Published:Updated:

நீதிமன்றத் தீர்ப்புகளை நிறைவேற்றவில்லை என்றால் என்னவாகும்? | Doubt of Common man

நீதிமன்றம்

நீதிமன்றங்களின் தீர்ப்புக்கு அரசு கட்டுப்பட வேண்டும் ஆனால் சமீப காலமாக நீதிமன்றங்களின் தீர்ப்புகளை அரசு மதிப்பதில்லை என்கிற கருத்து அவ்வப்போது மக்களிடையே ஏற்படுகிறது.

Published:Updated:

நீதிமன்றத் தீர்ப்புகளை நிறைவேற்றவில்லை என்றால் என்னவாகும்? | Doubt of Common man

நீதிமன்றங்களின் தீர்ப்புக்கு அரசு கட்டுப்பட வேண்டும் ஆனால் சமீப காலமாக நீதிமன்றங்களின் தீர்ப்புகளை அரசு மதிப்பதில்லை என்கிற கருத்து அவ்வப்போது மக்களிடையே ஏற்படுகிறது.

நீதிமன்றம்
விகடனின் 'Doubt of common man' பக்கத்தில் இளவரசன் என்ற வாசகர், "நீதிமன்றங்களின் தீர்ப்புகளை அரசு மதிப்பதில்லை என்ற செய்தியை அடிக்கடி காணமுடிகிறது. இவ்வாறு அரசு செய்துகொண்டே இருந்தால் நீதிமன்றத்தால் மேற்கொண்டு எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கமுடியும்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே...
Doubt of common man
Doubt of common man

நம் நாட்டின் அரசியல் கட்டமைப்பு மொத்தம் நான்கு தூண்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றது.

1. Legislature (சட்டம் இயற்றுபவர்கள்)

2. Executive (அரசு நிர்வாகிகள்- செயல்படுத்துபவர்கள்)

3. Judiciary (நீதித்துறை)

4. Press (பத்திரிகைத் துறை)

முதல் தூணாகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டங்களை உருவாக்குகிறார்கள். அவர்கள் உருவாக்கிய சட்டங்களை இரண்டாவது தூணாக இருக்கும் அரசு நிர்வாகிகள் அமல்படுத்துகிறார்கள். அதாவது, மக்களிடம் கொண்டு போய் சேர்க்கிறார்கள்‌. இவ்வாறு சட்டங்களை உருவாக்கும் போதும் அவற்றை அமல்படுத்தும் போதும் ஏற்படுகின்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது 3-வது தூணான நீதித்துறையின் வேலை. குறிப்பாக, அரசியலமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டிருக்கும் படி தீர்வு காண்பது நீதிமன்றத்தின் கடமையாகும். ஆக நீதிமன்றங்களின் தீர்ப்புக்கு அரசு கட்டுப்பட வேண்டும் ஆனால் சமீப காலமாக நீதிமன்றங்களின் தீர்ப்புகளை அரசு மதிப்பதில்லை என்கிற கருத்தை அவ்வப்போது மக்களிடையே ஏற்படுகிறது. இவ்வாறு அரசு தொடர்ந்து செய்துகொண்டே இருந்தால் நீதிமன்றத்தால் மேற்கொண்டு எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க முடியும்?

மெட்ராஸ் உயர்நீதிமன்றம்
மெட்ராஸ் உயர்நீதிமன்றம்

இந்த கேள்விக்கான பதிலைத் தெரிந்து கொள்ள வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தனிடம் பேசினோம். அவர் கூறியதாவது "நீதிமன்றங்கள் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டே உத்தரவுகளைப் பிறப்பிக்கின்றன. எனவே அரசு அதைத் தவறாமல் நிறைவேற்ற வேண்டும். நீதிமன்றம் ஒரு குறிப்பிட்ட துறையிடம் ஒரு கோரிக்கையை நிறைவேற்றுமாறு உத்தரவு பிறப்பிக்கும். அந்த குறிப்பிட்ட துறையைச் சார்ந்த அரசு அதிகாரிகள் அதை நிறைவேற்ற வேண்டும். ஆனால் தற்போது பெரும்பாலான நீதிமன்றத்தின் தீர்ப்புகள் நிறைவேற்றப்படுவதில்லை. காரணம், அரசு செயல்பாடுகளில் (எடுத்துக்காட்டாக அரசுத் திட்டங்கள், பாலிசி மேட்டர்ஸ்) சம்பந்தப்பட்ட தீர்ப்புகளில் அரசு அதிகாரிகள் ஆளும் கட்சிக்குச் சாதகமாகச் செயல்பட்டுத் தட்டிக் கழிக்கிறார்கள் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

நீதிமன்றம்
நீதிமன்றம்

இவ்வாறு நீதிமன்றத்தின் தீர்ப்புகளைக் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அரசு அதிகாரிகள் நிறைவேற்றத் தவறினால், அதை நிறைவேற்றத் தவறிய அரசு அதிகாரி (தனிநபர்) மேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு (Contempt of the court) தாக்கல் செய்ய முடியும். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யும் முன் அந்த குறிப்பிட்ட அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பிவிட்டு வழக்கு தாக்கல் செய்ய வேண்டும். சமீபத்தில் TNPSC Selection Procedure Recruitment எப்படி இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஒரு வழிகாட்டுதலைக் கூறியிருந்தது. அதை அமல்படுத்தவில்லை என்று கூறி அப்போதைய தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் சிலர் மேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அவர்களுக்கு unconditional apology கொடுத்து உத்தரவைச் செயல்படுத்துமாறு கூறியது" என்று விளக்கினார்.

யார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்?

எந்த வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அரசு கட்டுப்படவில்லையோ அந்த வழக்கைத் தொடுத்த மனுதாரரே, தீர்ப்பை நிறைவேற்றத் தவறிய குறிப்பிட்ட அரசு அதிகாரி மேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தாக்கல் செய்யலாம். உதாரணத்திற்கு, எனக்குச் சொந்தமான நிலத்தை ஒரு அரசியல்வாதியோ அரசு அதிகாரியோ ஆக்கிரமிப்பு செய்ததாக நான் வழக்கு தொடர்கிறேன். நீதிமன்றம் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி அரசுத் துறைக்கு உத்தரவிடுகிறது. குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அந்த அரசு அதிகாரி உத்தரவை நிறைவேற்றவில்லை எனில் அவர் மேல் நான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியும் என்றார்.

மேலும், நீதிமன்றங்களின் தீர்ப்புகளை நிறைவேற்றாமல் அவமதிக்கும் அரசு அதிகாரிகளுக்குக் குறைந்த பட்ச தண்டனையாவது வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் 'நீதிமன்றங்களின் தீர்ப்புகள் மதிக்கப்படும்' " என்றார்

இதேமாதிரி உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!

Doubt of common man
Doubt of common man