Published:Updated:

வெள்ளை அறிக்கையா... அப்படியென்றால்? | Doubt of Common Man

வெள்ளை அறிக்கையுடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
வெள்ளை அறிக்கையுடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

வெள்ளை அறிக்கை மக்களைத் திசை திருப்புவதற்காக தயாரிக்கப்பட்டுள்ளது என எதிர்க்கட்சி தலைவர் கூறியிருக்கிறார். ஆனால், அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தரவுகள் பற்றி நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது.

விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் ராஜன் என்ற வாசகர் "வெள்ளை அறிக்கை என்றால் என்ன?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான விடைகளை அளிக்கிறது இந்தக் கட்டுரை.

தமிழகத்தின் நிதி நெருக்கடி நிலை குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கையை சில தினங்களுக்கு முன் தாக்கல் செய்தது. வெள்ளை அறிக்கை என்னும் அரசவை வழக்கு வார்த்தை நம்மில் பலருக்கும் பரிட்சயம் இல்லை. வெள்ளை அறிக்கை மக்களைத் திசை திருப்புவதற்காக தயாரிக்கப்பட்டுள்ளது என எதிர்க்கட்சி தலைவர் கூறியிருக்கிறார். ஆனால், அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தரவுகள் பற்றி நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது. அதற்கு முன், வெள்ளை அறிக்கை என்ற வார்த்தையே நமக்குப் புதிதாகத்தான் இருக்கிறது. அதனைப் பற்றி முதலில் தெரிந்து கொள்வோமா?

Doubt of common man
Doubt of common man
யூடியூபில் வருமானம் ஈட்ட அடிப்படை விதிமுறைகள் என்னென்ன? | Doubt of Common Man

இதற்கான பதிலை அறிந்து கொள்ள ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பூர்ணலிங்கம் அவர்களிடம் பேசினோம்.

"வெள்ளை அறிக்கை என்பது ஒரு அரசு குறிப்பிட்ட விவகாரத்தைப் பற்றி முழுவதுமாக ஆராய்ந்து அனைத்து விவரங்களையும் சட்டமன்றத்தில் வெளிப்படையான அறிக்கையாகத் தாக்கல் செய்வதுதான். பிரிட்டிஷ் பாராளுமன்ற முறைப்படி முக்கியமான பிரச்னைகளுக்கு வெள்ளை அறிக்கை தயார் செய்வது வழக்கம். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 2001-ம் ஆண்டு நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. வெள்ளை அறிக்கை தாக்கல் செய்வது சுழற்சி முறையில் நடைபெறக்கூடிய சாதாரண நிகழ்வுதான். நிலவும் நெருக்கடி நிலையை மக்களுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் எடுத்துக் கூறுவதற்காகவும் மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைத் திட்டமிடவும் சட்டமன்றத்தில் விவாதிக்கவும் வெள்ளை அறிக்கை உதவும்.

பூர்ணலிங்கம்
பூர்ணலிங்கம்

நான் உள்துறை செயலாளராக இருந்த போது 1998-ல் நடைபெற்ற கோவை குண்டுவெடிப்பு குறித்து வெள்ளை அறிக்கை தயார்செய்து சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நிதித்துறை செயலாளர், அமைச்சர் தலைமையில் வெள்ளை அறிக்கை தயாரிக்கப்படும். பெரும்பாலும் அரசு வைத்திருக்கும் தரவுகள்தான் புள்ளி விவரங்களாக வெள்ளை அறிக்கையில் இடம் பெறுகின்றன. ஒரு வீட்டிற்கு எந்தெந்த வகையில் எவ்வளவு வருவாய் உள்ளது, செலவு எவ்வளவு, கடன் எவ்வளவு என்பதைத் திட்டமிடுவது போன்று நாட்டின் நிலையை விளக்குவதுதான் இந்த வெள்ளை அறிக்கையின் நோக்கம். இன்னும் அரசு எவ்வளவு கடன் வாங்கலாம், எந்தெந்த வகையில் வருவாயை உயர்த்தலாம் என வரும் நாள்களில் வெள்ளை அறிக்கையை வைத்து சட்டமன்றத்தில் விவாதம் நடத்தப்படும்.'' என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வெள்ளை அறிக்கையைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளும் பொருட்டு அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராம் அவர்களிடமும் பேசினோம், "வெள்ளை அறிக்கை அரசாங்கம் மட்டும் இன்றி எந்த அமைப்பு வேண்டுமானாலும் தயார் செய்யக்கூடிய அறிக்கை. நடந்து முடிந்த சம்பவங்களை, தற்போதைய சூழ்நிலையைச் சொல்லுவதோடு அதற்கான தீர்வுகளை, வருங்கால நடவடிக்கைகள், திட்டங்களையும் வெளிப்படுத்துவதுதான் வெள்ளை அறிக்கையின் நோக்கம். அரசாங்கத்தில் நிதி நெருக்கடி சூழல் நிலவுவதனால் நெருக்கடிக்கான காரணங்களை மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிப்பதற்காக வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

ஜெயராம்
ஜெயராம்

வெள்ளை அறிக்கை எந்தத் துறை சார்ந்து தயாரிக்கப்படுகிறதோ அந்த துறையைச் சேர்ந்த நபர்கள், நிபுணர்கள், அரசைச் சார்ந்திராத நிபுணர்கள் சேர்ந்து ஆய்வு செய்து தரவுகளைச் சரி செய்து உண்மை நிலவரத்தை அறிந்து வெள்ளை அறிக்கை தயார் செய்கின்றனர். நிலவும் பிரச்னை அல்லது நெருக்கடிக்கான தீர்வு நோக்கி நகர்வது தான் வெள்ளை அறிக்கையின் நோக்கம். சட்டமன்றத்தில் எடுக்கப்படும் அடுத்தகட்ட முடிவுகள் வெள்ளை அறிக்கையின் அடிப்படையில் எடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. பொது கணக்கு குழு (Public accounts committee ) என்று சட்டமன்றத்தில் அமைந்திருக்கும் குழு அரசாங்கத்திற்கு ஆலோசனைகள் வழங்கும். அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள எம்.எல்.ஏ-க்கள் வெள்ளை அறிக்கையின் முடிவுகளை வைத்து ஆலோசனைகள் வழங்குவர். அரசு நிச்சயம் பொது கணக்கு குழுவின் ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லாவிட்டாலும் அக்குழுவின் கருத்துகளுக்குச் சட்டமன்றத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படும். இவ்வாறு நிலவும் குழப்பங்களுக்கு நேரடியாக மக்களிடம் காரணம் தெரிவிப்பதற்கு வெள்ளை அறிக்கை உதவுகிறது."

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!

Doubt of common man
Doubt of common man
அடுத்த கட்டுரைக்கு