Published:Updated:

கள்ளக்குறிச்சி: தனியார் பள்ளி மாணவி மர்ம மரணம்; டி.எஸ்.பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

டி.எஸ்.பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

மாணவி மரணம் தொடர்பான வழக்கை முதன்முதலில் விசாரித்த கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி ராஜலட்சுமியும், அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகேயுள்ள கணியாமூர் கிராமத்தில் தனியார் மேல்நிலைப் பள்ளியில் பயின்றுவந்த மாணவி ஒருவர், கடந்த 13-ம் தேதி மர்மமான முறையில் மரணமடைந்தார். அந்தச் சமயம், மாணவியின் மரணத்தைச் சந்தேக மரணமாக வழக்கு பதிவுசெய்த காவல்துறையினர், கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி ராஜலட்சுமி தலைமையில் விசாரணையை நடத்தினர். இதற்கிடையில், கடந்த 17-ம் தேதி மாணவி மரணத்துக்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் ஒரு கட்டத்தில் கலவரமாக மாறிப்போனது.

 டி.எஸ்.பி ராஜலட்சுமி
டி.எஸ்.பி ராஜலட்சுமி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதையடுத்து மாணவியின் மரணம் தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. மேலும், கலவரம் குறித்த விசாரணை நடத்துவதற்கு சிறப்புப் புலனாய்வுக்குழுவும் அமைக்கப்பட்டது. அது மட்டுமின்றி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் அதிரடியாக மாற்றப்பட்டனர்.

இந்த நிலையில், மாணவி மரணம் தொடர்பான வழக்கை முதன்முதலில் விசாரித்த கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி ராஜலட்சுமியும், அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். இவருக்கு பதிலாக ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் டி.எஸ்.பி புகழேந்தி கணேசன், கள்ளக்குறிச்சியின் புதிய டி.எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.