Published:Updated:

பிடிஆர் ஆடியோ: ``உதயநிதியையும் சபரீசனையும் அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும்!" - ஜெயக்குமார்

ஜெயக்குமார்

``உதயநிதியையும் சபரீசனையும் அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும். அந்த முப்பதாயிரம் கோடி ரூபாய் அரசு கருவூலத்துக்கு வந்தால் மக்களின் பல கஷ்டங்கள் தீர்ந்துவிடும்." - ஜெயக்குமார்

Published:Updated:

பிடிஆர் ஆடியோ: ``உதயநிதியையும் சபரீசனையும் அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும்!" - ஜெயக்குமார்

``உதயநிதியையும் சபரீசனையும் அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும். அந்த முப்பதாயிரம் கோடி ரூபாய் அரசு கருவூலத்துக்கு வந்தால் மக்களின் பல கஷ்டங்கள் தீர்ந்துவிடும்." - ஜெயக்குமார்

ஜெயக்குமார்

சமூக வலைதளங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், அமைச்சர் உதயநிதியும் சபரீசனும் கடந்த ஓராண்டில் முறைகேடாக 30,000 கோடி ரூபாய் சம்பாதித்தாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுவது போன்ற ஆடியோ கிளிப் ஒன்று வேகமாகப் பரவியது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, அந்த ஆடியோ கிளிப்பை தாங்கள் வெளியிட்டதாகவும், அதன்மீது முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். பின்னர் இந்த விவகாரத்தில், அதுவொரு ஃபேக் (Fake) ஆடியோ என்றும் பழனிவேல் தியாகராஜன் கூறியிருந்தார்.

ஜி ஸ்கொயர் - வருமான வரித்துறை சோதனை
ஜி ஸ்கொயர் - வருமான வரித்துறை சோதனை

இதற்கிடையில், அண்ணாமலை DMK Files வெளியிட்டபோது ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு வைத்திருந்தார். ஆனால், தி.மு.க-வுடன் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லையென ஜி ஸ்கொயர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. இப்படியான சூழலில் ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்குச் சொந்தமான 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டனர். இந்த நிலையில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தி.மு.க-வின் ஊழல் சாம்ராஜ்யத்துக்கு ஒரு முடிவு கட்டுகின்ற வேலையை மத்திய அரசு தொடங்கிவிட்டதாகக் கூறியிருக்கிறார்.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், ``உதயநிதியையும், சபரீசனையும் அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும். அந்த முப்பதாயிரம் கோடி ரூபாய் அரசு கருவூலத்துக்கு வந்தால் மக்களின் பல கஷ்டங்கள் தீர்ந்துவிடும். சொத்து வரி ஏற்ற வேண்டியதில்லை, மின்சாரக் கட்டணம் ஏற்ற வேண்டியதில்லை, பால் விலையை ஏற்ற வேண்டியதில்லை, வீட்டு வரியை ஏற்ற வேண்டியதில்லை. வரி உயர்வில்லாமல் மக்களுக்கு ஒரு நல்ல நிலையை உருவாக்க முடியும்.

 ஜெயக்குமார்
ஜெயக்குமார்

முப்பதாயிரம் கோடியைப் பறிமுதல் செய்யும் அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு. ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தவரையும் பிடிக்கலாம். ஆனால், இதுவரையிலும் அது இல்லை. இவர்களுடைய ஊழல் சாம்ராஜ்யத்துக்கு ஒரு முடிவு கட்டுகின்ற வேலையை இன்றைக்கு மத்திய அரசு தொடங்கிவிட்டது. ஜி என்றாலே தி.மு.க-வுக்கு ஒத்துப்போகும்போல. முன்னர் 2ஜி, இப்போது ஜி ஸ்கொயர். 2ஜி-யால் ஆட்சியே கவிழ்ந்தது.

ஜி-ஸ்கொயர்
ஜி-ஸ்கொயர்

அதேபோல் இப்போது ஜி ஸ்கொயரால், மக்களின் வெறுப்பைச் சம்பாதித்து வீட்டுக்கு சீக்கிரம் போகின்ற அளவுக்கு நிலைமை உருவாகும். தி.மு.க-வுக்கு கவுன்டவுன் (Countown) ஸ்டார்ட் ஆகிவிட்டது. அவர்களுக்குச் சனி பிடித்திருக்கிறது. விரைவில் இந்த ஆட்சி தொலைவதற்கான நேரம்தான் இது. மத்திய அரசு இன்றைக்கு 50 இடங்களில் ரெய்டு நடத்தியிருக்கிறது. மத்திய அரசைப் பொறுத்தவரையில் தி.மு.க-மீது இது தொடர வேண்டும். அடுத்து இந்த மூன்று பேரையும் கஸ்டடியில் எடுக்க வேண்டும்" என்று கூறினார்.