Election bannerElection banner
Published:Updated:

`சொந்த லாபத்துக்குப் பயன்படுத்தாதீர்!’ கமலா ஹாரிஸ் மருமகளுக்கு நோட்டீஸ் அனுப்பிய வெள்ளை மாளிகை

கமலா ஹாரிஸ் - மீனா ஹாரிஸ்
கமலா ஹாரிஸ் - மீனா ஹாரிஸ் ( https://www.facebook.com/meena )

`உங்களை புரொமோட் செய்ய அத்தை கமலா ஹாரிஸின் பெயரைப் பயன்படுத்தாதீர்கள்’ என அவரது மருமகள் மீனா ஹாரிஸுக்கு வெள்ளை மாளிகைக் குழு அறிவுறுத்தியிருக்கிறது.

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் சமூக ஊடகத்தில் செல்வாக்குமிக்க மருமகள் மீனா ஹாரிஸ். நீண்டகாலமாகத் தனது சொந்த மதிப்பை உயர்த்துவதற்காக கமலா ஹாரிஸின் புகழைப் பயன்படுத்திவந்தார். ஆனால், தற்போது கமலா ஹாரிஸ் துணை அதிபராகியிருப்பதால், வெள்ளை மளிகை அதிகாரிகள் மீனா ஹாரிஸுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியிருக்கிறார்கள். அதில், `இனிமேல் உங்களின் எந்தத் தனிப்பட்ட விருப்பத்துக்காகவும் வியாபாரத்துக்காகவும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் பெயரைப் பயன்படுத்த வேண்டாம்’ என அறிவுறுத்தியுள்ளனர்.

மீனா ஹாரிஸ்
மீனா ஹாரிஸ்

இது குறித்து வெள்ளை மளிகை அதிகாரிகள் கூறுகையில், ``மீனா ஹாரிஸின் செயல்பாடுகள் ஏற்கத்தக்கவை அல்ல. சில விஷயங்களில் அவரது நடவடிக்கைகள் வெள்ளை மளிகையின் நெறிமுறைகளுக்கு முரணானவை. இது போன்ற செயல்பாடுகளால் வெள்ளை மளிகையில் புதிதாக பதவியேற்றிருக்கும் ஜோ பைடனின் ஆட்சிக்கு சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது’’ என்றனர்.

மீனா ஹாரிஸ் வழக்கறிஞராக இருந்து தொழில்முனைவோராக மாறியிருக்கிறார். அவரின் சமூக வலைதளக் கணக்கை எட்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர். அங்கு அவரின் அரசியல் முதல் தனிப்பட்ட வாழ்வு வரை அத்தனையையும் பகிர்ந்துகொள்கிறார்.

இவர் `கமலா மற்றும் மாயாவின் பிக் ஐடியா’ என்ற தலைப்பில் ஒரு சிறுவர் புத்தகத்தை எழுதியிருக்கிறார். ஃபினோமினல் என்ற ஆடை நிறுவனத்தை மகளிருக்கான தொண்டு நிறுவனமாக நடத்திவருகிறார்.

அவரது சமீபத்திய புத்தகம், `லட்சியப் பெண்’, அவருடைய அத்தை வெள்ளை மாளிகையில் முதல் பெண் துணை அதிபராகப் பதவியேற்பதற்கு முந்தைய நாள் இரவு வெளியிடப்பட்டது.

தி வியூ, தி டுடே போன்ற புகழ்பெற்ற அமெரிக்க நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றிருக்கிறார். மேலும், இந்த ஆண்டு தி நியூயார்க் டைம்ஸால் நடத்தப்பட்ட வேனிட்டி ஃபேர் என்ற நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டிருக்கிறார்.

கமலா ஹாரிஸுடன் மீனா ஹாரிஸ்
கமலா ஹாரிஸுடன் மீனா ஹாரிஸ்

அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, வெள்ளை மாளிகையின் வழக்கறிஞர்கள் மீனா ஹாரிஸிடம், துணை அதிபரின் பெயர் அல்லது அவரை மையப்படுத்திப் பயன்படுத்தும் எந்தவொரு தயாரிப்பையும் தயாரிக்க முடியாது என்று கூறியிருக்கிறார்கள். ஆனால், அவரோ தற்போது `துணை ஜனாதிபதி அத்தை’ (Vice President Aunty) என அச்சிடப்பட்ட ஓர் ஆடையை ஃபினோமினல் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார்.

விதிகளின் கீழ் இது அனுமதிக்கப்பட்டதல்ல என்று கூறும் அதிகாரிகள், இது குறித்து மீனா ஹாரிஸிடம் வெள்ளை மாளிகையின் வழக்கறிஞர்கள் குழு பேசிய பின்னரும், அவர் மற்றோர் ஆடையில் கமலா ஹாரிஸின் புகழ்பெற்ற பிரசார வாக்கியமான `I'm speaking' என்பதைப் பயன்படுத்தியிருக்கிறார் என்கிறார்கள்.

இது குறித்து அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் கூறுகையில், `தேர்தல் பிரசாரத்தின் தொடக்கத்திலிருந்தே, அனைத்துச் சட்ட மற்றும் நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்று நான் வலியுறுத்தியிருக்கிறேன். வெள்ளை மாளிகையின் நெறிமுறை விதிகளைத் தொடர்ந்து கடைப்பிடிப்பேன்’’ என்பதோடு முடித்துக்கொண்டார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு