ஒபாமாவை கடுமையாகத் தாக்கிய தேர்தல் பிரசார காலத்தில் 'அவர் ஒரு மறைமுக முஸ்லிம்' என்று முத்திரை குத்தினார் டொனால்டு ட்ரம்ப். ''ஒபாமா ஆட்சியில் முஸ்லிம்கள் அதிகம் அமெரிக்காவிற்கு குடிபெயர முடிகிறது. ஆனால், கிறிஸ்தவர்களால் முடியவில்லை'' என்று குற்றம் சாட்டினார். ''மசூதிகளை ஆய்வு செய்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும், அமெரிக்காவில் வாழும் அனைத்து முஸ்லிம் நடவடிக்கையையும் பதிவு செய்ய வேண்டும்'' என்றார்.
இஸ்லாம் என்றால் கசப்பான அனுபவமாக அமெரிக்க உளவியலில் பதிவானது. இதனால், தீவிர வலதுசாரி இயக்கங்கள் 'இஸ்லாமோபோபியா' என்ற இஸ்லாமிய வெறுப்பு பிரசாரத்தின் முதன்மை மையமாக அமெரிக்காவை உருவாக்கினர். இவ்வகை பாப்புலிச வெறுப்பு பிரசாரங்கள் தேர்தலில் எதிர் மனநிலை வாக்குகளுக்கு வழிவகுத்தது. தொடர்ந்து அதிபர்கள் தம்மை இதில் அடையாளப்படுத்திக்கொண்டாலும், வெளிப்படையாகத் தன்னை காட்டிக்கொண்டு இஸ்லாமிய எதிர்ப்பின் அரசியலை அறுவடை செய்தார் ட்ரம்ப்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தீவிரவாதிகளின் ஊடுருவல்களில் இருந்து அமெரிக்காவைக் காக்கக் குறிப்பிட்ட நாட்டவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய இடைக்காலத் தடை விதித்தார். ஈரான், ஈராக், லிபியா, சிரியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் எனத் தடை விதிக்கப்பட்ட ஏழு நாடுகளும் இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகள். அதனால், இது 'இஸ்லாமியர்களுக்கு எதிரான உத்தரவு' என விமர்சிக்கப்பட்டது. அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், "எங்கள் தேர்தல் பிரசாரத்தில் எதைச் சொல்லி வெற்றிபெற்றோமோ அதை அமல்படுத்துகிறோம்" என அரசுத்தரப்பு கூறியது. அடுத்த 120 நாட்களுக்கு அகதிகளுக்கு தடை, அதிலும் சிரிய அகதிகளுக்கு மறு உத்தரவு வரும்வரை தடை, 90 நாட்களுக்கு ஏழு நாட்டவர்கள் நுழையத் தடை மற்றும் நிலுவையிலிருந்த விசாக்கள் ரத்து போன்றவை உத்தரவில் இடம்பெற்றிருந்தது. கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடு, பிரிட்டன் பிரதமர் தெரசா மே உள்படப் பலர் ட்ரம்ப்பின் முடிவில் அதிருப்தி கொண்டனர்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS"இஸ்லாமிய நாடுகள் தீவிரவாத நாடுகள் எனும்போது சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், பாகிஸ்தான், லெபனான் போன்ற இஸ்லாமிய நாடுகளை ஏன் தடைப்பட்டியலில் சேர்க்கவில்லை. ஏனெனில், அங்கெல்லாம் ட்ரம்ப்பின் பிசினஸ் ஏகபோகமாக நடக்கிறது. அரசின் செயல்பாட்டில் தனிப்பட்ட ஆதாயங்களைப் பார்க்கிறார் ட்ரம்ப்" என்ற விமர்சனமும் அப்போது எழுந்தது. அனைத்து அறிவுரைகளையும் துச்சமாக தூக்கியெறிய ட்ரம்ப் வைத்திருந்த 'நியாயம்' அமெரிக்க பாதுகாப்பு... அமெரிக்க மக்கள்!
உலகம் வேண்டாம்... அமெரிக்கா போதும்!
தன்னுடைய தனிப்பட்ட விருப்பத்திற்காக உலகம் என்ன சொன்னால் என்ன, என் நாடு, அதற்கு நான் அதிபர் எனத் தன்முனைப்போடு பல திட்டங்களை அறிவித்தார் ட்ரம்ப். அந்த வகையில் மொத்த உலகையும் தனக்கு எதிராகக் கோபப்பட வைத்த நிகழ்வு, பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்திலிருந்து விலகியது. நேட்டோ, இஸ்லாமிய நாடுகளுக்கான தடை வரிசையில் இதுவும் ட்ரம்ப்பின் 'அமெரிக்க முதன்மை' குறிக்கோளின் கீழ் இடம்பெற்ற முடிவாகும். ஆனால், இம்முடிவு அமெரிக்க நலன் என்பதை விட உலகின் அழிவிற்கான ஆரம்பப் புள்ளியாகப் பார்க்கப்பட்டது.

பூமியின் பரப்பில் வெப்பநிலை குறிப்பிட்ட சராசரி அளவுக்கு மேல் உயர்ந்தால் உலக வெப்பமயமாதல் ஏற்படும். தொழிற்புரட்சிக்கு முன்புவரைக்கும் சூரிய ஒளி அதிகரித்தல் அல்லது குறைதல், பூமி தனது நீள் வட்டப்பாதையிலிருந்து நுண்ணிய அளவில் விலகுதல், திடீர் பேரிடர்கள் போன்ற காரணங்களால் மட்டுமே பருவநிலை மாற்றம் ஏற்பட்டுவந்தது. ஆனால், அதன்பின்பு இந்தக் காரணிகள் மொத்தமும் மாறிவிட்டன. அதிகரிக்கும் பசுமைக்குடில் வாயுக்களின் (கார்பன் - டைஆக்சைடு, குளோரோ ஃபுளூரோ கார்பன் போன்றவை) வெளியேற்றம், பெட்ரோல் டீசல் போன்ற எரிபொருள்களின் அதீதப் பயன்பாடு, முக்கியமாக அழிக்கப்படும் இயற்கை வளங்கள் போன்ற மனிதனின் தொடர் செயல்களால் வெப்பநிலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கடந்த நூற்றாண்டில் 0.6 லிருந்து 0.9 டிகிரி செல்சியஸாக இருந்த பூமிப்பரப்பின் வெப்பநிலை இந்த நூற்றாண்டில் இரட்டிப்பாக அதிகரித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தொழிற்புரட்சியைத் தொடர்ந்து காலனியாதிக்கம், உலகப்போர்கள், புரட்சிப் போராட்டங்கள் போன்றவற்றால் சுற்றுச்சூழலைப் பற்றி தாமதமாகவே உணரமுடிந்தது. ஐ.நா-வில் சுற்றுச்சூழலைக் காப்பதற்காகத் தனி அமைப்பு நிறுவப்பட்டது. 1992-ம் ஆண்டு தொடங்கிய United Nations Framework Convention on Climate Change (UNFCCC) என்ற அமைப்பு உலகளவில் கவனம் பெற்றது. அதைத் தொடர்ந்து குறிப்பிட்ட கால இடைவெளிகளில், பல நிகழ்வுகள் சுற்றுச்சூழல் சார்ந்து நிகழ்ந்துவந்தாலும் 2015-ம் ஆண்டு நடைபெற்ற `பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம்' தீர்க்கமான முடிவுகளை வலியுறுத்தித் தீர்வை பெற்றது. பூமியின் வெப்பத்தைக் குறைக்க வேண்டும், இதற்காக ஒவ்வொரு நாடும் பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தை 2020-ம் ஆண்டுக்குள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், இதனால் ஏற்படும் இழப்புகளைச் சரிசெய்ய வளர்ந்த நாடுகள் வளர்ந்து வரும் நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் உதவ வேண்டும் என்றும் கூறப்பட்டது. பெட்ரோல் பயன்பாட்டை விரைவில் குறைத்துக்கொண்டு பசுமை எரிவாயுக்களைப் பயன்படுத்தப்போவதாக ஐரோப்பிய நாடுகளும் நம்பிக்கையளித்தனர்.

அமெரிக்கா தாமதமாகவே 2016-ம் ஆண்டில் ஒப்பந்தத்தில் இணைந்தது. ஒப்பந்தத்திற்குத் தேவையான அனைத்து முன்னெடுப்புகளையும் மேற்கொள்வோம் என உறுதியளித்தார் அதிபர் ஒபாமா. உலகிலேயே எரிவாயுக்களை அதிகம் வெளியிடும் அமெரிக்கா, சீனா இடையே இணக்கம் கண்டு பிரச்னையைத் தீர்க்கவும் முடிவு செய்தார். ஆனால், ட்ரம்ப்பின் தீவிர முதலாளிய (Crony Capitalism) வாதத்தின்படி பருவநிலை மாற்றம் என்பதே பொய். "சீனா தனது போட்டி நாடுகளைக் கட்டுப்படுத்த உருவாக்கிய கட்டுக்கதையே பருவநிலை மாற்றம்" என்றார் ட்ரம்ப். "மாறிவரும் மழைப்பொழிவுகள், கணிக்க முடியாத காலநிலை, அதிகரிக்கும் கடல்மட்ட உயர்வு போன்றவற்றால் பருவநிலை மாற்றத்தைக் கண்கூடாகப் பார்த்து வருகிறோம்" என்கிறார்கள் அறிவியலாளர்கள். எல்லாம் பொய் என கருத்துக்கூறி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறத் தயாரானார்கள் அமெரிக்க வியாபாரிகள்.
ஜூன் 1, 2017-ல் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினார் ட்ரம்ப். "பாரிஸ் ஒப்பந்தம் அமெரிக்காவிற்கு முழுவதுமாக பாதகமாக உள்ளது. அமெரிக்காவின் திறன்களும் வேலைவாய்ப்பும் குறையும், பொருளாதார பாதிப்புகள் ஏற்படும். மேலும் வளர்ந்த நாடுகளைக் குற்றம் சாட்டி, இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கே ஒப்பந்தம் சாதகமாக உள்ளது. அமெரிக்காவையும் அமெரிக்கர்களையும் காக்க இதிலிருந்து விலகுவதே ஒரே வழி" என்றார்.
உலக நாடுகள் அனைத்தும் கொதித்தெழுந்தது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அரசியல் விமர்சகர்கள், அறிவியலாளர்கள் என பலதரப்பிலிருந்தும் அமெரிக்காவின் முடிவைக் கண்டித்தனர். கூகுள், ஆப்பிள், இன்ட்டெல், அடோப் போன்ற உலகளாவிய 25 நிறுவனங்கள் இணைந்து பாரிஸ் ஒப்பந்தத்தை வலியுறுத்தி கடிதம் எழுதினர். அமெரிக்க மக்களில் 70 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர் பாரிஸ் ஒப்பந்தத்தை ஆதரித்திருந்தனர். அந்த வகையில், எதிர்கட்சிகளும் மக்களும் அமெரிக்காவில் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். "நமது சந்ததிகளின் எதிர்காலத்தை நாம் உறுதிப்படுத்த வேண்டும்" என்று முன்னாள் அதிபர்களான பில் கிளின்டனும், ஒபாமாவும் வேண்டுகோள் விடுத்தனர்.

ட்ரம்ப் அரசின் கடும் விமர்சகரான நோம் சாம்ஸ்கி (Noam Chomsky), உலக வரலாற்றிலேயே கொடிய இயக்கமாகக் குடியரசு கட்சியைக் கூறுகிறார். ட்ரம்ப்பின் முடிவில் சாதகமே இல்லையா என்றால் தொழிற் நிறுவனங்களின் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு ஊக்குவிக்கக் கூடியதாக உள்ளது. ட்ரம்ப் போன்ற முதலாளிகளின் வளர்ச்சி, அதன் மூலம் வேலைவாய்ப்புகள் போன்ற சிறு பங்களிப்புகள் இடம்பெற்றாலும், உலகைக் காக்க, எதிர்காலத்தை உறுதிப்படுத்த அதனை இழந்துதான் ஆகவேண்டும் என ஒப்பந்தம் உருவானது. அமெரிக்கா வெளியேறினால், அதை முன்னுதாரணமாகக் கொண்டு ஒவ்வொரு நாடாக வெளியேறலாம் என்ற அச்சம் உள்ளது. அப்படி வெளியேறும் பட்சத்தில் அடுத்த சில தசாப்தங்களிலேயே உலகத்திற்குப் பேரழிவு ஏற்படும் என்று அறிவியலாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
நாளை உலக அழிவு ஒன்று ஏற்பட்டால் அது அமெரிக்காவை மட்டும் பாதிக்காது என்ற எண்ணத்தில், அமெரிக்கா மட்டும் போதும் என்கிறாரா ட்ரம்ப் போன்ற கேள்விகளும் எழுகிறது. முறைப்படுத்தப்பட்ட உற்பத்தியும், சமன்படுத்தப்பட்ட பொருளாதாரமுமே சுற்றுச்சூழலைக் காக்கும் என்பது இடதுசாரிகளின் வாதம். இன்றைய சூழலியல் ரீதியான விழிப்புணர்வு போராட்டங்கள் உலகமயமாகியுள்ளது.

இன்று கிரேட்டா தன்பெர்க் வரை சுற்றுச்சூழலுக்கு எதிரான பணக்கார நாடுகளின் வர்த்தகத்தின் விளைவால் களம் கண்டுள்ளார்கள். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் தொழிற்புரட்சியிலிருந்து வெளியேற்றிய பசுமை குடில் வாயுக்களுக்கு வரலாற்று ரீதியில் பொறுப்பேற்க வேண்டும் (Historical Responsibility) என்று `கியோட்டோ பருவநிலை மாற்ற ஒப்பந்தம்' (1997) குறிப்பிட்டது.
வரலாறு அல்ல, எதிர்காலத்திற்கும் பொறுப்பேற்க முடியாது என்றே அமைந்தது ட்ரம்ப்பின் முடிவு.