Published:Updated:

`கோமியம் குடித்துவிட்டு தயாராக இருங்கள்; இன்று பேசுகிறேன்' - பாஜக-வுக்கு மஹுவா மொய்த்ரா சவால்

மஹுவா மொய்த்ரா

`கோமியம் குடித்துவிட்டு தயாராக இருங்கள்’ என்று பாஜகவினருக்கு ட்விட்டர் வாயிலாக சவால் விடுத்திருக்கிரார் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா.

நாடாளுமன்ற கூட்டத்தில் எப்போது பேசினாலும், தேசிய அளவில் கவனம் ஈர்த்து விடுவார் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி மஹுவா மொய்த்ரா. பிரதமர் மோடியின் அரசாங்கத்தையும், அதன் கொள்கைகளைத் தொடர்ந்து எதிர்த்து பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார். நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடந்து வருகிறது. இந்த நிலையில், பா.ஜ.க.வினருக்கு ட்விட்டர் மூலம் சவால் விடுத்திருக்கிறார் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.மஹுவா மொய்த்ரா.

இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, ``இன்று மாலை நான் மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீதான தீர்மானத்தின் போது பேச இருக்கிறேன். கற்பனைக் கதைகளைக் கூறும், பாஜகவினரே உங்களுடைய படையைத் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். கோமியமும் குடித்துவிட்டு தயாராக இருங்கள்" என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.