Published:Updated:

`ஜனநாயகத்தின் மகத்துவம்’ - இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார் திரெளபதி முர்மு

திரௌபதி முர்மு ( ட்விட்டர் )

இந்தியாவின் 15-வது குடியரசு தலைவராக திரௌபதி முர்மு இன்று பதவியேற்றார்.

`ஜனநாயகத்தின் மகத்துவம்’ - இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார் திரெளபதி முர்மு

இந்தியாவின் 15-வது குடியரசு தலைவராக திரௌபதி முர்மு இன்று பதவியேற்றார்.

Published:Updated:
திரௌபதி முர்மு ( ட்விட்டர் )

பா.ஜ.க கூட்டணியின் வேட்பாளர் திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் தேர்தலில் பெருவாரியான வாக்கு மதிப்புகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவராகியிருக்கிறார். இந்த வெற்றியின் மூலம், `இந்தியாவின் முதல் பழங்குடியினத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவர்’ என்ற புகழையும் அடைந்திருக்கிறார்.

திரெளபதி முர்மு
திரெளபதி முர்மு
திரெளபதி முர்மு

இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு இன்று பதவியேற்றார். தலைமை நீதிபதி ரமணா, திரெளபதி முர்முவுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இந்தப் பதவியேற்புவிழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, பிரதமர் மோடி, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவியேற்பதற்கு முன்னதாக டெல்லியில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் திரௌபதி முர்மு மரியாதை செலுத்தினார். குடியரசுத் தலைவராக பதவி ஏற்றிருக்கும் இவருக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். நாட்டின் 2-வது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பதவியேற்ற பிறகு பேசிய அவர், ``நாட்டின் முதல் பழங்குடி இன குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி. நாட்டு மக்களின் வளமான எதிர்காலத்துக்காகப் பணியாற்றுவேன். குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்றது பெருமை அளிக்கிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றது பெருமைக்குரியது. அனைத்து இந்தியர்களின் எதிர்பார்ப்புகள், அபிலாஷைகள் மற்றும் உரிமைகளின் சின்னமான நாடாளுமன்றத்தில் நின்று உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் புதிய பொறுப்பை நிறைவேற்ற உங்கள் நம்பிக்கையும் ஆதரவும் எனக்குப் பெரும் பலமாக இருக்கும். சாதாரண கவுன்சிலராகத் தொடங்கி இந்தியாவின் குடியரசுத் தலைவராக உயர்ந்தது ஜனநாயகத்தின் மகத்துவம்.

`ஜனநாயகத்தின் மகத்துவம்’ - இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார் திரெளபதி முர்மு

ஏழை வீட்டில் மகளாகப் பிறந்த நான், நாட்டின் குடியரசுத் தலைவர் ஆக முடியும் என்பதுதான் ஜனநாயகத்தின் சக்தி. பெண்கள் மற்றும் இளைஞர்கள் நலனில் தனிக் கவனம் செலுத்துவேன். என்னுடைய உயர்வு கோடிக்கணக்கான பெண்களின் கனவுகளுக்கான திறவுகோலாக இருக்கும். இந்த நேரத்தில் என்னைத் தேர்ந்தெடுத்த எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கொரோனா காலகட்டத்தில் உலகத்துக்கே இந்தியா பெரும் நம்பிக்கையாகத் திகழ்ந்தது. சுதந்திரப் போராட்டத்தில் பழங்குடியின மக்கள் முக்கியப் பங்காற்றியிருக்கிறார்கள். அனைத்துத் தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து, பாரதத்தைக் கட்டி எழுப்ப முனைப்புடன் செயல்படுவோம். நாட்டு மக்களின் வளமான எதிர்காலத்துக்காகப் பணியாற்றுவேன். அடுத்த 25 ஆண்டுக்கான தொலைநோக்குத் திட்டம் தயாராகும் நேரத்தில் இவ்வாறு சேவையாற்ற வாய்ப்பு கிடைத்தது எனது பாக்கியம்'' என்றார்.