Published:Updated:

சென்னையில் திரௌபதி முர்மு: அதிமுக முதல் தேமுதிக வரை... நிகழ்ச்சியில் நடந்த சுவாரஸ்யங்கள்

திரெளபதி முர்மு

``அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஆகிய நான், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், அமைப்புச் செயலாளர் மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர்” என்று குறிப்பிட்டுப் பேசி இன்னமும் நாங்கள், பொறுப்பில்தான் இருக்கிறோம் என்பதைத் தெளிவுப்படுத்தினார் ஓ.பி.எஸ்.

சென்னையில் திரௌபதி முர்மு: அதிமுக முதல் தேமுதிக வரை... நிகழ்ச்சியில் நடந்த சுவாரஸ்யங்கள்

``அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஆகிய நான், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், அமைப்புச் செயலாளர் மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர்” என்று குறிப்பிட்டுப் பேசி இன்னமும் நாங்கள், பொறுப்பில்தான் இருக்கிறோம் என்பதைத் தெளிவுப்படுத்தினார் ஓ.பி.எஸ்.

Published:Updated:
திரெளபதி முர்மு

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஒவ்வொரு மாநிலமாக பா.ஜ.க மற்றும் கூட்டணிக் கட்சியினரிடையே தனக்கான ஆதரவைத் திரட்டிவருகிறார். அந்த வகையில் புதுச்சேரியிலிருந்து தமிழ்நாடு வந்தவருக்கான நிகழ்வு 2.07.2022 அன்று சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் அதிமுக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதிகட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கூட்டணிக் கட்சிகள் பங்கேற்றன. அதிமுக-வுக்குள் உட்கட்சிப்பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ள இந்தச் சூழலில் திரௌபதி முர்மு ஆதரவு கோரும் இந்த நிகழ்ச்சி மேடையில் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் இருவரும் கலந்துகொள்வார்கள், இருவரும் நேரடியாகச் சந்தித்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்தச் சந்திப்பு நடைபெறவில்லை. ஐந்து கட்ட நிகழ்வாக நடந்த இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க இ.பி.எஸ் அணி முதலில் ஆதரவளித்து மேடை ஏறினர். அடுத்து பா.ம.க., அதற்கடுத்து அதிமுக ஓ.பி.எஸ் அணி, அதைட் தொடர்ந்து தே.மு.தி.க மற்றும் அனைத்துக் கூட்டணிக் கட்சிகளும் மேடை ஏறி ஒவ்வொருவராக ஆதரவு தெரிவித்தனர். இறுதியில் பா.ஜ.க நிர்வாகிகள் தஙகள் ஆதரவையும், வாழ்த்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.

திரௌபதி முர்மு, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், காந்தி, சரஸ்வதி
திரௌபதி முர்மு, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், காந்தி, சரஸ்வதி

இந்த நிகழ்வில் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெலங்கானா தேசிய செயற்குழுக் கூட்டத்தில் இருந்ததால், கலந்துகொள்ளவில்லை என முதலில் தகவல்கள் கிடைத்தன. அதன் பிறகு தங்களது கட்சியிலிருந்து தேர்வு செய்யப்பட்டவருக்கான நிகழ்வை ஒருங்கிணைக்கும்போது தமிழ் மாநில பா.ஜ.க தலைவர் கலந்துகொள்ளவில்லையென்றால் நன்றாக இருக்காது என்று அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார். புதுச்சேரியிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்திருந்தார் திரௌபதி முர்மு. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மொழிபெயர்ப்பாளராகவும், கூட்டணிக் கட்சியினரை அறிமுகம் செய்பவராகவும் இருந்தார். மத்திய அமைச்சர் முரளிதரன் ஒவ்வொரு எம்.எல்.ஏ., எம்.பி எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது பற்றி விளக்கினார். பா.ஜ.க மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்து, தொகுத்து வழங்க, தமிழ்நாட்டு பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் நால்வரும் கலந்துகொண்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதிமுக நிர்வாகிகள்
அதிமுக நிர்வாகிகள்

பா.ஜ.க ஏற்பாடு செய்ந்திருந்த இந்த நிகழ்வில் இ.பி.எஸ் ஆதரவு கட்சி நிர்வாகிகள் 63 பேர் கலந்துகொண்டனர். முதல் அமர்வில் மேடையேறிய இ.பி.எஸ்., “இந்திய நாட்டை வல்லரசு நாடாக்க உருவாக்க பாடுபட்டுக்கொண்டிருக்கும் பாரத பிரதமர் மோடி அவர்களால் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் திரௌபதி முர்மு அவர்களுக்கு கழகத்தின் சார்பாக ஆதரவு அளிக்கிறோம். வாயளவிலும், ஏட்டளவிலும் மத ஒற்றுமை பற்றி பேசிக்கொண்டிருக்கிற எதிர்க்கட்சிகளின் உண்மைநிலையை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களை தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அறிவித்தபோது, அதை முழு மனதோடு ஆதரித்து அவரை வெற்றிபெறவைக்க முதன்மையானவராக இருந்தவர் புரட்சித்தலைவி அம்மா.

திரெளபதி முர்மு
திரெளபதி முர்மு

அதேபோல் 2012-ம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மேகாலய மாநில முதல்வர், மத்திய அமைச்சர், மக்களவை சபாநாயகர் என்று பல்வேறு பொறுப்புகளைத் திறம்பட வகித்த சங்மா அவர்களை, மாண்புமிகு அம்மா அவர்கள், பா.ஜ.க., தெலுங்கு தேசம் கட்சி உட்பட பலர் ஆதரித்தனர். இருப்பினும் உதட்டளவில் பழங்குடியினர் நலன், சமூக நலன் பற்றிப் பேசும் காங்கிரஸ், தி.மு.க போன்ற எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சியால் அவரால் அந்தத் தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஏழை எளிய மக்களின் நலனுக்காகத் தனது வாழ்நாளை அர்ப்பணித்த திரௌபதி முர்மு அவர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் வேட்பாளராக அறிவித்ததன் மூலம், ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்குப் பிரகு அம்மா அவர்களின் கனவு நிறைவேறுகிறது. சிறந்த நிர்வாகத் திறமைகொண்ட திரௌபதி முர்மு நாட்டின் சிறந்த குடியரசுத் தலைவராக இருப்பார். தினம்தோறும் மூச்சுக்கு முந்நூறு தடவை திராவிட மாடல் என்று பேசிக்கொண்டிருக்கும் ஸ்டாலின் அவர்கள், முதன்முறையாக சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த நம் நாட்டின் பூர்வகுடி இனமான பழங்குடி இனத்தைச் சேர்ந்த முதல் பெண் வேட்பாளர், இந்திய நாட்டின் உயரிய பொறுப்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாரதப் பிரதமர் அறிவித்துள்ள நிலையில்,

திரௌபதி முர்மு
திரௌபதி முர்மு

அவரை ஸ்டாலின் ஆதரிக்காமல் திராவிட மாடல், சமூகநீதி என்று சொல்லி மக்களை ஏமாற்றிவருகிறார். ஆனால், மக்கள் நலனை மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு தமது வாழ்நாளை அர்ப்பணித்து தவ வாழ்வு வாழ்ந்து சமூகநீதி காத்த அம்மா அவர்கள் வழியில் வந்த நாங்கள், தேசிய ஜனநாயகக் கட்சி சார்பில் இந்தியக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக போட்டியிடும் திரௌபதி முர்மு அவர்களுக்கு அ.தி.மு.க நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் முழு ஆதரவளித்து வெற்றிபெற வைப்போம் என்று தெரிவித்துக்கொள்கிறோம்” என்று எடப்பாடி பேசிய பிறகு திரௌபதி முர்மு பேசினார்.

தமிழ் மொழியின் தொன்மை, தமிழகத்துக்கான விளையாட்டுகள், கோயில்கள், ஓவியங்கள், சிற்பங்களின் சிறப்புகள் பற்றிப் பேசியவர், திருவள்ளுவர், சுதந்திரப் போராட்ட வீரர்கள், பாரதியார் குறித்துப் பேசியதோடு, சி.ராஜகோபாலச்சாரியார், காமராஜர், எம்.ஜி.ஆர்., அப்துல் கலாம், ஜெயலலிதா போன்ற தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுப் பேசினார். பின் `யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற கணியன் பூங்குன்றனாரின் சொல்லை மேற்கோள்காட்டியவர், சுதந்திரப் போராட்டத்தில் 18-ம் நூற்றாண்டில் பூலித்தேவரின் செயல்பாடுகள், 1857-ல் நடந்த வேலூர் புரட்சி, 1929-ல் ஒத்துழையாமை இயக்கம் போன்று இந்திய சுதந்திரத்தில் தமிழ்நாட்டின் பங்கை நினைவுகூர்ந்தவர், சேர, சோழ, பாண்டிய, பல்லவ அரசுகள் பற்றிப் பெருமைப்படப் பேசினார்.

திரௌபதி முர்மு, பா.ம.க நிவாகிகள்
திரௌபதி முர்மு, பா.ம.க நிவாகிகள்

தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், சுந்தர் பிச்சை போன்றோர் இந்தியாவின் அடையாளமாக இருக்கிறார்கள் என்பதைத் தெரிவித்த திரௌபதி முர்மு, தமிழ்நாடு வரலாற்றுச் சிறப்புமிக்க சிறந்த சுற்றுலாத் தலங்களைக்கொண்டிருக்கிறது என்றார்.

இதையடுத்து பா.ம.க சார்பில் ஆதரவு தெரிவித்துப் பேசிய அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், ``இந்தியாவிலேயே முதன்முதலில் பழங்குடி இனத்தைச் சார்ந்த மரியாதைக்குரிய மாண்புமிகு திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்தவுடன் அவர்களுக்கு முதன்முதலில் ஆதரவு அளித்தது பாட்டாளி மக்கள் கட்சி. பழங்குடி இனத்தைச் சார்ந்த எளிய குடும்பத்தில் பிறந்த ஆற்றல்மிக்க வேட்பாளர் நிச்சயம் வெற்றி பெறுவார். பாட்டாளி மக்கள் கட்சியின் சமூகநீதி அடிப்படையில் எங்கள் முழு ஆதரவு அவருக்கு உண்டு” என்று தெரிவித்தார்.

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

அன்புமணி மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போதே அரங்குக்குள் வந்தார் ஓ.பி.எஸ். பாமக-வினர் மேடையிலிருந்து கீழே இறங்கியதும் ஓ.பி.எஸ் அணியின மேடை ஏறி வாழ்த்து தெரிவித்தனர். பின் ஆங்கிலத்தில் உறையாற்றிய ஓ.பி.எஸ்., ``முதன்முறையாகப் பழங்குடிப் பெண் உயர்பதவிக்கு வருகிறார். புரட்சித்தலைவி அம்மா தன் வாழ்வை ஏழை எளிய மக்களுக்காகத் தியாகம் செய்து, மற்ற பெண்களுக்கு முன்னுதாரணமாக இருந்தார்.

திரௌபதி முர்மு, ஓ.பி.எஸ், அண்ணாமலை, எல்.முருகன்
திரௌபதி முர்மு, ஓ.பி.எஸ், அண்ணாமலை, எல்.முருகன்

அதேபோல் முர்மு-வின் சாதனைகளும் பற்பல. அதிமுக உங்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும். முன்கூட்டியே வாழ்த்து தெரிவிக்கிறேன்” என்று பேசிய ஓ.பி.எஸ்.,

“அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஆகிய நான், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், அமைப்புச் செயலாளர் மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர்” என்று குறிப்பிட்டுப் பேசி இன்னமும் `நாங்கள், அதிமுக-வின் பொறுப்பில்தான் இருக்கிறோம்’ என்பதைத் தெளிவுப்படுத்தினார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியினர்
தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியினர்

தொடர்ந்து தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த், சுதிஷ், தமிழ் மாநில காங்கிரஸ் ஜி.கே.வாசன், புதிய தமிழகம் டாக்டர்.கிருஷ்ணசாமி, புதியநீதிக் கட்சி ஏ.சி.சண்முகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஜான்பாண்டியன் மற்றும் தேவநாதன் யாதவ், தனபால் ஆகியோர் ஒன்றாக மேடையில் அமர்ந்து வாழ்த்தையும் தங்களது ஆதரவையும் தெரிவித்தனர். இறுதியில் வந்திருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்து பேசிய பாஜக மகளிரணியின் தேசியத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், ``நாங்கள்தான் சமூகநீதி கண்டுபிடித்தோம் என்று சொல்லக்கூடிய திமுக, திரௌபதி முர்முவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்” என்று கூறி முடித்தார்.