Published:Updated:

ஓ.பன்னீர்செல்வம் vs எடப்பாடி பழனிசாமி... மோடி, அமித் ஷாவின் ஆதரவு யாருக்கு?!

பன்னீர், எடப்பாடி, மோடி

``ஆரம்பம் முதலே பா.ஜ.க-வின் நம்பிக்கைக்கு உரிய நபராகத் திகழ்கிறார் பன்னீர். அமித் ஷா சொன்ன கூட்டணி வியூகங்களை பன்னீர் ஏற்றார். இதுவரையில் பன்னீர் அ.தி.மு.க இணைந்து செயல்படவே விரும்புகிறார்.”

ஓ.பன்னீர்செல்வம் vs எடப்பாடி பழனிசாமி... மோடி, அமித் ஷாவின் ஆதரவு யாருக்கு?!

``ஆரம்பம் முதலே பா.ஜ.க-வின் நம்பிக்கைக்கு உரிய நபராகத் திகழ்கிறார் பன்னீர். அமித் ஷா சொன்ன கூட்டணி வியூகங்களை பன்னீர் ஏற்றார். இதுவரையில் பன்னீர் அ.தி.மு.க இணைந்து செயல்படவே விரும்புகிறார்.”

Published:Updated:
பன்னீர், எடப்பாடி, மோடி

அ.தி.மு.க-வில் நடைபெற்றுவரும் உட்கட்சிப் பிரச்னையை வைத்து ஒரு படமே எடுக்கலாம் என்கின்றனர் கட்சித் தொண்டர்கள். அந்த அளவுக்கு பன்னீர், எடப்பாடி தரப்புக்கு இடையிலான முட்டல் மோதல்கள் நீடித்தவாறு இருக்கின்றன. ஒற்றைத் தலைமையில் ஆரம்பித்த பிரச்னை இப்போது மோடி, அமித் ஷாவின் ஆதரவு யாருக்கு என்பதைப் பங்கு பிரிக்கும்  அளவுக்குச் சென்றிருக்கிறது. 

அமித் ஷா - எடப்பாடி
அமித் ஷா - எடப்பாடி

திண்டுக்கல் காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் கடந்த 11-ம் தேதி நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். மோடியின் வருகையால் போட்டி போட்டுக்கொண்டு இரு தரப்பும் சந்திக்க நேரம் கேட்டிருக்கிறது. ஆனால், "ஒன்றாக வாருங்கள்... ஒன்றாகச் செல்லுங்கள்" என்று பதில் கிடைத்திருக்கிறது டெல்லியிலிருந்து. இதற்கு பன்னீர் சம்மதம் தெரிவித்தாலும், எடப்பாடி வேறு வழியில்லாமல் சம்மதம் தெரிவித்ததாக அதிமுக-வின் மூத்த நிர்வாகிகள் கூறுகிறார்கள். 

இருந்தாலும், `எடப்பாடியிடம் கட்சி சார்ந்த விஷயங்களை இரண்டு நிமிடம் மோடி பேசியதாகவும், ஆனால், பன்னீரிடம் பூங்கொத்து மட்டுமே வாங்கிய மோடி பெரிய அளவில் ஏதும் பேசவில்லை’ என்கிறது எடப்பாடி தரப்பு. இந்த நிலையில்,  அடுத்தநாளே சென்னையில் நடைபெற்ற தனியார் நிறுவன   நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக வந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. இந்த விழாவில் பங்கேற்க முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதேபோல், எடப்பாடி, பன்னீருக்கும் அழைப்பிதழ் சென்றிருக்கிறது. இந்த அழைப்பை ஏற்று பன்னீர்செல்வம் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவருக்கு முதல் இருக்கையில் இடம் ஒதுக்கப்பட்டது. மோடி நிகழ்ச்சிக்கு முதல் ஆளாகச் சென்று கலந்துகொண்ட எடப்பாடி, அமித் ஷாவின் நிகழ்ச்சியிலும் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

பன்னீர்
பன்னீர்

இது குறித்து அ.தி.மு.க மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். "கடந்த செப்டம்பர் மாதம் டெல்லிக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி, அமித் ஷாவைச் சந்தித்தார். இந்தச் சந்திப்புக்குப்  பின்னர் கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம், நடந்தாய்  வாழி காவிரி திட்டம் ஆகியவற்றை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று பேசியதாகவும், அரசியல்ரீதியாகப் பேசவில்லை என்றும் எடப்பாடி தெரிவித்தார். ஆனால், இந்தச் சந்திப்பின்போது, அ.தி.மு.க ஒற்றுமையுடன் இருந்தால்தான் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றிபெற முடியும். பிரிந்து இருப்பது கட்சிக்கு நல்லதல்ல என்று அமித் ஷா தெரிவித்தாராம்.

பன்னீர், எடப்பாடி, மோடி
பன்னீர், எடப்பாடி, மோடி

ஆனால், `எங்களை ஒட்டவைக்க முடியாது. பெரும்பான்மையான ஆதரவு எனக்குத்தான் இருக்கிறது’ என்று எடப்பாடி  திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார். இதைக் கேட்ட அமித் ஷா எதுவும் பேசாமல் நன்றி சொல்லிவிட்டார். அமித் ஷாவின் பேச்சை இப்போது மட்டுமில்லை. 2021 சட்டமன்றத் தேர்தலின்போதும் எடப்பாடி மறுத்துப் பேசினார். கூட்டணி வியூகங்கள், தேர்தல் வியூகங்களை அமித் ஷா வகுத்துக் கொடுத்தபோதுகூட அதை எடப்பாடி ஏற்கவில்லை.

இதனால், ஆரம்பம் முதலே எடப்பாடிக்கும், அமித் ஷாவுக்கும் ஓர் இடைவெளி இருந்துகொண்டே இருந்தது.  நிகழ்ச்சியைப்  புறக்கணித்ததன் மூலம் இது வெட்டவெளிச்சமாகியிருக்கிறது. ஆனால், பன்னீர் அப்படி இல்லை. ஆரம்பம் முதலே பா.ஜ.க-வின் நம்பிக்கைக்கு உரிய நபராகத் திகழ்கிறார். அமித் ஷா சொன்ன கூட்டணி வியூகங்களை பன்னீர் ஏற்றார். இதுவரை பன்னீர் அ.தி.மு.க இணைந்து செயல்படவே விரும்புகிறார்" என்றனர். 

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

இதேபோல், உச்ச நீதிமன்றத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த வழக்கு வரும் 21-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கின் மீதான தீர்ப்பு வெளியாகும் பட்சத்தில் அ.தி.மு.க-வில் பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது என்கின்றார்கள் அரசியல் நோக்கர்கள்.