Published:Updated:

`அரியலூர் மாணவி தற்கொலை விஷயத்தில் அரசியல் செய்ய வேண்டாம்!' - அமைச்சர் அன்பில் மகேஷ்

அமைச்சர் அன்பில் மகேஷ்

``அரியலூர் மாணவி தற்கொலை விஷயத்தில் அரசியல் செய்ய வேண்டாம்’’ என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

`அரியலூர் மாணவி தற்கொலை விஷயத்தில் அரசியல் செய்ய வேண்டாம்!' - அமைச்சர் அன்பில் மகேஷ்

``அரியலூர் மாணவி தற்கொலை விஷயத்தில் அரசியல் செய்ய வேண்டாம்’’ என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

Published:Updated:
அமைச்சர் அன்பில் மகேஷ்

அரியலூர் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டது தொடர்பாகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``இந்த விவகாரம் தொடர்பாக அந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூலமாகப் பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளோம். தஞ்சை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட கண்காணிப்பாளரும் இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்” என்று கூறினார்.

தற்கொலை
தற்கொலை
சித்தரிப்புப் படம்

மேலும், இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட விடுதி வார்டன், காப்பாளர் மீதும் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், இது குறித்து பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம் கருத்து கேட்டிருப்பதாகவும் தெரிவித்தார். ``மாணவி தற்கொலை விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய தண்டனை கிடைக்கும். மாணவி தற்கொலை விஷயத்தில் அரசியல் செய்ய வேண்டாம். இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேர்வு
தேர்வு

தொடர்ந்து பேசிய அவர், ``10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடைபெறும். ஏப்ரல், மே மாதத்தில் பொதுத்தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது” எனக் கூறினார். கொரோனா தொற்று குறையத் தொடங்கியுள்ளதால், சுகாதாரத்துறையின் அறிவுறுதலின்படி பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளிடம் வேலை வாங்கக் கூடாது என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism