Published:Updated:

``காகிதம் பார்க்காமல் திமுக எம்.எல்.ஏ-க்கள் பெயரைச் சொல்ல முடியுமா?” - ஸ்டாலினுக்கு எடப்பாடி சவால்

எடப்பாடி பழனிசாமி

``திமுகவிலுள்ள அனைத்து எம்.எல்.ஏ-க்களின் பெயரையும் தொகுதியைக் குறிப்பிட்டு ஸ்டாலினால் சொல்ல முடியுமா... காகிதம் பார்க்காமல் சொல்ல வேண்டும்.” - எடப்பாடி பழனிசாமி

``காகிதம் பார்க்காமல் திமுக எம்.எல்.ஏ-க்கள் பெயரைச் சொல்ல முடியுமா?” - ஸ்டாலினுக்கு எடப்பாடி சவால்

``திமுகவிலுள்ள அனைத்து எம்.எல்.ஏ-க்களின் பெயரையும் தொகுதியைக் குறிப்பிட்டு ஸ்டாலினால் சொல்ல முடியுமா... காகிதம் பார்க்காமல் சொல்ல வேண்டும்.” - எடப்பாடி பழனிசாமி

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கோவை மாவட்டம், பொள்ளாச்சிக்கு வந்திருந்தார். அவருக்குத் தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். அதை ஏற்றுக்கொண்டு பேசிய எடப்பாடி பழனிசாமி, ``நாட்டு மக்களுக்கே அடையாளம் தெரியாத முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். நீட் தேர்வைக் கொண்டு வந்தது திமுக-தான்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ஆனால், அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிமுக ஆட்சியில்தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டதாகப் பொய் சொல்கிறார். நீட் தேர்வை ரத்துசெய்ய அதிமுக கடைசிவரை போராடியது. திமுக ஆட்சிக்கு வந்ததும், முதல் கையெழுத்தில் நீட் தேர்வை ரத்துசெய்வோம் என ஸ்டாலின் கூறினார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கமிஷன்... கலெக்‌ஷன்... கரப்ஷன் இதுதான் திராவிட மாடல். எல்லாத்துறைகளிலும் ஊழல் நடக்கிறது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டத்தைத் திருடி, ரிப்பன் கட்டி திறக்கின்றனர். 12 சதவிகிதத்திலிருந்து 52 சதவிகிதம் வரை மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். இந்த உயர்வால், மாதம்தோறும் அரசுக்கு ரூ1,750 கோடி வருவாய் கிடைக்கும்.

மின்கட்டணம் உயர்வு
மின்கட்டணம் உயர்வு

ஆனால், மக்களின் கஷ்டங்களைக் கருதி அதிமுக ஆட்சியில் மின்கட்டணம் உயர்த்தவில்லை. சொத்து வரியையும் உயர்த்திவிட்டனர். அடுத்து பேருந்துக் கட்டணத்தையும் உயர்த்தவிருக்கின்றனர்.

விடியா அரசுக்கு மக்கள் படுகின்ற துன்பத்தைப் பற்றிக் கவலையில்லை. சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. அதிமுக எம்.எல்.ஏ-க்களுக்கே என்னை அடையாளம் தெரியாது என ஸ்டாலின் கூறுகிறார். எனக்கு எல்லா எம்.எல்.ஏ-க்களையும் அடையாளம் தெரியும். மேடையில் உள்ள கூட்டத்தில் என்னை நசுக்கி எடுக்கின்றனர். இதுபோல ஓர் இடத்தில் அவரைப் பார்க்க முடியுமா?

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ஒரு நசுக்கு நசுக்கினால் முடிந்துவிடும். அதிமுக-விலுள்ள அனைத்து எம்.எல்.ஏ-க்கள் பெயர்களையும் தொகுதியுடன் நான் சொல்கிறேன். அதேபோல திமுக-வில் உள்ள அனைத்து எம்.எல்.ஏ-க்களின் பெயர்களையும் தொகுதியைக் குறிப்பிட்டு ஸ்டாலினால் சொல்ல முடியுமா... காகிதம் பார்க்காமல் சொல்ல வேண்டும்.

திமுக வரலாற்றில் செயல் தலைவராக இருந்த ஒரே நபர் ஸ்டாலின்தான். கருணாநிதி படுத்த படுக்கையாக இருந்தபோதுகூட ஸ்டாலினை நம்பவில்லை. அதிமுக-வில் அப்படி இல்லை. விவசாயி முதல்வராக முடியும். எடப்பாடி பழனிசாமி இல்லாவிடினும், இங்கு யார் வேண்டுமானாலும் முதல்வராக முடியும்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

அதேபோல திமுக-வில் ஸ்டாலினுக்குப் பிறகு யார் வேண்டுமானாலும் முதல்வராகலாம் எனச் சொல்ல முடியுமா... இந்த ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை” என்றார்.