Published:Updated:

`பேசக் கூடாது என்றாலும் பேசுகிறார்; அவரை இயக்குவது யார்?'- முதல்வரைக் கொதிக்க வைத்த ராஜேந்திர பாலாஜி

எடப்பாடி பழனிசாமி

நாம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தும் இவர் இப்படிப் பேசினால் என்ன அர்த்தம். இவரை யாரும் பேச வைக்கிறார்களா, இவர் பேசிய மறுகணமே பா.ஜ.க ஆதரவு தெரிவிக்கிறது.

`பேசக் கூடாது என்றாலும் பேசுகிறார்; அவரை இயக்குவது யார்?'- முதல்வரைக் கொதிக்க வைத்த ராஜேந்திர பாலாஜி

நாம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தும் இவர் இப்படிப் பேசினால் என்ன அர்த்தம். இவரை யாரும் பேச வைக்கிறார்களா, இவர் பேசிய மறுகணமே பா.ஜ.க ஆதரவு தெரிவிக்கிறது.

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி

`தலைமை உத்தரவு இல்லாமல் பத்திரிகையாளர்களிடம் பேசக் கூடாது' எனக் கட்சி நிர்வாகிகளைத் தனித்தனியாக அழைத்து எச்சரிக்கை விடுத்து அனுப்பினார் எடப்பாடி. அப்படியிருந்தும் மீண்டும் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக ராஜேந்திர பாலாஜி பேசிய விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதோடு, `அவரை யாராவது பேச வைக்கிறார்களா..? இதே நிலை தொடர்ந்தால் கண்டிப்பாக அவரது பதவியைப் பறிக்க நேரிடும்' என்று கோபத்தைக் காட்டியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

அண்மையில் நடந்த துக்ளக் பொன்விழாவில், பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன. இதை எதிர்த்து திராவிடர் கழகம், தி.மு.க உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களுடைய கண்டனத்தைப் பதிவு செய்திருந்தன. பெரியார் குறித்த ரஜினியின் பேச்சுக்குப் பதில் கொடுத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ``ரஜினி, பெரியார் குறித்து தவறாக ஏதும் பேசவில்லை. என்னைப் பொறுத்தவரைப் பெரியார் குறித்து ரஜினி பேசி இருப்பது யாருக்கும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவர் நடந்த நிகழ்வை மட்டுமே கூறியிருக்கிறார். பிடித்தவர்கள் அவரது கருத்தை ஏற்றுக்கொள்ளட்டும். பிடிக்காதவர்கள் அமைதியாக இருந்துகொள்ளட்டும். ரஜினியை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வது தேவையற்ற செயல்`` என்றார். கூடவே, ``சசிகலா விரைவில் சிறையிலிருந்து வர வேண்டும் என்பதே எனது எண்ணம். இதற்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்`` என்றார். இந்தப் பேச்சுதான் அ.தி.மு.க தலைமையைக் கோபப்படுத்தியதாகச் சொல்கிறார்கள்.

ராஜேந்திரபாலாஜி
ராஜேந்திரபாலாஜி
ஆர்.எம்.முத்துராஜ்

இதையடுத்து, அமைச்சர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார் முதல்வர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சர்ச்சையாகப் பேசும் அமைச்சர்களை மட்டும் தனித்தனியாக அழைத்துப் பேசியிருக்கிறார்.

அப்போது, ``தனித்தனியாகப் பத்திரிகையாளர்களிடம் பேசுவதால் கூட்டணிக் கட்சிகளுக்குள் பல்வேறு குழப்பங்கள் எழுந்துகொண்டே இருக்கின்றன. ஆட்சி நடத்துவதில் பல்வேறு சிரமங்கள் இருக்கின்றன. இத்தோடு உங்களது பேச்சை நிறுத்திக்கொள்ளுங்கள், இல்லையென்றால் கட்சியில் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்" என்று அதிரடியாகப் பேசி அனுப்பியுள்ளாராம். இந்த நிலையில், திருச்சியில் பா.ஜ.க பிரமுகர் விஜயரகு கொலை வழக்கில் சர்ச்சையான கருத்துகளைப் பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``இஸ்லாமியப் பயங்கரவாதத்தைக் கையில் பிடித்துக்கொண்டு போய்க்கொண்டிருக்கிறார்கள். இப்படியே இந்துக்களைக் கொல்லும் வேலையைத் தொடர்ந்தார்கள் என்றால், பிரச்னை வேறுவிதமாகச் செல்லும். மேலும், இந்துக்களைக் கொல்லும் இயக்கத்துக்கு தி.மு.க. துணை போனால், இந்து பயங்கரவாதம் உருவாவதைத் தடுக்க முடியாது" என்றார். அதைத் தொடர்ந்து ``இஸ்லாமியர்கள் வாழக்கூடிய தெருக்களில் முன்பெல்லாம் அ.தி.மு.க-வுக்குப் பாதிக்குப்பாதி ஓட்டு விழுந்தது.

ஓ.பி.எஸ், எடப்பாடி பழனிசாமி
ஓ.பி.எஸ், எடப்பாடி பழனிசாமி

இப்போது பத்து ஓட்டுகூட கிடைப்பதில்லை. இளைஞர்களை மூளைச் சலவை செய்கிறார்கள். ஆயுதம் ஏந்த வைக்கிறார்கள்" என்று கூறி பரபரக்க வைத்தார்.

அவரது இந்தப் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம் எழுந்தது. இந்தநிலையில், அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமெனக் கோரி தி.மு.க தமிழக ஆளுநரிடம் மனு அளித்துள்ளது.

இந்தச் சூழலில்தான் நேற்று அமைச்சரவைக் கூட்டத்தில் ராஜேந்திர பாலாஜியின் தொடர் பேச்சுகள் குறித்து முதல்வரும், சில சீனியர் அமைச்சர்களும் தனிப்பட்ட முறையில் விவாதித்துள்ளனர். அமைச்சரவைக் கூட்டத்துக்கு முன்பே, ``ராஜேந்திர பாலாஜி ஏன் இப்படி நடந்துகொள்கிறார். நான் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தும் இப்படிப் பேசினால் என்ன அர்த்தம். இவரை யாரும் பேச வைக்கிறார்களா, இவர் பேசிய மறுகணமே பா.ஜ.க ஆதரவு தெரிவிக்கிறது.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

இவரை யாராவது இயக்குகிறார்களா.. பா.ஜ.க-வின் கொள்கை வேறு, நம்முடைய கொள்கை வேறு. அடுத்தடுத்து தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. இப்படிப் பேசினால் நமக்கு எதிராகப் போய்விடாதா? இனிமேல் இதுபோன்ற கருத்துகளைப் பேசக்கூடாது. துறை சார்ந்து வேண்டுமானால் பேசிக்கொள்ளட்டும். வேறு எதுவும் பேசக் கூடாது" எனக் கறாராகக் கூறியவர், `தொடர்ந்து இப்படியே பேசினால் கண்டிப்பாகப் பதவி பறிக்கப்படும் என்று கண்டிப்புடன் சொல்லிவிடுங்கள்' என சீனியர் அமைச்சர் ஒருவரிடம் கொதிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் முதல்வர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism