Published:Updated:

`2024-ல் விருதுநகர் தொகுதியில் போட்டி?’ - சிவகாசியில் துரை வைகோ பேசியது என்ன?!

துரை வைகோ

"இதில் தனிப்பட்ட முறையில் எனக்கு விருப்பம் இல்லை. கட்சியின் தலைவர் வைகோ, மூத்த நிர்வாகிகள் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவேன்."- துரை வைகோ

`2024-ல் விருதுநகர் தொகுதியில் போட்டி?’ - சிவகாசியில் துரை வைகோ பேசியது என்ன?!

"இதில் தனிப்பட்ட முறையில் எனக்கு விருப்பம் இல்லை. கட்சியின் தலைவர் வைகோ, மூத்த நிர்வாகிகள் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவேன்."- துரை வைகோ

Published:Updated:
துரை வைகோ

ம.தி.மு.க விருதுநகர் மேற்கு, கிழக்கு மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டம் சிவகாசியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அந்தக் கட்சியின் தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கையில், "ம.தி.மு.க-வில் கடந்த நான்கு மாதங்களாக உறுப்பினர் சேர்ப்புப் பணி நடைபெற்றது. இதன் மூலம் 30 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அடுத்து வரும் நாள்களில் கட்சியின் அமைப்புத் தேர்தல் நடக்கவிருக்கிறது. கட்சி வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து விவாதித்தோம். இந்த மாவட்டத்தின் முக்கியத் தொழிலான பட்டாசு, தீப்பெட்டித் தொழிலைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கை எடுப்பது குறித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பட்டாசு ஆலைகளில் விபத்து ஏற்படும்போது அதன் உரிமையாளர்களைக் கைதுசெய்வதைத் தவிர்க்க வேண்டும்.

செயல்வீரர் கூட்டம்
செயல்வீரர் கூட்டம்

2024ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலின்போது விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றனர். இதில் தனிப்பட்ட முறையில் எனக்கு விருப்பம் இல்லை. கட்சியின் தலைவர் வைகோ, மூத்த நிர்வாகிகள் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவேன். அதேநேரத்தில் தி.மு.க கூட்டணியில் தற்போது இருப்பதால், கூட்டணிக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அதற்கான வாய்ப்பை வழங்கினால் போட்டியிடுவேன்.

இந்த நாடாளுமன்றத் தொகுதியில் ம.தி.மு.க மூன்று முறை போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறது. இந்தத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தால் இந்தத் தொகுதியிலுள்ள பிரச்னைகளைச் சரிசெய்ய முயல்வேன்.

கூட்டத்தினர்
கூட்டத்தினர்

விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசுதான் முக்கியக் காரணம். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்துப் பொருள்களின் விலையும் உயர்ந்திருக்கிறது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்தபோதும்கூட இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்கவில்லை" என்றார்.