Published:Updated:

`நாடாளுமன்றத்தில் இந்த வார்த்தைகளை இனிப் பயன்படுத்தக் கூடாது’ - வெளியானது பட்டியல்

நாடாளுமன்றம்

மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18-ம் தேதி தொடங்கும் நிலையில், இந்த அறிவிப்பு அதிக கவனம் பெறுகிறது.

`நாடாளுமன்றத்தில் இந்த வார்த்தைகளை இனிப் பயன்படுத்தக் கூடாது’ - வெளியானது பட்டியல்

மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18-ம் தேதி தொடங்கும் நிலையில், இந்த அறிவிப்பு அதிக கவனம் பெறுகிறது.

Published:Updated:
நாடாளுமன்றம்

மக்களவையிலும், மாநிலங்களிலும் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவைச் செயலகம் வெளியிட்டிருக்கிறது. அதில் வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுக்கேட்பு ஊழல், கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, காலிஸ்தானி, இரட்டை வேடம், பயனற்றது, ரத்தக்களரி, குரூரமானவர், ஏமாற்றினார், குழந்தைத்தனம், கோழை, கிரிமினல், முதலைக் கண்ணீர், அவமானம், கழுதை, கண்துடைப்பு, ரெளடித்தனம், போலித்தனம், தவறாக வழிநடத்துதல், பொய், உண்மையல்ல, முட்டாள்தனம், பாலியல் தொல்லை, குண்டர்கள், லாலிபாப், பாப்கட் ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

ஒருவேளை இந்த வார்த்தைகள் இனி மக்களவை அல்லது மாநிலங்களவையில் பயன்படுத்தப்பட்டால் அவற்றை அவைக்குறிப்பிலிருந்து சபைத் தலைவர் நீக்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த வார்த்தைகளில் ஆங்கில வார்த்தைகளும், இந்தி வார்த்தைகளும் அதிகம் இடம்பெற்றுள்ளன.

மழைக்காலக் கூட்டத்தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்கும் நிலையில், இந்த அறிவிப்பு கவனம் பெற்றிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!