விறுவிறுப்பான தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பஞ்ச் ஆகப் பேசியவற்றில் கவனம் ஈர்த்த சில வசனங்கள் இங்கே...
``எவ்வளோ சூழ்ச்சி செய்யப் பார்த்தார் ஸ்டாலின்... கட்சியை உடைக்க முயற்சி செய்தார் ஸ்டாலின். எல்லாவற்றையும் தவிடு பொடியாக்கினோம். திமுக., வீட்டு மக்களுக்காக இருக்கிற கட்சி. அதிமும., நாட்டு மக்களுக்காக இருக்கிற கட்சி.’’

``ஆண்டவனா பார்த்து இந்த மக்களுக்காக முதல்வர் ஆன விவசாயி நான். ஊர்ந்து போயி முதல்வராக நான் பாம்பும் இல்லை; பல்லியும் இல்லை. நடந்து போய்த்தான் முதல்வரானேன்."
``திரைப்படத்தில் நட்சத்திரமாக ஜொலித்தவர் குஷ்பு, அதேபோல அரசியலிலும் நட்சத்திரமாக ஜொலித்துக்கொண்டிருக்கிறார். நீங்கள் வைக்கும் கோரிக்கைகளை நேரடியாக டெல்லிக்குக் கொண்டு செல்லும் ஆற்றல் படைத்தவர் குஷ்பு.’’

``மத்தியிலும் மாநிலத்திலும் இணக்கமான உறவு இருந்தால்தான் மாநில ஆட்சி சிறப்பாக நடைபெற முடியும். அப்போதுதான் சிறப்பான வளர்ச்சியைப் பெற முடியும் என்கிற நோக்கத்தில்தான் மத்தியில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளோம்.’’
``என் தாயைப் பற்றியே இழிவாகப் பேசுகின்றனர். ஒரு முதல்வரான எனக்கே இந்த நிலை என்றால், சாதாரண தாய்மார்களின் நிலையை நினைத்தால் பயமாக இருக்கிறது. பெண்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பதற்கே முதல்வராக இருக்கிறேன்."

``அ.தி.மு.க கூட்டணி மெகா கூட்டணி, வெற்றிக்கூட்டணி. தி.மு.க கூட்டணி சந்தர்ப்பவாதக் கூட்டணி.’’
நாளை மறுநாள் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த பஞ்ச்களுக்கெல்லாம் இன்று மாலை 7 மணி வரை மட்டுமே அனுமதி.
- புஹாரி ராஜா