Published:Updated:

Live: குடியரசுத் தலைவரானார் திரௌபதி முர்மு! - வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு

திரௌபதி முர்மு
Live Update
திரௌபதி முர்மு

இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்பதற்கான விடை இன்று தெரிந்துவிடும். கடந்த 18-ம் தேதி பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட உள்ளன... அது தொடர்பான செய்திகளின் தொகுப்பு!

21 Jul 2022 9 PM

குடியரசுத் தலைவரானார் திரௌபதி முர்மு! - வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு

திரௌபதி முர்மு
திரௌபதி முர்மு

பா.ஜ.க கூட்டணியின் வேட்பாளர் திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். இதன் மூலம் இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவராகியிருக்கிறார் திரௌபதி முர்மு.

அவருக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர்.

21 Jul 2022 8 PM
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முர்மு முன்னிலை... பிரதமர் மோடி நேரில் சந்தித்து வாழ்த்து!

திரெளபதி முர்மு, நரேந்திர மோடி
திரெளபதி முர்மு, நரேந்திர மோடி
கோப்புப் படம்

குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவராகப் பதவியேற்கவிருக்கும் அவரை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்தினார்.

21 Jul 2022 8 PM

குடியரசுத் தலைவராகிறார் திரெளபதி முர்மு!

திரௌபதி முர்மு
திரௌபதி முர்மு

குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மூன்றாவது சுற்றின் முடிவில், 70 சதவிகித வாக்குகளைப் பெற்று பா.ஜ.க கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.

50% வாக்குகளைக் கடந்ததால் இந்தியாவின் முதல் பழங்குடியினப் பெண் குடியரசுத் தலைவராகிறார் திரெளபதி முர்மு!

21 Jul 2022 3 PM

எம்.பி-க்களின் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் முர்மு முன்னிலை!

திரௌபதி முர்மு
திரௌபதி முர்மு

குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 11 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. தற்போது வரை எம்.பி-க்களின் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி. பாஜக கூட்டணி வேட்பாளரான திரெளபதி முர்முவுக்கு 3,78,000 வாக்கு மதிப்புகளும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான யஷ்வந்த சின்ஹாவுக்கு ஆதரவாக 1,45,600 வாக்கு மதிப்புகளும் கிடைத்திருக்கிறது. அதன்படி தற்போது முர்மு அபார முன்னிலையில் இருக்கிறார்.

21 Jul 2022 11 AM

தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!

குடியரசுத் தலைவர் மாளிகை
குடியரசுத் தலைவர் மாளிகை

இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்பது இன்று தெரிந்துவிடும். கடந்த 18-ம் தேதி பதிவான வாக்குகள் இன்று காலை 11 மணி முதல் எண்ணப்படுகிறது. மொத்த எம்.பி. எம்.எல்.ஏ-க்கள் வாக்குகளின் மதிப்பில் 50%-க்கும் அதிகமாக பெறும் வேட்பாளர் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்படுவார்.

21 Jul 2022 7 AM

இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவர் யார்?!

இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருக்கும் ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக்காலம் இம்மாதத்துடன் நிறைவடைகிறது. இதனால் புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டார். ஆளும் பாஜக கூட்டணியின் வேட்பாளராக திரெளபதி முர்மு அறிவிக்கப்பட்டார். இவர்கள் இருவரும் கடந்த சில நாள்களாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு கட்சித் தலைமைகளை சந்தித்து, அவர்களிடம் ஆதரவு கோரினர்.

குடியரசுத் தலைவர் தேர்தல் | யஷ்வந்த் சின்ஹா, திரௌபதி முர்மு
குடியரசுத் தலைவர் தேர்தல் | யஷ்வந்த் சின்ஹா, திரௌபதி முர்மு

இந்த நிலையில் கடந்த 18 -ம் தேதி நாடு முழுவதும், குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்து முடிந்தது. நாடாளுமன்றத்திலும், மாநில சட்டப்பேரவையிலும் எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் தங்களின் வாக்குகளை செலுத்தினர்.

வாக்குச்சீட்டுகள் வாக்குப்பெட்டியில் சீலிடப்பட்டு டெல்லிக்கு கொண்டு செல்லப்ப்ட்டது. இன்று காலை இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளது. ஒவ்வொரு மாநில எம்.எல்.ஏ-க்களுக்கும் தங்கள் வாக்குகளின் மதிப்பு மாறுப்படும். அது மாநில மக்கள் தொகை அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது. அதன்படி வாக்கு மதிப்புகள் கூட்டப்பட்டு இறுதியில் அதிக வாக்கு மதிப்புகள் பெறும் வேட்பாளர் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்படுவார்.!