Published:Updated:

``அதிமுக-வை பலவீனப்படுத்த சிலர் முயல்கிறார்கள்” - எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு

எடப்பாடி பழனிசாமி

அதிமுக-வில் ஒற்றைத் தலைமை சர்ச்சை மிகப்பெரிய அளவில் வெடித்திருக்கும் இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி, கட்சியின் ஐடி விங் நிர்வாகிகள் மத்தியில் பேசும் வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது!

அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் ஒற்றைத் தலைமை சர்ச்சை மிகப்பெரிய அளவில் வெடித்திருக்கிறது. இந்த விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி பேச வேண்டும் என ஓ.பி.எஸ் பேசிவந்த நிலையில், வெளிப்படையாக எடப்பாடி கருத்து தெரிவிக்காமல் இருந்துவந்தார்.

இந்த நிலையில் அதிமுக ஐடி விங் நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிசாமி பேசுவதுபோல் ஒரு வீடியோ வெளியாகியிருக்கிறது. அதில், ``அதிமுக எனும் கட்சியை பலவீனப்படுத்த சிலர் முயல்கிறார்கள். அதிமுக எந்தக் காலத்திலும் வீழ்ந்ததாகச் சரித்திரம் கிடையாது. அதிமுக-வை பலவீனப்படுத்த நினைப்போர் முயற்சியை கட்சியின் சமூக வலைதளப் பிரிவினர் முறியடிக்க வேண்டும்” என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism