தயங்குகிறார்களா, அரசியல் செய்யப்பட்டதா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism