Published:Updated:

`விளம்பரம் தேடிச் செல்வார்; பேட்டி கொடுப்பார்!’ - யாரைச் சொல்கிறார் முதல்வர்?

தி.மு.க கூட்டணி எந்த நல்லதும் செய்தது இல்லை. நாட்டு மக்களுக்கு நல்ல திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதற்கு மாநில அரசு துணை நிற்கிறது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

கோவை விமான நிலையத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட மழை பாதிப்புகளைப் பார்வையிடவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லவும், நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டு தேவையான நடவடிக்கை எடுக்கவும் துணை முதலமைச்சர் நீலகிரி செல்கிறார்'’ என்றார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

கொள்ளிடம் ஆற்றில் முக்கொம்பு அணை உடைந்தது சரி செய்யாமல் இருப்பதால் கடைமடை பகுதிக்குத் தண்ணீர் செல்லுமா என்ற கேள்விக்கு, 'இது தவறான கருத்து. கொள்ளிடம் ஆற்றில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 70 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள தூண்கள் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. மேலும், அங்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தண்ணீர் வீணாகாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்

ஸ்டாலின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, ``ஸ்டாலின் விளம்பரப்படுத்துவதற்காகத்தான் நீலகிரி சென்றாரா. பாதிப்பு ஏற்பட்ட மறுநாளே வருவாய்த்துறை அமைச்சர் நீலகிரிக்குச் சென்று, துரிதமாக நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன. ஸ்டாலின் விளம்பரம் தேட ஒருநாள் செல்வார். ஸ்டாலின் சீன் காட்டுவார், பத்திரிகைகளில் பேட்டியளிப்பார். அதோடு முடிந்துவிடும். ஆனால், நாங்கள் அப்படி அல்ல. அரசு துரிதமான நடவடிக்கை எடுத்து வருகிறது.

முதல்வர் பழனிசாமி
முதல்வர் பழனிசாமி

பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நிவாரணம் அளிப்போம். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிதி ஒதுக்கி தேவையான வசதிகள் செய்து தரப்படும். சேத மதிப்பீட்டை பார்வையிட ஓ.பி.எஸ் செல்கிறார். சேத மதிப்பீடு தெரிந்த பின்னரே மத்திய அரசிடம் நிதி கோர முடியும்” என்றார். இறுதியாக காஷ்மீர் விவகாரம் தொடர்பான கேள்விக்கு, ``தி.மு.க கூட்டணி எந்த நல்லதும் செய்தது இல்லை. நாட்டு மக்களுக்கு நல்ல திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதற்கு மாநில அரசு துணை நிற்கிறது" என்றார்.