Published:Updated:

பாமக: ``என்ன தவம் செய்தேனோ..." - பிறந்தநாளில் கவிதை வாசித்து தேம்பித் தேம்பி அழுத ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ்

தனது சொந்த ஊரில் 84-வது பிறந்தாளைக் கொண்டாடிய ராமதாஸ், தன்னுடைய தாய்க்காகக் கவிதை ஒன்றை வாசித்தபடி கண்ணீர் வடித்தார்.

பாமக: ``என்ன தவம் செய்தேனோ..." - பிறந்தநாளில் கவிதை வாசித்து தேம்பித் தேம்பி அழுத ராமதாஸ்

தனது சொந்த ஊரில் 84-வது பிறந்தாளைக் கொண்டாடிய ராமதாஸ், தன்னுடைய தாய்க்காகக் கவிதை ஒன்றை வாசித்தபடி கண்ணீர் வடித்தார்.

Published:Updated:
பாமக நிறுவனர் ராமதாஸ்

`தைலாபுரம் தோட்டத்துக்காரர்’ என்றாலே பலருக்கும் தெரிந்துவிடும், யாரை நாம் குறிப்பிடுகிறோம் என்று. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள தைலாபுரம் மற்றும் திண்டிவனம் பகுதியில் தங்கி வசித்துவரும் முக்கிய அரசியல் தலைவர் மருத்துவர் ராமதாஸ். பா.ம.க நிறுவனரான அவருக்குச் சொந்த ஊர், மரக்காணம் அருகேயுள்ள கீழ்சிவிரி. நேற்று (25.07.2022) தனது 84-வது வயதில் அடியெடுத்துவைத்திருக்கும் ராமதாஸ், தனது சொந்த ஊரான கீழ்சிவிரிக்குச் சென்று, தொண்டர்கள், உறவினர்கள், ஊர் மக்கள் முன்னிலையில் தனது பிறந்தநாளைக் கொண்டாடி மகிழ்ந்தார். நீண்ட நாள்களுக்குப் பிறகு தன் சொந்த கிராமத்தில் இவ்வாறு பிறந்தநாள் கொண்டாடுகிறாராம் அவர்.

பிரமாண்டமான வரவேற்பு, தொண்டர்கள் மத்தியில் ராமதாஸ்
பிரமாண்டமான வரவேற்பு, தொண்டர்கள் மத்தியில் ராமதாஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தைலாபுரம் தோட்டத்திலிருந்து காலையில் புறப்பட்டவர், வழி நெடுகிலும் தொண்டர்களைச் சந்தித்து கட்சிக்கொடியை ஏற்றிவைத்தபடி கீழ்சிவிரியை வந்தடைந்தார். அப்போது, அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஊரின் நடுவே அமைக்கப்பட்டிருந்த பா.ம.க கொடிக்கம்பத்தில் கொடியேற்றி, மரக்கன்று நட்டவர்... தனது பூர்வீக நினைவு இல்லத்துக்குச் சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த தன்னுடைய தாய், தந்தையரின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய நிலையில், திடீரென கண்கலங்கியபடி அமர்ந்துகொண்டார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அங்கிருந்து புறப்பட்டு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பகுதியை வந்தடைந்த மருத்துவர் ராமதாஸ், "என்ன தவம் செய்தேனோ, இம்மண்ணில் நான் பிறக்க... ஏது தவம் செய்தேனோ, இன்று உங்களோடு நான் இருக்க..." "முந்தி தவமிருந்து, முந்நூறு நாள் சுமந்து, என்னை ஈன்றெடுத்த தாயே... எனக்கொரு வரம் தருவாய்... எழு பிறப்பும் உன் வயிற்றில் யான் பிறக்க, அருள்புரிவாய்" எனும் கவிதையை வாசித்தபடி மேடையிலேயே கண்ணீர் சிந்தி தேம்பித் தேம்பி அழுதார். அந்தத் தருணத்தில், அப்பகுதியே அமைதியாகிப்போனது.

கண்கலங்கிய ராமதாஸ்
கண்கலங்கிய ராமதாஸ்

இறுதியாக தனது சிறு வயது அனுபவங்களை நினைவுகூர்ந்து பேசிய அவர், "இன்று நான் 84-வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறேன். இனிவரும் காலங்களில் என்னால் நடக்க முடியவில்லையென்றாலும்... அந்தக் காலத்திலும், கோலூன்றியாவது இந்த ஊமை ஜனங்களுக்காக நான் பாடுபடுவேன் என உறுதி கூறுகிறேன்" என்றார். நிகழ்ச்சியின் இறுதியாக, குழந்தைகள், பெரியவர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தபடி அங்கிருந்து புறப்பட்டார்.