Published:Updated:

முடக்கப்பட்ட ரூ.746 கோடி சொத்துகள்! - 8 ஆண்டுகளுக்குப் பின் ஜெகன்மோகனை மகிழவைத்த தீர்ப்பு

கலிலுல்லா.ச

ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அவரின் மனைவி பாரதி ரெட்டியின் சொத்துகளை விடுவிக்க பணப்பரிவர்த்தனைக்கான தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

ஜெகன்மோகன் ரெட்டி
ஜெகன்மோகன் ரெட்டி

கடந்த 2011-ம் ஆண்டு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு மற்றும் அவரின் மனைவி பாரதி ரெட்டிக்குச் சொந்தமான கம்பெனிகளுக்கு எதிராக சி.பி.ஐ வழக்கு ஒன்றைப் பதிவு செய்தது. அதிகாரிகள் துணையுடன் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஜெகன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள சுண்ணாம்புக்கல் சுரங்கத்தை ஜெகன்மோகன் ரெட்டிக்குச் சொந்தமான பாரதி சிமென்ட் நிறுவனத்துக்கு அப்போதைய ஆந்திரா அரசு சட்டவிரோதமாக ஒதுக்கீடு செய்தது.

ஆந்திர முதல்வர்
ஆந்திர முதல்வர்

இந்த ஒதுக்கீட்டின் மூலம் 152 கோடி சுண்ணாம்புக்கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன என வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. சி.பி.ஐ பதிவுசெய்த இந்த எப்.ஐ.ஆரை அடிப்படையாகக்கொண்டு அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்தது.

``சட்டவிரோதப் பணப்பரிவர்தனை மூலமாக ரூ.404.7 கோடி அசையும் சொத்துகள், ரூ.344.3 கோடி அசையா சொத்துகள் என 749.10 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளது” என அதில் கூறப்பட்டது.

ஜெகன்
ஜெகன்

இது தொடர்பாக பணப்பரிவர்த்தனைக்கான தீர்ப்பாயம், ``அமலாக்கத்துறை விசாரணையில் பல்வேறு ஓட்டைகள் இருக்கின்றன. அமலாக்கத்துறை விசாரணை அடிப்படையில் பார்க்கும்போது, சரியான முறையில்தான் பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது” என்று கூறி முடக்கப்பட்ட 746 கோடியை விடுவித்து உத்தரவிட்டது.