Published:Updated:

பாஜக புகார்: ஆளுநரின் பரிந்துரை; பறிபோகிறதா ஹேமந்த்தின் முதல்வர் பதவி? - ஜார்க்கண்ட் அரசியலில் புயல்

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்

முதல்வர் தன் பதவியைப் பயன்படுத்தி சுரங்க உரிமத்தைச் சட்டவிரோதமாகப் பெற்றதாகவும், இந்த ஊழலில் சுமார் 100 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றிருப்பதாகவும் தேர்தல் ஆணையத்திடம் பா.ஜ.க புகார் அளித்திருந்தது.

பாஜக புகார்: ஆளுநரின் பரிந்துரை; பறிபோகிறதா ஹேமந்த்தின் முதல்வர் பதவி? - ஜார்க்கண்ட் அரசியலில் புயல்

முதல்வர் தன் பதவியைப் பயன்படுத்தி சுரங்க உரிமத்தைச் சட்டவிரோதமாகப் பெற்றதாகவும், இந்த ஊழலில் சுமார் 100 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றிருப்பதாகவும் தேர்தல் ஆணையத்திடம் பா.ஜ.க புகார் அளித்திருந்தது.

Published:Updated:
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்

ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் ஆட்சி நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், முதல்வர் தன் பதவியைப் பயன்படுத்தி சுரங்க உரிமத்தைச் சட்டவிரோதமாகப் பெற்றதாகவும், இந்த ஊழலில் சுமார் 100 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றிருப்பதாகவும் தேர்தல் ஆணையத்திடம் பா.ஜ.க புகார் அளித்திருந்தது. இந்தப் புகார் தொடர்பாக விசாரித்த தேர்தல் ஆணைய அதிகாரிகள், ஹேமந்த் சோரன்மீதான முறைகேடுப் புகார் உறுதியானதாகத் தெரிவித்திருக்கின்றனர்.

பாஜக
பாஜக

அதைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட் முதல்வரை அவரின் எம்.எல்.ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யலாமா எனத் தேர்தல் ஆணையத்திடம் ஜார்க்கண்ட் ஆளுநர் ஆலோசனை கேட்டிருந்தார். அதற்குத் தேர்தல் ஆணையம், `முதல்வரைத் தகுதிநீக்கம் செய்யலாம்’ எனப் பரிந்துரை செய்திருப்பதாகத் தெரிகிறது. இந்த நிலையில், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் முதல்வர் பதவியை ஆளுநர் எந்த நேரத்திலும் பறிக்கலாம் என்ற தகவல் அந்த மாநில அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ஹேமந்த்  சோரன்!
ஹேமந்த் சோரன்!

ஒருவேளை ஹேமந்த் சோரன் தகுதிநீக்கம் செய்யப்பட்டால் அடுத்த முதல்வர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியிலிருந்துதான் தேர்ந்தெடுக்கப்படுவாரா... கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியிலிருந்து யாரேனும் தேர்ந்தெடுக்கப்படுவார்களா அல்லது மகாராஷ்டிராவைப்போல இங்கும் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி பா.ஜ.க ஆட்சி அமைக்குமா என பலத்த எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.