Published:Updated:

`உறவினர்களுக்கு நோ பதவி; கடமை, கண்ணியம் அவசியம்!’ - அமைச்சர்களுக்கு மோடியின் 5 கட்டளைகள்

சத்யா கோபாலன்

தன் அமைச்சரவையில் உள்ள அனைவருக்கும் முக்கிய அறிவுரைகளை வழங்கியிருக்கிறார் பிரதமர் மோடி.

PM Modi
PM Modi

பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய மூன்று நாள்களுக்கு 5 நாள் சுற்றுப்பயணம் சென்றிருந்த பிரதமர் மோடி நேற்று முன் தினம் இந்தியா திரும்பினார். தொடர்ந்து நேற்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

Modi
Modi

அமைச்சர்களுடனான ஆலோசனை முடிந்த பிறகு அவர்களுக்குப் பல்வேறு அறிவுரைகளை வழங்கியிருக்கிறார் பிரதமர் மோடி. அதன்படி, `அனைத்து அமைச்சர்களும் தினமும் காலை 9:30 மணிக்கு அலுவலகத்துக்கு வரவேண்டும். தாமதமாக வரக்கூடாது. பொதுவெளிகள், ஊடகங்களில் பேசும்போது அமைச்சர்கள் கூறும் கருத்துகளில் அதிக கவனத்துடன் பேச வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

மோடி பேசிய 11வது நாள்... - வருமான வரித்துறையில் தொடங்கிய களையெடுப்பு?

மேலும், ‘உறவினர்கள், நண்பர்கள், ஆலோசகர்கள் போன்ற யாரையும் முக்கிய பொறுப்புகளில் பணியமர்த்த வேண்டாம். நிறைவேற்றக் கூடிய வாக்குறுதிகளை மட்டுமே மக்களுக்கு அளிக்க வேண்டும். தனி நபர் ஒழுக்கம், கண்ணியம் போன்றவற்றை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Modi
Modi

இவை அனைத்தையும் தான் தவறாமல் பின்பற்றுவதாகவும் அதேபோல் அனைத்து அமைச்சர்களும் பின்பற்ற வேண்டும் எனவும் கூறியிருக்கிறார் பிரதமர். மேலும், ` பிளாஸ்டிக் ஒழிப்பில் அரசு மேற்கொள்ளும் பிரசாரத்துக்கு அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு முற்றிலும் தடைவிதிக்க விழிப்புணர்வு மேற்கொள்ள வேண்டும்' எனவும் உறுதிபடத் தெரிவித்திருக்கிறார் மோடி.