Published:Updated:

ம.பி: ``உங்கள் வாக்கை காங்கிரஸுக்கு அளித்து வீணாக்காதீர்கள்" - அசாதுதீன் ஒவைசி

அசாதுதீன் ஒவைசி

``உங்கள் வாக்கை நீங்கள் காங்கிரஸுக்கு அளித்து அதை வீணாக்காதீர்கள். காங்கிரஸ் தன் இருப்பை இழந்துவிட்டது." - அசாதுதீன் ஒவைசி

ம.பி: ``உங்கள் வாக்கை காங்கிரஸுக்கு அளித்து வீணாக்காதீர்கள்" - அசாதுதீன் ஒவைசி

``உங்கள் வாக்கை நீங்கள் காங்கிரஸுக்கு அளித்து அதை வீணாக்காதீர்கள். காங்கிரஸ் தன் இருப்பை இழந்துவிட்டது." - அசாதுதீன் ஒவைசி

Published:Updated:
அசாதுதீன் ஒவைசி

மத்தியப்பிரதேசத்தில் நடைபெறவிருக்கும் நகராட்சித் தேர்தலை முன்னிட்டு அசாதுதீன் ஒவைசி, `காங்கிரஸுக்காக உங்கள் வாக்கை வீணாக்காதீர்கள்ப் என காங்கிரஸைச் சாடியிருக்கிறார்.

மத்தியப் பிரதேசத்தில் வருகிற ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக மாநகராட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் முதன்முறையாக, அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சி போட்டியிடுகிறது. இதை முன்னிட்டு பொதுக்கூட்டமொன்றில் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய ஒவைசி, ``காங்கிரஸ் கட்சி நாட்டில் பலவீனமானதாக மாறிவிட்டது.

பாஜக - காங்கிரஸ் - இடைத்தேர்தல்
பாஜக - காங்கிரஸ் - இடைத்தேர்தல்

உங்கள் வாக்கை நீங்கள் காங்கிரஸுக்கு அளித்து அதை வீணாக்காதீர்கள். காங்கிரஸ் தன் இருப்பை இழந்துவிட்டது" என காங்கிரஸைக் கடுமையாக விமர்சித்தார். மேலும் தொடர்ந்து பேசிய ஒவைசி, ``அகில இந்திய கல்வி ஆய்வறிக்கையின்படி அனைத்துத் துறைகளிலும் முஸ்லிம்கள் பின்தங்கிய்ருக்கின்றனர். இதற்கு யார் காரணம் என்று காங்கிரஸையும் பா.ஜ.க-வையும் நான் கேட்க விரும்புகிறேன். நீங்கள் அனைவரும் அரசியல் சக்தியாக வரவில்லையென்றால் இனி இங்கு எதுவும் மாறாது" என மக்களிடையே கூறினார்.

முன்னதாக ஒவைசி, குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவுக்கு தனது கட்சி எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் வாக்களிப்பார்கள் என்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!