Published:Updated:

``ஆர்.என்.ரவி தமிழக ஆளுநராகச் செயல்பட்டால்தான் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும்!" - துரை வைகோ

துரை வைகோ

``தமிழகத்தின் ஆளுநரான ஆர்.என்.ரவி, பா.ஜ.க-வின் ஆளுநராகவே உள்ளார். தமிழக ஆளுநராகச் செயல்படவில்லை." - துரை வைகோ

``ஆர்.என்.ரவி தமிழக ஆளுநராகச் செயல்பட்டால்தான் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும்!" - துரை வைகோ

``தமிழகத்தின் ஆளுநரான ஆர்.என்.ரவி, பா.ஜ.க-வின் ஆளுநராகவே உள்ளார். தமிழக ஆளுநராகச் செயல்படவில்லை." - துரை வைகோ

Published:Updated:
துரை வைகோ

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியிலுள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாநிலங்களவை உறுப்பினரான வைகோவின் எம்.பி மேம்பாட்டு நிதியிலிருந்து கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், குடிநீர்த் தொட்டி உள்ளிட்டவை அமைத்துத் தரக் கோரி பெற்றோர்கள், ஆசிரியர்கள் தரப்பில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன. இதையடுத்து அந்தப் பள்ளியில் ம.தி.மு.க தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ, கட்டடங்களைப் பார்வையிட்டு தேவைகள் குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ``இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியால், அந்த நாட்டு அரசு இந்தியாவைத்தான் நாடியிருக்கிறது.

ஆசிரியைகளிடம் உரையாடிய துரை வைகோ
ஆசிரியைகளிடம் உரையாடிய துரை வைகோ

இலங்கையில் உள்ள ஈழத்தமிழர் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண இதற்கு முன்பிருந்த பிரதமர்களைவிட பிரதமர் மோடிக்கு அதிகம் வாய்ப்புள்ளது. காரணம், அங்கு ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி சூழ்நிலையால் இந்திய அரசு என்ன சொன்னாலும் இலங்கை கேட்கக்கூடிய சூழ்நிலை உள்ளது. மற்ற பிரதமர்களுக்கு இந்த வாய்ப்பு இல்லை. எனவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தமிழக மீனவர்கள் பிரச்னை, ஈழத் தமிழர்கள் பிரச்னையைத் தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்களின் பிரச்னையைத் தீர்க்க கச்சதீவை மீட்பதோ, அதைச் சுற்றி தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க வழிவகை செய்யும் வகையில் ஒப்பந்தம் போடுவதோ மட்டும்தான் தீர்வு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இலங்கையில் வடகிழக்கு மாகாணப் பகுதியில் வாழும் தமிழர்களுக்குக் குறைந்தபட்ச உரிமைகளைப் பெற்றுத் தர பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு நீட் பிரச்னை, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை பிரச்னையில் முடிவெடுத்து ஆளுநருக்கு அனுப்பிவைத்திருக்கிறது. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட 11 கோப்புகள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஆளுநர் அப்படியே வைத்திருக்கிறார்.

ஆய்வு செய்த துரைவைகோ
ஆய்வு செய்த துரைவைகோ

ஆளுநர் செய்வது ஜனநாயகத்துக்கு எதிரான செயல், ஜனநாயகப் படுகொலை. தமிழகத்தின் தற்போதைய ஆளுநர் ஆர்.என்.ரவி, பா.ஜ.க-வின் ஆளுநராகவே இருக்கிறார். தமிழக ஆளுநராகச் செயல்படவில்லை. அவர், தமிழக ஆளுநராக என்றைக்குச் செயல்படுகிறாரோ அன்றுதான் முக்கியப் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். தமிழக மக்களுக்கு விரோதமான நடவடிக்கையில் தமிழக ஆளுநர், நாட்டின் பிரதமர் என யார் ஈடுபட்டாலும் ராணுவமே வந்தாலும் அவர்களுக்கு இங்கு பாதுகாப்பு கிடையாது” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism