Published:Updated:

` உலகின் 8-வது அதிசயம் எடப்பாடி பழனிசாமி!' - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

இரா.மோகன்

`இது, மோடி வழி அல்ல. எடப்பாடி வழி. இதை மோடி வழி என்று கூறினாலும் தப்பில்லை’ என்கிறார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

Minister R.B.Udayakumar
Minister R.B.Udayakumar ( உ.பாண்டி )

``தமிழகத்திற்காக உலகத் தமிழர்களிடையே முதலீட்டை ஈட்டு வந்த முதல்வர் எடப்பாடி, உலகின் எட்டாவது அதிசயமாகத் திகழ்கிறார். அவரது வழியை வருங்காலத்தில் அனைத்து முதல்வர்களும் பின்வற்றுவதன் மூலம், இது மோடி வழி அல்ல எடப்பாடி வழி'' என அமைச்சர் உதயகுமார் புகழாரம் சூட்டினார்.

R.B.Udayakumar
R.B.Udayakumar
உ.பாண்டி

பரமக்குடியில் நடைபெற்றுவரும் இமானுவேல் சேகரனின் 62-வது நினைவுதினம் கடைபிடிக்கப்பட்டுவருகிறது. இதையொட்டி, இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அ.தி.மு.க சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அஞ்சலிசெலுத்தினார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், ''ஜெயலலிதாவின் ஆணைக்கு இணங்க, இந்த அரசு ஆண்டு தோறும் வீரத் தியாகி இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் வீர அஞ்சலி செலுத்திவருகிறோம். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உலகம் முழுவதும் சென்று 8,300 கோடி அளவிலான முதலீடுகளைப் பெற்று வந்துள்ளார். உலகின் எட்டாவது அதிசயமாக எடப்பாடி நிகழ்த்தியுள்ள இந்தச் சாதனையை வெள்ளைமனம் இல்லாத காரணத்தால், ஸ்டாலின் வெள்ளை அறிக்கை கேட்கிறார்.

ஐந்து முறை நிகழ்த்தவில்லை. அவர்கள் தவறவிட்ட வாய்ப்பை, அவர்கள் செய்யாததை, அவர்கள் சாதிக்காததை முதல்வர் எடப்பாடி சாதித்துள்ளார். இதை, வரும் காலங்களில் அனைத்து முதல்வர்களும் பின்பற்றுவார்கள். இது, மோடி வழி அல்ல. எடப்பாடி வழி. இதை மோடி வழி என்று கூறினாலும் தப்பில்லை. தமிழகத்தின் முதல்வராக தி.மு.க-வினர் இருந்தாலும் இது போன்ற சாதனையை அவர்கள் கூறும் வகையில் செயல்பட்டு வருகிறார், முதல்வர் எடப்பாடி.

உதயகுமார் அஞ்சலி
உதயகுமார் அஞ்சலி
உ.பாண்டி

ஜெயலலிதா 110 விதிகளின்படி அறிவித்த பல திட்டங்களுக்கு வெள்ளை அறிக்கை கேட்டவர் ஸ்டாலின். அவரது வெள்ளை அறிக்கை அரசியலும் மாயத் தோற்ற அரசியலும் தமிழக மக்களிடம் எடுபடாது'' என்றார். அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருடன், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி, முன்னாள் எம்.பி அன்வர்ராஜா, எம்.எல்.ஏ-க்கள் சதன் பிரபாகர், மாணிக்கம், நாகராஜன் , மாவட்டச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.