Published:Updated:

``நீட் என்ற நச்சுவிதையை ஊன்றியது திமுக-தான்!'‍' பிரசாரத்தில் கொதித்த எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

`தி.மு.க தூண்டுதலின் பேரில் காவல்துறையினர் அ.தி.மு.க-வினர் மீது பொய் வழக்குப் போடுகின்றனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எதிர்காலத்தில் காவல்துறை இதற்குப் பதில் சொல்லியே ஆகவேண்டும். ஆட்சி மாறும் காட்சிகள் மாறும்.' - எடப்பாடி

``நீட் என்ற நச்சுவிதையை ஊன்றியது திமுக-தான்!'‍' பிரசாரத்தில் கொதித்த எடப்பாடி பழனிசாமி

`தி.மு.க தூண்டுதலின் பேரில் காவல்துறையினர் அ.தி.மு.க-வினர் மீது பொய் வழக்குப் போடுகின்றனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எதிர்காலத்தில் காவல்துறை இதற்குப் பதில் சொல்லியே ஆகவேண்டும். ஆட்சி மாறும் காட்சிகள் மாறும்.' - எடப்பாடி

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி

திருச்சியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அ.தி.மு.க-வின் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகப்படுத்திவிட்டுப் பேசத்தொடங்கினார். ``தி.மு.க முதல்வர் ஸ்டாலின் அ.தி.மு.க நிர்வாகிகள் மீது பொய் வழக்குப் போட்டுக்கொண்டிருக்கிறார். இதற்கெல்லாம் அ.தி.மு.க அஞ்சாது. அ.தி.மு.க எதையும் தாங்கும் தெம்பும், திராணியும் உள்ள ஒரே கட்சி.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தி.மு.க காவல்துறையைக் கையில் வைத்துக்கொண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கொல்லைப்புறமாக வெற்றிபெற நினைக்கிறது. நீட் வேண்டும் என்று தி.மு.க-வும் அதன் கூட்டணிக் கட்சியினரும் கூறிவிட்டு தற்போது நீட் வேண்டாம் என்று வழக்குப் போடுவது எந்த விதத்தில் நியாயம்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

நீட் என்கிற நச்சுவிதை தி.மு.க ஆட்சிக் காலத்தில்தான் ஊன்றப்பட்டன. நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை. கடைசிவரையிலும் வாய் சவடால் பேச்சுதான் நடந்துகொண்டிருக்கிறது. தி.மு.க-வின் பகல் வேஷம் கலைந்துவிட்டது. முதல்வருக்கெல்லாம் முதல்வர் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஸ்டாலின் ஏன் பிற கட்சிகளுடன் கூட்டணி வைக்கவேண்டும்.

கொடநாடு கொலைக் குற்றவாளிகளைக் கைது செய்தது அ.தி.மு.க அரசுதான். அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு ஜாமீன் வழங்கியது தி.மு.க அரசுதான். அ.தி.மு.க-வை குற்றம்சாட்ட எந்த அருகதையும் இல்லாத ஒரே கட்சி என்றால் அது தி.மு.க தான். சட்டரீதியாகச் சந்திக்கக் கூடியவற்றை நாம் சட்டரீதியாகவும் சந்திப்போம். நாங்கள் ஒருபோதும் குற்றவாளிகளுக்குப் பரிந்து பேசமாட்டோம்.

வேட்பாளர்கள்
வேட்பாளர்கள்

தி.மு.க தூண்டுதலின் பேரில் காவல்துறையினர் அ.தி.மு.க-வினர் மீது பொய் வழக்குப் போடுகின்றனர் இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எதிர்காலத்தில் காவல்துறை இதற்குப் பதில் சொல்லியே ஆகவேண்டும். தமிழகக் காவல்துறை ஸ்டாலின் அரசுக்கு ஏவல் துறையாக மாறிச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆட்சி மாறும் காட்சிகள் மாறும். எனவே காவல்துறை நடுநிலையோடு செயல்பட வேண்டும்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தில் பூங்கா, உய்யக்கொண்டான் கால்வாய், சத்திரம் பேருந்து நிலையம், பஞ்சப்பூர் மின் உற்பத்திக்காக சோலார் பேனல் என ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறோம். சுமார் 350 கோடி மதிப்பீட்டில் முக்கம்பூர் தடுப்பணையுடன் கூடிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. கம்பரசம்பேட்டை பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டது. இது போன்று பல பணிகள் பல கோடி மதிப்பில் திருச்சியில் நிறைவேற்றியிருக்கிறோம். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்று ஸ்டாலின் குற்றம்சாட்டுகிறார்.

எடப்பாடி
எடப்பாடி

மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையைக் குறைத்தது. இதனால் 25 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது. ஆனால், தமிழக அரசு குறைக்கவில்லை. இவர்களா மக்கள் மீது அக்கறை உள்ளவர்கள். இவர்களின் கபட நாடகம் மக்களுக்கு முழுமையாகத் தெரிந்துவிட்டது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க அமோகமாக வெற்றிபெற நீங்கள்தான் வாக்களிக்கவேண்டும்" என்றார்.