Published:Updated:

``இந்த நிலைக்குச் சுயமாக வந்திருக்கிறேன்; சசி தரூருடன் என்னை ஒப்பிடாதீர்கள்!" - மல்லிகார்ஜுன கார்கே

மல்லிகார்ஜுன கார்கே

சோனியா காந்திதான் தன்னைப் போட்டியிடச் சொன்னதாக, மல்லிகார்ஜுன கார்கே கூறியதாகவும் செய்திகள் பரவின. இதற்கும், `சோனியா காந்தி என்னிடம் அப்படிக் கூறவில்ல' என மல்லிகார்ஜுன கார்கே நேற்று தெளிவுபடுத்தினார்.

``இந்த நிலைக்குச் சுயமாக வந்திருக்கிறேன்; சசி தரூருடன் என்னை ஒப்பிடாதீர்கள்!" - மல்லிகார்ஜுன கார்கே

சோனியா காந்திதான் தன்னைப் போட்டியிடச் சொன்னதாக, மல்லிகார்ஜுன கார்கே கூறியதாகவும் செய்திகள் பரவின. இதற்கும், `சோனியா காந்தி என்னிடம் அப்படிக் கூறவில்ல' என மல்லிகார்ஜுன கார்கே நேற்று தெளிவுபடுத்தினார்.

Published:Updated:
மல்லிகார்ஜுன கார்கே

காங்கிரஸ் கட்சியில் தலைமைப் பதவிக்கான தேர்தல் வரும் அக்டோபர் 17-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதில் காந்தி குடும்பத்திலிருந்து யாரும் போட்டியிடப்போவதில்லை என்றும், யாரையும் தனிப்பட்ட முறையில் ஆதரிக்கப்போவதில்லை என்றும் செய்தி வெளியானதையடுத்து, கட்சியில் பல்வேறு சலசலப்புகளுக்குப் பின்னர் சசி தரூர் போட்டியிடுவதாக முடிவானது. அதைத் தொடர்ந்து கடைசி நேரத்தில் மல்லிகார்ஜுன கார்கேவும் போட்டியிடுவதாக மனுத்தாக்கல் செய்தார்.

சசி தரூர்
சசி தரூர்

மூத்த தலைவர்கள் பலரும் மல்லிகார்ஜுன கார்கேவை ஆதரிப்பதாகப் பேச்சுகள் எழ, போட்டியிலிருந்து சசி தரூர் விலகிவிட்டதாகச் செய்திகள் பரவின. ஆனால், அவை வதந்தி என சசி தரூர் விளக்கமளித்துவிட்டார். இதேபோல், சோனியா காந்திதான் தன்னைப் போட்டியிடச் சொன்னதாக, மல்லிகார்ஜுன கார்கே கூறியதாகவும் செய்திகள் பரவின. இதற்கும், `சோனியா காந்தி என்னிடம் அப்படிக் கூறவில்லை' என மல்லிகார்ஜுன கார்கே நேற்று தெளிவுபடுத்தினார். இந்த நிலையில், `சசி தரூருடன் என்னை ஒப்பிட வேண்டாம்' என மல்லிகார்ஜுன கார்கே கூறியிருக்கிறார்.

மல்லிகார்ஜுன கார்கே
மல்லிகார்ஜுன கார்கே
ட்விட்டர்

பிரபல தனியார் ஊடகமொன்றுக்குப் பேட்டியளித்த மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூரின் தேர்தல் அறிக்கை குறித்துப் பேசியபோது, ``தொகுதித் தலைவராக இருந்து இந்த அளவுக்கு நான் சுயமாக வந்திருக்கிறேன். உதய்பூர் பிரகடனத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளைச் செயல்படுத்துவதுதான் அவருடைய அஜண்டா" எனக் கூறினார்.

மேலும் பேட்டியின்போது, தற்போதைய நெருக்கடியிலிருந்து காங்கிரஸுக்கு மாற்றத்தைக் கொண்டுவருவதற்கும், கட்சியை அதிலிருந்து வெளியே கொண்டுவருவதற்கும் இளைய முகம் தேவையா என்ற கேள்வி மல்லிகார்ஜுன கார்கேவிடம் கேட்கப்பட்டது. அதற்கு, ``கட்சியில் யார் யார் என்பதை அறிந்த ஓர் அமைப்புக்காரர் வேண்டும்" என மல்லிகார்ஜுன கார்கே பதிலளித்தார்.