Published:Updated:

திமுக: கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கே.எஸ்.ராதாகிருஷ்ணன்; அதிரடி நடவடிக்கைக்குக் காரணம் என்ன?!

கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

தி.மு.க செய்தித் தொடர்பு செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் திமுக-விலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருக்கிறார்.

திமுக: கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கே.எஸ்.ராதாகிருஷ்ணன்; அதிரடி நடவடிக்கைக்குக் காரணம் என்ன?!

தி.மு.க செய்தித் தொடர்பு செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் திமுக-விலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டிருக்கிறார்.

இது தொடர்பாக தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``தி.மு.க செய்தித் தொடர்புச் செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தி.மு.க-வின் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டுவருவதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கிவைக்கப்படுகிறார்'' என அறிவித்திருக்கிறார்.

துரைமுருகன்
துரைமுருகன்

சமீபத்தில் நடந்த காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலில் காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டதை இணையத்தில் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் விமர்சித்திருந்தார். மேலும், தொடர்ந்து ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் கட்சித் தலைமைக்கு எதிராகக் கருத்து பதிவிட்டுவந்ததாகவும் கூறப்படுகிறது. அதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தனது முகநூல் பக்கத்தில், தாகூரின் `கீதாஞ்சலி’யில் உள்ள வரிகளை மேற்கோள் காட்டியிருக்கிறார். அதில்,

``நண்பர்களே நான் பிரியப்போகும் இந்த நேரத்தில்

என்னை வாழ்த்தி அனுப்புங்கள்!

வானத்தில் வைகறையின் ஒளி செறிந்து விளங்குகிறது

எனது பாதையும் அழகைப் பொழிகிறது

நான் என்னுடன்

என்ன கொண்டுபோகிறேன் என்று கேட்காதீர்கள்

வெறுங்கையுடன் ஆர்வ இதயத்தோடு என் யாத்திரை

ஆரம்பமாகிறது.

நான் எனது திருமண மாலையை அணிந்துகொள்கிறேன்.

எனது ஆடை பிராணியின் காஷாய உடையன்று

பாதையில் எவ்வித அபாயங்கள் இருந்தபோதிலும்

என் மனதில்

எவ்வித பயமும் இல்லை.

எனது யாத்திரை முடியும்போது அந்தி நட்சத்திரம்

எட்டிப் பார்க்கும்

அரசனின் அரண்மனையிலிருந்து

அந்தி மாலையின் சோக கீதங்களின் இனிய கோஷம் பொழிந்து கொண்டிருக்கும்.

...

நான் இந்த வாழ்க்கையை விரும்பும் காரணத்தாலேயே

மரணத்தை நேசிக்கிறேன்.”

எனக் குறிப்பிட்டிருக்கிறார்.