மதுரை இராசாசி அரசு மருத்துவமனை முதியோர் நலப் பிரிவில், அதிகாரிகள் புடைசூழ உள்ளே நுழைந்தது சட்டமன்றப் பொதுக்கணக்குக் குழு. குழுவின் தலைவர் துரைமுருகன் ஒரு நோயாளியிடம், ‘‘நல்ல சாப்பாடு தருகிறார்களா?’’ என்று கேட்டார். அந்த நோயாளி, ‘‘நல்ல சாப்பாடு தருகிறார்கள்’’ என்றார். உடனே, ‘‘எனக்காகச் சொல்ல வேண்டாம். அப்புறம் நான் போன பிறகு உங்களுக்கு சாப்பாடே தர மாட்டார்கள்’’ என்று துரைமுருகன் ஜாலியாகச் சொல்ல, மருத்துவர்கள் அனைவரும் கலகலப்பானார்கள். ஆய்வுசெய்யச் சென்ற இடங்களிலெல்லாம், கலவரத்துடன் நிற்கும் அதிகாரிகளை இப்படித்தான் கலகலப்பாக்குகிறார் தி.மு.க பொருளாளரும் சட்டமன்ற உறுப்பினருமான துரைமுருகன்.

சட்டமன்றத்தில் அமைக்கப்படும் குழுக்களில் முக்கியமானது, பொதுக்கணக்குக் குழு. அரசு அறிவித்துள்ள திட்டங்கள் சரியாகச் செயல்படு கின்றவனா, மக்களுக்கு அரசின் சேவைகள் சரியாகக் கிடைக்கின்றனவா என்பதை தமிழகம் முழுவதும் சுற்றி ஆய்வுசெய்து அறிக்கை வழங்குவதுதான், இந்தக் குழுவின் வேலை. ஆனால் இந்த ஆய்வுப் பயணம், இன்பச்சுற்றுலாவாக மாறிவிட்டது.

ஆகஸ்ட் 20-ம் தேதி, மதுரைக்கு வந்தது பொதுக் கணக்குக் குழு. துரைமுருகன் தலைமையிலான இந்தக் குழுவில் பழனிவேல் தியாகராஜன், கீதா, பாஸ்கர், முகமது அபுபக்கர், உதயசூரியன், டி.ஆர்.பி.ராஜா, மோகன், நட்ராஜ் ஆகிய எம்.எல்.ஏ-க்கள் இடம்பெற்றிருந்தனர். முக்கிய உறுப்பினர்களான ஓ.பன்னீர்செல்வம், செம்மலை ஆகியோர் இந்தப் பயணத்தில் கலந்துகொள்ள வில்லை.

மதுரை சிறைச்சாலையைப் பார்வையிட்ட துரைமுருகன், செய்தியாளர்களிடம் பேசும்போது ‘‘கைதிகளின் புகார்களைக் கேட்டறிந்தோம், சரியான மருத்துவ வசதியும் கவனிப்பும் இல்லாமல் கைதிகள் மரணமடைந்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களிடம் விசாரித்துள்ளோம். கைதிகளை நன்றாகக் கவனிக்கச் சொல்லியிருக்கிறோம்’’ என்றார்.

ஆகஸ்ட் 21-ம் தேதி இரண்டாம் நாள் ஆய்வுப் பயணத்தை முடித்துவிட்டு மதிய வேளையில் பேட்டியளித்தார் துரைமுருகன். அப்போது, “தணிக்கைத் துறை கொடுத்த அறிக்கையின்படி, திட்டங்களின் செயல்பாடுகுறித்து அரசு அதிகாரிகளிடம் விசாரிக்கப்பட்டது. எங்களுக்கு வந்த புகார்களையும் அதற்கு அதிகாரிகள் அளித்த விளக்கங்களையும் சட்டமன்றத்தில் கொடுப்போம். மதுரை மாவட்டத்தில் நடைபெறும் திட்டங்களில் பெரிய அளவில் குளறுபடி இல்லை. அதிகாரிகளால் தான் சில திட்டங்கள் தேக்கமடைந்துள்ளன. அரசு விழாக்களுக்கு, தொகுதியைச் சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி., எம்.எல்.ஏ-க்களை அதிகாரிகள் அழைப்பதில்லை. இந்தப் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்’’ என்றார்.

தொடர்ந்து வைகை ஆற்றில் நீர்த் திருட்டு பற்றி கேள்வி எழுப்ப… “கலெக்டர் பக்கத்தில் இருக்கிறார். அதுபற்றி இங்கு பேச முடியாது. எங்களுக்குப் பசிக்குது, உங்களுக்கும் பசிக்கும்’’ என்று சிரித்துக்கொண்டே நகர்ந்துவிட்டார்.

அடுத்து அந்தக் குழுவினர், தேனி மாவட்டத்துக்குச் சென்றனர். உசிலம்பட்டி பகுதி கிராமங்களுக்கான 58-ம் கால்வாய் திட்டத்துக்காக, வைகை அணையில் அமைக்கப்பட்டிருக்கும் மதகுகளைப் பார்வையிட்டனர். அரண்மனைபுதூர் ஊராட்சிப் பகுதியில் சில பகுதிகளைப் பார்வையிட்டுவிட்டு, அங்கு இருந்த அங்கன்வாடி மையத்துக்குள் குழுவினர் நுழைந்தபோது… ஒரு குழந்தை கிருஷ்ணர் வேடமிட்டு அமர்ந்து இருந்தது. அதனிடம் எம்.எல்.ஏ ஒருவர், ‘‘உன் பெயர் என்ன?’’ என்று கேட்டார். உடனே, ‘‘பாத்தா தெரியலையா... கிருஷ்ணர்’’ என்று கலாய்த்தார் துரைமுருகன்.

அடுத்து கலெக்டர் அலுவலகத்தில் அரசு அதிகாரிகளுடன் பொதுக்கணக்குக் குழுவினர் உரையாடினர். அப்போது அங்கு வந்த தேனி எம்.பி-யான ரவீந்திரநாத்குமார், துரைமுருகன் உட்பட குழுவினர் அனைவருக்கும் சால்வை அணிவித்தார். அதோடு, ‘‘மத்திய, மாநில அரசுகள் மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் நிதி விவரத்தை எம்.பி-க்களின் மெயிலுக்கு அப்டேட் செய்ய பரிந்துரை செய்யுங்கள்’’ என்று ரவீந்திரநாத் கோரிக்கை வைக்க, ‘‘இதை செய்ய வேண்டியது உங்க டாடிதான். உங்க வீட்டுல டி.வி பார்த்துக்கிட்டே, சாப்பிட்டுக்கிட்டே உங்க டாடிகிட்ட கோரிக்கை வையுங்கள்’’ என்று சொல்லி அந்த இடத்தையும் கலகலப்பாக்கினார்.

‘எதிர்க்கட்சியைச் சேர்ந்த சீனியர் எம்.எல்.ஏ தலைமையில் ஆய்வுக் குழுவினர் வருகிறார்கள். எதையெல்லாம் நோண்டப்போகிறார்களோ’ என்று அரசு அதிகாரிகள் கலக்கத்தில் இருந்தனர். ஆனால், அரட்டையடித்து சந்தோஷப்படுத்திச் சென்றுவிட்டார் துரைமுருகன்.