Published:Updated:

பாஜக: 5 மாநில சட்டமன்றத் தேர்தல் செலவுகள்; 2017 -ம் ஆண்டுடன் ஒப்பிட்டால்..! - தேர்தல் ஆணையம் தகவல்!

அமித் ஷா, யோகி, மோடி

முந்தைய தேர்தல் செலவைவிட இந்தத் தேர்தலுக்கான செலவு கிட்டத்தட்ட 58 சதவிகிதம் அதிகம் எனத் தேர்தல் ஆணையத்தின் அறிக்கை காட்டுகிறது.

பாஜக: 5 மாநில சட்டமன்றத் தேர்தல் செலவுகள்; 2017 -ம் ஆண்டுடன் ஒப்பிட்டால்..! - தேர்தல் ஆணையம் தகவல்!

முந்தைய தேர்தல் செலவைவிட இந்தத் தேர்தலுக்கான செலவு கிட்டத்தட்ட 58 சதவிகிதம் அதிகம் எனத் தேர்தல் ஆணையத்தின் அறிக்கை காட்டுகிறது.

Published:Updated:
அமித் ஷா, யோகி, மோடி

பா.ஜ.க இந்த ஆண்டு நடைபெற்ற ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் 2017-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலைவிட 58 சதவிகிதம் அதிகம் செலவு செய்திருப்பதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக வெளியான தகவலில், இந்த ஆண்டு உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதில் பா.ஜ.க ரூ. 344.27 கோடிக்கு மேல் செலவிட்டிருக்கிறது.

பாஜக -மோடி, அமித் ஷா
பாஜக -மோடி, அமித் ஷா
  • அதிகபட்சமாக ரூ 221.32 கோடி உத்தரப்பிரதேசத்தில் செலவிட்டிருக்கிறது. மேலும், குறைந்த பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. 2017-ம் ஆண்டு அங்கு செலவிடப்பட்ட தேர்தல் செலவு ரூ.175.1 கோடி. 2022 தேர்தலின்போது அதன் தேர்தல் செலவு 26 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

  • பஞ்சாப்பில் 2017- சட்டமன்றத் தேர்தலில் ரூ 7.43 கோடி செலவு செய்த பா.ஜ.க., 2022-ம் ஆண்டில் செய்த செலவு கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகரித்திருக்கிறது. அதாவது, ரூ 36.7 கோடி செலவிட்டது, ஆனாலும்கூட, அந்தக் கட்சியால் இரண்டு இடங்களை மட்டுமே பெற முடிந்தது.

  • கோவாவில், 2017-ல் கட்சியின் செலவு ரூ.4.37 கோடி. ஆனால் இந்த ஆண்டு தேர்தலில் அந்தக் கட்சி ரூ.19.07 கோடி செலவிட்டுள்ளது. முந்தைய தேர்தலைவிட இந்தத் தேர்தலுக்கு நான்கு மடங்கு அதிகமாகச் செலவழித்து ஆட்சியைக் கைப்பற்றியது.

  • மணிப்பூர், உத்தரகாண்ட் மாநிலங்களில், 2017-ம் ஆண்டு ரூ.7.86 கோடியும், 2022 சட்டமன்றத் தேர்தலில் தலா ரூ.23.52 கோடி மற்றும் ரூ.43.67 கோடிகள் செலவிடப்பட்டிருக்கின்றன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

பா.ஜ.க ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 2017-ல், தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த தேர்தல் செலவு குறித்த அறிக்கையில் தேர்தலுக்கான மொத்தச் செலவு ரூ.218.26 கோடி எனக் குறிப்பிட்டிருக்கிறது. 2022-ம் ஆண்டுக்கான தேர்தல் செலவுகள் அறிக்கையில் ரூ. 344.27 கோடி செலவிட்டதாகத் தகவல் அளித்திருக்கிறது. முந்தைய தேர்தல் செலவைவிட இந்தத் தேர்தலுக்கான செலவு கிட்டத்தட்ட 58 சதவிகிதம் அதிகம் என தேர்தல் ஆணையத்தின் அறிக்கை காட்டுகிறது.

பாஜக, காங்கிரஸ்
பாஜக, காங்கிரஸ்

இந்தத் தேர்தல் செலவுகளில், ஐந்து மாநிலங்களில் அந்தக் கட்சியின் தலைவர்களின் பயணங்களுக்கும், பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்துவதற்கும்ன், விளம்பரங்கள் செய்வதற்கும் ஒரு பெரும் பகுதி செலவிடப்பட்டது. ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களில் காணொளிப் பிரசாரங்களுக்காக சுமார் 12 கோடி ரூபாய் செலவிடடப்பட்டிருக்கிறது. இந்த மாநிலங்களில் ஜனவரி 8-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து முடிவடையும் வரை 63 நாள்களில் பா.ஜ.க ரூ.914 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில், காங்கிரஸ் கட்சி ரூ. 240.1 கோடி மொத்த வரவுகளைப் பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் செலவுகளின் மாநிலவாரியான தகவல்கள் கிடைக்கவில்லை என்றாலும் பிரசாரத்துக்கான செலவு ரூ. 15.67 கோடி என காங்கிரஸ் தெரிவித்திருக்கிறது.