Published:Updated:

ஒன் பை டூ: பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவருவது சரிதானா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ராமசுப்பிரமணியன், வெங்கடேஷ் ஆத்ரேயா
ராமசுப்பிரமணியன், வெங்கடேஷ் ஆத்ரேயா

இது தேவையற்றது. பெட்ரோல், டீசல், புகையிலை, மது ஆகியவற்றில் மட்டுமே மாநில அரசுகளால் தற்போது வரி விதிக்க முடியும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி

ராமசுப்பிரமணியன், பொருளாதார நிபுணர்

“மிகவும் நல்லது. தற்போது மத்திய, மாநில அரசுகள் தங்கள் இஷ்டத்துக்கு வரிகளை விதித்து 58 ரூபாய்க்கு விற்பனை செய்யவேண்டிய பெட்ரோலை 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்கின்றன. ஆனால், ஜி.எஸ்.டி-க்குள் கொண்டுவந்தால் அதிகபட்சமாகவே 28 சதவிகிதம்தான் வரி விதிக்க முடியும். அதனால், லிட்டருக்கு சுமார் 40 ரூபாய்க்கும் மேல் மக்களுக்குப் பணம் மிச்சமாகும். பெட்ரோல் மட்டுமல்ல... டீசல் விலை அதிகமாக இருப்பதால்தான் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலையும் அதிகரிக்கிறது. இதனால் அதிகமாக பாதிக்கப்படுவது ஏழை, எளிய, நடுத்தர மக்கள்தான். அதனால் கண்டிப்பாக பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். இப்படிச் செய்வதால் மாநில அரசுக்குக் கிடைக்கும் வருவாய் பறிபோய்விடும் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட 2017 முதல் 2022 வரை ஐந்தாண்டுகள் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அதன்படி அடுத்த ஆண்டுவரை எந்தச் சிக்கலும் இல்லை. அதற்குப் பிறகும் மத்திய அரசு, மாற்றுவழியைக் கண்டறியும். அதனால் பயப்படத் தேவையில்லை.’’

ராமசுப்பிரமணியன்
ராமசுப்பிரமணியன்
வெங்கடேஷ் ஆத்ரேயா
வெங்கடேஷ் ஆத்ரேயா

வெங்கடேஷ் ஆத்ரேயா, பொருளாதார நிபுணர்

“இது தேவையற்றது. பெட்ரோல், டீசல், புகையிலை, மது ஆகியவற்றில் மட்டுமே மாநில அரசுகளால் தற்போது வரி விதிக்க முடியும். பெட்ரோல், டீசலையும் ஜி.எஸ்.டி-க்குள் கொண்டுவந்துவிட்டால், அந்தக் குறைந்தபட்ச வரிவிதிப்பு அதிகாரமும் மாநில அரசுகளின் கையைவிட்டுப் போய்விடும். அதனால், மக்களுக்குச் செய்யவேண்டிய பல நலத்திட்ட உதவிகளைச் செய்ய முடியாமல் போகும். மத்திய அரசு, கடந்த நான்காண்டுகளில் ஜி.எஸ்.டி இழப்பீட்டை எந்த அளவுக்கு மாநிலங்களுக்குச் சரியாகக் கொடுத்திருக்கிறது... அதை வாங்குவதற்காக நாம் அவர்களிடம் எவ்வளவு மெனக்கெட வேண்டியிருக்கிறது? இன்னும் பல்லாயிரம் கோடி ரூபாய் பாக்கி தரவேண்டியிருக்கிறது. அதுமட்டுமல்ல... ஜி.எஸ்.டி-க்குள் பெட்ரோல், டீசலைக் கொண்டுபோனால் விலை குறைக்கப்படும் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை. ஏற்கெனவே இருக்கின்ற 28 சதவிகித வரிவிதிப்பையே பின்பற்றுவார்கள் என்று சொல்ல முடியாது. இதற்காக, புதிய விதிகளைக்கூட உருவாக்க வாய்ப்பு இருக்கிறது.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு