Published:Updated:

``கிராமம் முதல் நகரம்வரை கஞ்சா விற்பனை அமோகம்; ஆளுங்கட்சியினர் தலையீடு!" - திமுக-மீது இ.பி.எஸ் சாடல்

எடப்பாடி பழனிச்சாமி

`எது கிடைக்கிறதோ, கிடைக்கவில்லையோ தமிழ்நாட்டில் கிராமங்களிலிருந்து நகரங்கள் வரை கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.' - இ.பி.எஸ்

``கிராமம் முதல் நகரம்வரை கஞ்சா விற்பனை அமோகம்; ஆளுங்கட்சியினர் தலையீடு!" - திமுக-மீது இ.பி.எஸ் சாடல்

`எது கிடைக்கிறதோ, கிடைக்கவில்லையோ தமிழ்நாட்டில் கிராமங்களிலிருந்து நகரங்கள் வரை கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.' - இ.பி.எஸ்

Published:Updated:
எடப்பாடி பழனிச்சாமி

அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் கஞ்சா விற்பனை, அது தொடர்பான வழக்குகள் குறித்து, தி.மு.க-வையும், முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாகச் சாடியிருக்கிறார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ``லஞ்ச லாபங்கள் பெறுவதில் தி.மு.க முதன்மையாக விளங்கிக்கொண்டிருக்கிறது. எது கிடைக்கிறதோ, கிடைக்கவில்லையோ தமிழ்நாட்டில் கிராமங்களிலிருந்து நகரங்கள் வரை கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதில் சாதனை படைத்திருக்கிறார்கள். அதேபோல, இன்றைக்குக் காவல்துறை டி.ஜி.பி இந்த கஞ்சாவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக `ஆபரேஷன் கஞ்சா 2.0' என்ற அறிவிப்பை வெளியிட்டு நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்.

கஞ்சா
கஞ்சா

இன்றைய தினம்கூட சுகாதாரத்துறை அமைச்சர், கிட்டத்தட்ட 102 டன் கஞ்சா பிடிபட்டிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். இவ்வளவு கஞ்சாவைத் தமிழ்நாட்டில் இன்றைக்கு விற்பனை செய்துகொண்டிருக்கிறார்கள். இன்னும் கண்டுபிடிக்காதது எவ்வளவு இருக்கிறது என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். இதனால் மாணவர்கள், இளைஞர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். அவர்களின் வாழ்வே சீரழியக்கூடிய நிலையை நாம் பார்க்கிறோம். காவல்துறை மானியத்தில் முதலமைச்சர் தாக்கல்செய்த கொள்கை விளக்கக் குறிப்பில், சுமார் 2,200 கஞ்சா வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருந்தாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதில் 148 பேர்தான் கைதுசெய்திருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். 2,200 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன என்று சொன்னால், அவ்வளவு பேரையும் கைதுசெய்திருக்க வேண்டும்தானே... மற்றவர்களை ஏன் கைதுசெய்யவில்லை?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 ஸ்டாலின்
ஸ்டாலின்

ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் இதில் தலையிட்டு, கஞ்சா விற்பனை செய்துகொண்டிருப்பதால்தான் இன்றைக்கு காவல்துறையின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. காவல்துறை சுதந்திரமாகச் செயல்பட்டால், இந்த கஞ்சா விற்பனையைத் தடை செய்யலாம். இளைஞர்களும் மாணவர்களும் காப்பாற்றப்படலாம். இன்றைக்கு அதிக அளவில் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. இதையெல்லாம் இந்த அரசு தடுத்து நிறுத்த வேண்டும். ஆனால், ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு உரிய முறையில் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இன்றைக்கு நம் இளைஞர்கள், மாணவர்களின் வாழ்வு சீரழியக்கூடிய நிலையைப் பார்க்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism