Election bannerElection banner
Published:Updated:

'தொடர் இழுபறி.. பரமபதம் ஆட்டம்!' - காட்பாடியை போராடி வென்ற துரைமுருகன் #TNelections2021

துரைமுருகன்
துரைமுருகன்

2016 ஆம் ஆண்டு தேர்தலில், துரைமுருகன் பெற்ற வாக்குகள் 90,534. அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் அப்பு 66,588 வாக்குகள் பெற்ற நிலையில், துரைமுருகன் 23,946 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். ஆனால், 2021 -ல்...

ஒன்பது முறை காட்பாடி தொகுதியில் போட்டியிட்ட திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு இந்த முறை 'சீட்' வழங்கக்கூடாது என அவரது சொந்த தொகுதியிலிருந்தே உடன்பிறப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது. இருப்பினும் மூத்த தலைவரின் மனம் நோகக்கூடாது, சீட் மறுக்கப்பட்டால் அதனால் கட்சியில் தேவையற்ற சலசலப்புகள் ஏற்படலாம் என்பதையெல்லாம் மனதில்கொண்டே,தொடர்ந்து 10 வது முறையாக காட்பாடியில் களமிறக்கப்பட்டார் துரைமுருகன். தி.மு.க., சார்பில், காட்பாடியில் முதல் முறையாக அவர், 1971 ல் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின் 1977, 1980 ஆம் ஆண்டுகளில், ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் மீண்டும் 1984, 1989, 1991, 1996, 2001, 2006, 2011, 2016 ஆம் ஆண்டுகளில் இத்தொகுதியில் போட்டியிட்ட அவர், 1984 மற்றும் 1991 ஆண்டு தேர்தல்களில் என இரு முறை மட்டுமே தோல்வியடைந்தார். எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், 12 முறை அவர் தேர்தலை சந்தித்துள்ளார் துரைமுருகன்.

துரைமுருகன்
துரைமுருகன்

கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலில், துரைமுருகன் பெற்ற வாக்குகள் 90,534. அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் அப்பு 66,588 வாக்குகள் பெற்ற நிலையில், துரைமுருகன் 23,946 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இந்த முறை துரைமுருகனை எதிர்த்து வி. ராமு (அதிமுக), எம்.சுதர்சன்(ஐஜேகே), ச. திருக்குமரன் (நாதக), ஏ.எஸ்.ராஜா (அமமுக) மற்றும் பல சுயேட்சைகள் போட்டியிட்டனர். கட்சி தலைமை சீட் கொடுத்தாலும், சொந்த தொகுதியில் மக்களிடையே துரைமுருகன் மீதான சலிப்பும், உடன் பிறப்புகளின் அதிருப்தியும் துரைமுருகனுக்கு கலக்கத்தைக் கொடுத்திருந்தது.

அந்த கலக்கம் வாக்கு எண்ணிக்கையிலும் எதிரொலித்தது. 10 வது முறை காட்பாடியில் தொகுதியில் களமிறங்கிய துரைமுருகனுக்கு காலை தபால் வாக்குகள் எண்ணிக்கையின் போதே அதிர்ச்சி காத்திருந்தது. தபால் வாக்குகள் எண்ணப்பட்ட பொது தொடர்ந்து பின்னடைவில் இருந்தார். அவரை எதிர்த்து களமிறங்கிய வி. ராமு, கடும் போட்டி அளித்தார். அதன் பிறகு, வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட போதும் துரை முருகனுக்கு பின்னடைவே நீடித்தது.

துரைமுருகன்
துரைமுருகன்

தொடர்ந்து பின்னடைவில் இருந்த துரைமுருகன் பிற்பகலுக்கு மேல் முன்னிலையில் வந்தவர், தொடர்ச்சியாக குறைந்த வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்தார். சில சமயம் அதிமுக வேட்பாளரும் முன்னிலையில் வந்து சென்றார். இதன் காரணமாக, முன்னணி நிலவரம் பரமபதம் ஆட்டம் போன்று ஏற்ற இறக்கத்துடன் சென்றது. காலை முதலே இழுபறியாக இருந்த எண்ணிக்கை இரவு முடிவுக்கு வந்தது. இறுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் ராமுவை விட 754 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் மூத்த அரசியல்வாதி, திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன். தான் சந்தித்த 12 வது தேர்தலில் , இந்த வெற்றியின் மூலம் 10 வது முறையாக காட்பாடியில் வென்றுள்ளார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு