Published:Updated:

கி.வீரமணி ஸ்டேட்மென்ட்டுஸ்!

கி.வீரமணி
பிரீமியம் ஸ்டோரி
கி.வீரமணி

தேசியக் கல்விக் கொள்கை - 2020 தெரிவிப்பதைத்தான் அப்படியே நடைமுறைப்படுத்துவதாக இந்த ‘இல்லம் தேடி வரும் கல்வித் திட்டம்’ அமைந்திருக்கிறது.

கி.வீரமணி ஸ்டேட்மென்ட்டுஸ்!

தேசியக் கல்விக் கொள்கை - 2020 தெரிவிப்பதைத்தான் அப்படியே நடைமுறைப்படுத்துவதாக இந்த ‘இல்லம் தேடி வரும் கல்வித் திட்டம்’ அமைந்திருக்கிறது.

Published:Updated:
கி.வீரமணி
பிரீமியம் ஸ்டோரி
கி.வீரமணி

ஆளும் அரசின் மீது எதிர்க்கட்சிகள் விமர்சனம்வைப்பது வழக்கம்தான். ஆனால், சமீபத்தில் கூட்டணிக் கட்சிகளிடமே பல விமர்சனங்கள் எழுந்த வண்ணமிருக்கின்றன. அந்தவகையில், தி.மு.க-வின் தாய்க் கழகமான ‘திராவிடர் கழகத்தின்’ தலைவர் கி.வீரமணி தி.மு.க அரசுக்கு எதிராக, சமீபத்தில் விடுத்த ஸ்டேட்மென்ட்டுகள் இவை!

கி.வீரமணி ஸ்டேட்மென்ட்டுஸ்!

“இந்த அரசு, அளவுக்கு அதிகமாக `ஆன்மிகம்... ஆன்மிகம்...’ என்று தம்பட்டம் அடிக்க வேண்டுமா?”

``மனிதர்களைத் தூக்கிச் சுமப்பதற்கு ஒரு விசித்திரமான புதிய வாதம் முன்வைக்கப்படுகிறது. தூக்குபவர்களே விரும்பி வந்துதான் தூக்கிச் சுமக்க முன்வருகிறார்களாம். இது அறிவுபூர்வமாகவோ, சட்டபூர்வமாகவோ ஏற்கத்தக்கதா... கைரிக்‌ஷாவை இழுத்தவர்கள் அவர்களாகவே விரும்பித்தான் ஓட்டுகிறோம் என்று கூறி, இன்று இழுத்தால் சட்டம் அனுமதிக்குமா... பெண் குழந்தைகளைக் கள்ளிப்பால் தந்து குடும்பத்தினர், ஏன் தாயுமே அழிக்க முன்வந்தால், சட்டமும் அரசும் அனுமதிக்குமா... மனித உரிமை மலிவான விலைச் சரக்கா... இந்த அரசு சிலரை திருப்தி செய்வதற்காக அளவுக்கு அதிகமாக `ஆன்மிகம், ஆன்மிகம்’ என்று தம்பட்டம் அடிக்க வேண்டுமா?’’

கி.வீரமணி ஸ்டேட்மென்ட்டுஸ்!

“வெறுப்புப் பிரசார விதை ஊன்ற அனுமதிக்கலாமா?”

(கோவை, சின்னமனூர், வடலூர் பள்ளி மைதானங்களில்) ``யோகா பயிற்சி என்ற போர்வையில், ஆர்.எஸ்.எஸ்-ஸின் ஷாகா பயிற்சி மதக் கலவரம், வெறுப்புப் பிரசார விதை ஊன்ற அனுமதிக்கலாமா... தமிழ்நாடு முதலமைச்சர்களாக இருந்த கலைஞர் அவர்களும் சரி, எம்.ஜி.ஆர் அவர்களும் சரி, ‘ஷாகா’ பயிற்சியை அனுமதிக்க முடியாது என்று பகிரங்கமாக அறிவித்ததை இந்த நேரத்தில் தமிழ்நாடு அரசுக்கு நினைவூட்டுகிறோம்!’’

“ஏன் இரட்டை அணுகுமுறை?”

``கோவையில் ஷாகா பயிற்சியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தச் சென்ற பெரியார் திராவிடர் கழகத்தினரைத் தடுத்து நிறுத்தி, குண்டுக்கட்டாகத் தூக்கி, வாகனத்தில் ஏற்றி, ரிமாண்ட் செய்ய ஆயத்தமானார்கள் தமிழ்நாடு காவல்துறையினர். அதேசமயம், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் சுப.வீரபாண்டியன், ஓவியா கலந்துகொண்டு உரையாற்றியதை எதிர்த்து, வாய்த்துடுக்குப் பேர்வழி ஹெச்.ராஜா 300 பேருடன் பல்கலைக்கழக வாசலிலேயே மேடை போட்டு ஆர்ப்பாட்டம் நடத்த, காவல்துறை அனுமதி கொடுத்தது. ஒரு தரப்புக்கு கைது நடவடிக்கை... மற்றொரு தரப்புக்குச் சிவப்புக் கம்பளம்... இது என்ன இரட்டை அணுகுமுறை?’’

கி.வீரமணி ஸ்டேட்மென்ட்டுஸ்!

“தேசியக் கல்விக் கொள்கைக்கு தமிழ்நாடு கல்வித்துறை தலையாட்டலாமா?”

``தேசியக் கல்விக் கொள்கை - 2020 தெரிவிப்பதைத்தான் அப்படியே நடைமுறைப்படுத்துவதாக இந்த ‘இல்லம் தேடி வரும் கல்வித் திட்டம்’ அமைந்திருக்கிறது. இது ஆர்.எஸ்.எஸ் பாராட்டும் அதன் கல்விக் கொள்கையின் நுழைவே ஆகும். இது சர்க்கரைப் பூச்சுள்ள விஷ உருண்டை என்று கூறி முன்பே எதிர்த்தோம். இதற்குத் தமிழ்நாடு கல்வித்துறை தலையாட்டலாமா?”

கி.வீரமணி ஸ்டேட்மென்ட்டுஸ்!

“மதச் சார்பற்றவர்கள் மனதில் புண்ணை ஏற்படுத்தலாமா?”

(இந்து சமய அறநிலையத்துறை சார்பாக, சிவராத்திரி விழா கொண்டாடும் அறிவிப்பு வெளியானபோது) ``இந்து அறநிலையத்துறை, அதன் அதிகாரிகள், அமைச்சர் போன்றவர்களின் பணி என்பது, பூஜை புனஸ்காரங்களில் ஈடுபடுவதோ செயல்படுவதோ அல்ல. கோயில் சொத்து, வரவு - செலவுகளைக் கண்காணிப்பதும், சரிபார்ப்பதும், நிர்வகிப்பதும் மட்டும்தான். இந்து அறநிலையத்துறை அதற்குரிய பணிகளை மட்டும் செய்யட்டும் என்பதே நமது வேண்டுகோள். விதிகளை மீறி பகுத்தறிவாளர்கள், மதச் சார்பற்றவர்களின் மனதில் புண்ணை ஏற்படுத்தலாமா?”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism