Published:Updated:

துபாய்: `நோ’ சொன்ன சித்தரஞ்சன் சாலை... `ரிட்டர்ன்’ ஆன துரைமுருகன்!

துரைமுருகன்

கடைசி நாளிலாவது துபாய் எக்ஸ்போவைக் கண்டுவிட்டு வரலாம் என்று கிளம்பிய துரைமுருகனை, பாதியிலேயே ரிட்டர்ன் ஆகச்சொல்லிவிட்டதாம் திமுக மேலிடம்!

துபாய்: `நோ’ சொன்ன சித்தரஞ்சன் சாலை... `ரிட்டர்ன்’ ஆன துரைமுருகன்!

கடைசி நாளிலாவது துபாய் எக்ஸ்போவைக் கண்டுவிட்டு வரலாம் என்று கிளம்பிய துரைமுருகனை, பாதியிலேயே ரிட்டர்ன் ஆகச்சொல்லிவிட்டதாம் திமுக மேலிடம்!

Published:Updated:
துரைமுருகன்

அரசுமுறைப் பயணமாக மார்ச் 24-ம் தேதி துபாய் சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின், மார்ச் 29-ம் தேதி சென்னை திரும்பினார். அவருடன் அவரின் மனைவி துர்கா ஸ்டாலின் உள்ளிட்டக் குடும்பத்தினரும் துபாய் செல்ல, ஒரு சில அதிகாரிகளும் செல்ல, அமைச்சரவையிலிருந்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மட்டுமே சென்றிருந்தார்.

மு.க.ஸ்டாலின் துபாய் பயணம்
மு.க.ஸ்டாலின் துபாய் பயணம்
ட்விட்டர்

அப்போதே தி.மு.க பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனும் துபாய் செல்லலாம் என்றிருந்தார். ஆனால், ’தொடர்பில்லாதத் துறை அமைச்சரைக் கூடவே கூட்டிச்செல்வது சரியாக இருக்காது, முதல்வர் சென்றபின்னரோ, சென்னை திரும்பிய பின்னரோ நீங்கள் துபாய் சென்றுவாருங்கள்’ என்று அறிவுறுத்தப்பட்டிருந்ததாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எதுக்குடா வம்பு.. என்று எண்ணிய துரைமுருகன், தலைவர் வந்த பின்னர் போய்விட்டுவரலாம் என்று காத்திருந்தார். இந்தச் சூழ்நிலையில், துபாய் பயணம் குறித்து சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் எதிர்க்கட்சிகள் தரப்பிலும் பல்வேறு செய்திகள் வெளியானது. முதல்வர் சென்னை திரும்பிய மறுநாள் 30-ம் தேதி ஜூனியர் விகடன் இதழில், ‘குடும்பம்.. முதலீடு.. துபாய்.. எக்ஸ்போஸ்’ என்ற தலைப்பில் கவர் ஸ்டோரியும் வெளிவரவே,

துரைமுருகன்
துரைமுருகன்

துபாய் செய்தி வேகமாக பரவியது. இதற்கிடையே துபாய் எக்ஸ்போவை, போய் பார்த்துவிட்டு வந்துவிடலாம் என நினைத்த துரைமுருகன், டிக்கெட் எல்லாம் போட்டுக்கொண்டு, 30-ம் தேதி சென்னை விமான நிலையம் சென்றிருக்கிறார். ஆனால், திடீரென பயணம் ரத்தாகியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

துரைமுருகன் பயணம் ரத்தானதற்கானக் காரணம் குறித்து அவருக்கு நெருக்கமான நபர்களிடம் பேசினோம். “துபாய் எக்ஸ்போவைப் பார்வையிட துரைமுருகன் ஆர்வமாக இருந்தார்.

எடப்பாடி பழனிச்சாமி-ஸ்டாலின்
எடப்பாடி பழனிச்சாமி-ஸ்டாலின்

ஏற்கெனவே அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி துபாய் சென்றபோது, 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் உடன் சென்றனர். அதுபற்றி அப்போதே ஸ்டாலின் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது `சுற்றுலா அமைச்சரவை’ என விமர்சித்திருந்தார்.

அப்படியிருக்கும்போது தொழில் முதலீடுகளுக்குச் சம்பந்தமே இல்லாத துரைமுருகனையும் கூட அழைத்துச்சென்றால், அவரைப் பின்தொடர்ந்து மற்ற சில அமைச்சர்களும் தனித்தனியாகக் கிளம்பி துபாய்க்கு வந்தால், ஸ்டாலின் அ.தி.மு.க மீது சுமத்தியக் குற்றச்சாட்டு தி.மு.க-வுக்கே ரிப்பீட்டாகும் என்பதால்தான் எந்த அமைச்சரும் வரவேண்டாம் என்று தலைமையிலிருந்து சொல்லப்பட்டது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

அதனால், குறைந்தபட்சம் ஸ்டாலின் துபாயிலிருந்து அபுதாபி சென்ற பின்னராவது கிளம்பலாம் என்றிருந்த துரைமுருகனும், இந்த உத்தரவினால் பின்வாங்கினார்.

மார்ச் 29-ம் தேதி நள்ளிரவில் ஸ்டாலின் சென்னை திரும்பியதும், 30-ம் தேதி நாம் புறப்பட்டுச் செல்லலாம் என நினைத்து டிக்கெட்டும் போட்டுவைத்துவிட்டார் துரைமுருகன். தனது கோட்டூர்புரம் இல்லத்திலிருந்து விமான நிலையத்துக்கு கிளம்பினார் துரைமுருகன். விமான நிலையத்தில் நுழைந்து, போர்டிங் பாஸ் எடுக்கவிருந்த நேரத்தில், சித்தரஞ்சன் சாலையிலிருந்து அவருக்கு போன் வந்ததாம்.

துரைமுருகன்
துரைமுருகன்

‘துபாய் பயணம் குறித்து சமூக வலைதளங்களிலும், பத்திரிகைகளிலும் சர்ச்சைகள் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் நீங்களும் துபாய் செல்வது சரிவராது’ என்று சொல்லப்பட்டது. அதனால், அப்செட்டான துரைமுருகன், ரிட்டர்ன் ஆகி வீட்டுக்கே திரும்பிவிடார்.

இதனிடையே அதே 30-ம் தேதி துரைமுருகனுக்கு நெஞ்சுவலி காரணமாக அப்பல்லோவில் அட்மிட் ஆகியிருக்கிறார் என்ற செய்தி ஃப்ளாஷ் ஆனது. உடனடியாக ரியாக்ட் செய்த துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் எம்.பி ‘எனது தந்தை நலமுடன் இருக்கிறார்’ என்று அது தொடர்பான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

எம்.பி கதிர் ஆனந்த்
எம்.பி கதிர் ஆனந்த்

துரைமுருகன் அப்செட்டில் இருப்பதை அறிந்து, மீண்டும் அவருக்குப் போன் போட்டு சமாதானம் செய்துள்ளதாம் சித்ரஞ்சன் சாலை!” என்று முடித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism