Published:Updated:

``திமுக பொறுப்பேற்றதிலிருந்து தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது" - எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

சட்டப்பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு செய்ததையடுத்து, ``திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது" என எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்துள்ளார்.

``திமுக பொறுப்பேற்றதிலிருந்து தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது" - எடப்பாடி பழனிசாமி

சட்டப்பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு செய்ததையடுத்து, ``திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது" என எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்துள்ளார்.

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டமன்றத்தில் உரையாற்றினார். இந்த உரையில், விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளதாக ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையே, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக குற்றம்சாட்டிய அதிமுக-வினர் அதைத் தடுத்து நிறுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்து பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அ.தி.மு.க-வின் வெளிநடப்புக்குப் பின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

எடப்பாடி பழனிசாமி-ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி-ஸ்டாலின்

அப்போது விருதுநகர் சம்பவம் குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, ``இது போன்ற எத்தனை பெண்களை அவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இதை முறையாக விசாரித்து, குற்றம் இழைத்தவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று சட்டமன்றத்தில் வலியுறுத்தியிருக்கிறோம்" எனக் கூறினார்.

மேலும், வேலூர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை குறித்துப் பேசியபோது, ``குற்றம் செய்தவர்களை விசாரித்துவிட்டு, காவல்துறை விடுவித்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கிறது. குற்றம் செய்தவர்களே குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், காவல்துறை குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இந்த அரசு, பொறுப்பேற்றதிலிருந்து தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது" எனப் பத்திரிகையாளர்களிடத்தில் கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism