Published:Updated:

ம.பி: "அடுத்த தேர்தலில் பாஜக-வைத் தேர்வுசெய்ய வேண்டிய அவசியமில்லை!" - பாஜக மூத்த தலைவர் உமா பாரதி

உமா பாரதி

"மக்கள் தங்களின் விருப்பப்படி வாக்களிக்க வேண்டும். பா.ஜ.க-வை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை." - பா.ஜ.க தலைவர் உமா பாரதி

230 உறுப்பினர்களைக்கொண்ட மத்தியப் பிரதேசத்தின் சட்டமன்றத்தில், சிவராஜ் சிங் சௌஹான் தலைமையில் பா.ஜ.க பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருக்கிறது. அடுத்த சட்டமன்றத் தேர்தல் 2024-ல் நடைபெறவிருக்கிறது. அந்தத் தேர்தலுக்கான திட்டமிடலை பா.ஜ.க தற்போதே தொடங்கிவிட்டது. இந்த நிலையில் நீர்வளம், ஆறு மேம்பாடு, கங்கை புத்துயிர்ப்பு ஆகிய துறைகளுக்கு அமைச்சராக இருந்த, பா.ஜ.க-வின் மூத்த தலைவர் உமா பாரதி, மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற ஒரு பெரிய கூட்டத்தில் மக்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ``மக்கள் தங்கள் விருப்பப்படி வாக்களிக்க வேண்டும். மத்தியப் பிரதேசத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வைத் தேர்வுசெய்ய வேண்டிய அவசியமில்லை.

நான் பா.ஜ.க-வின் விசுவாசமான தொண்டர். எப்போதும் நான் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக வாக்களிப்பேன். ஆனால், பா.ஜ.க-வுக்கு வாக்களியுங்கள் என்ற என்னுடைய வேண்டுகோளை நீங்கள் ஏற்கவேண்டிய அவசியமில்லை. உங்கள் விருப்பம் மற்றும் மக்கள் நலன் கருதி வாக்களியுங்கள்" எனக் கூறியிருக்கிறார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டுவருகிறது.