Published:Updated:

லக்கிம்பூர் சம்பவம்: ``நாய்கள் குரைத்து துரத்துவது போலதான்..!" - அஜய் மிஸ்ரா சர்ச்சைப் பேச்சு

லக்கிம்பூர் சம்பவம் - அஜய் மிஸ்ரா

``கொலைக் குற்றச்சாட்டில் சிறையில் இருக்கும் என் மகனின் காரை நாய்கள் குரைத்தபடி துரத்தியிருக்கின்றன." - அஜய் மிஸ்ரா

லக்கிம்பூர் சம்பவம்: ``நாய்கள் குரைத்து துரத்துவது போலதான்..!" - அஜய் மிஸ்ரா சர்ச்சைப் பேச்சு

``கொலைக் குற்றச்சாட்டில் சிறையில் இருக்கும் என் மகனின் காரை நாய்கள் குரைத்தபடி துரத்தியிருக்கின்றன." - அஜய் மிஸ்ரா

Published:Updated:
லக்கிம்பூர் சம்பவம் - அஜய் மிஸ்ரா

கடந்த ஆண்டு லக்கிம்பூர் கெரியில் விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது போராட்டக்காரர்களுக்கு மத்தியில், காரை ஓட்டிவந்த மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா, நான்கு விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் ஆகியோர்மீது காரை ஏற்றிக் கொலைசெய்தார். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு வெடித்த வன்முறையில் மேலும் மூன்று பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் அஜய் மிஸ்ராவுக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

லக்கிம்பூர் சம்பவம்
லக்கிம்பூர் சம்பவம்

இது தொடர்பாக இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்த மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா, சமீபத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, ``கொலைக் குற்றச்சாட்டில் சிறையில் இருக்கும் என் மகனின் காரை நாய்கள் குரைத்தபடி துரத்தியிருக்கின்றன. விவசாயிகளின் தலைவர் ராகேஷ் திகாட்டி எதற்கும் பயனற்றவர். அவர் இரண்டு தேர்தல்களில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தவர். உதாரணமாக, நான் லக்னோவுக்கு, நல்ல வேகத்தில் காரில் பயணம் செய்கிறேன்... சாலையில் நாய்கள் குரைக்கின்றன அல்லது காரைத் துரத்துகின்றன என்று வைத்துக்கொள்வோம். அதுபோல என்மீது வைக்கப்படும் விமர்சனங்கள்.

இது அவர்களின் இயல்பு. அதைப் பற்றி நான் எதுவும் சொல்ல மாட்டேன். இந்த இயல்பு நமக்கு இல்லை. நான் என் வாழ்க்கையில் எந்த தவறும் செய்யவில்லை. எனவே, எல்லா விஷயங்கள் ஒருநாள் வெளிப்படும். அப்போது நான் அனைவருக்கும் பதிலளிப்பேன். உங்கள் ஆதரவின் காரணமாக நான் இன்றும் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன் "என்று தெரிவித்திருக்கிறார்.

அஜய் மிஸ்ராவின் நாய்கள் உவமை அரசியல் வட்டாரத்தில் தற்போது சர்ச்சையாகியிருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் கருத்துக்கு பதிலளித்த விவசாயிகளின் தலைவர் ராகேஷ் திகாட்டி, ``அஜய் மிஸ்ராவின் மகன் ஒரு வருடமாக சிறையில் இருக்கிறார், அதனால்தான் அவர் கோபமாக இருக்கிறார். நான் ஒரு சிறிய மனிதன், அவர் பெரியவர். நான் 50,000 பேரை லக்கிம்பூருக்கு போராட்டத்துக்கு அழைத்துச் சென்றேன், அதனால் அவர் கோபப்படுவார். லக்கிம்பூரில் சட்டவிரோதமாக செயல்படுபவர்கள் இருக்கிறார்கள். அதனால், மக்கள் அவருக்கு பயப்படுகிறார்கள், லக்கிம்பூரை விடுவிக்க நாங்கள் பிரசாரம் செய்வோம்" என விளக்கமளித்திருக்கிறார்.