Published:Updated:

தமிழகத்தில் வலுக்கும் போராட்டம்: எடப்பாடிக்கு உளவுத்துறை 'அலர்ட்' நோட்!

திருச்சி ஆர்ப்பாட்டத்தில் திரண்ட பொதுக்கூட்டமும் ஆளுங்கட்சியை யோசிக்கவைத்திருக்கிறதாம். முதல்வருக்கு பாதுகாப்புப் பிரச்னைகள் வரலாம் என்று அலர்ட் கொடுக்கப்பட்டதால், பாதுகாப்பை அதிகரித்திருக்கிறார்கள்

எடப்பாடி
எடப்பாடி

கழுகாருக்காக ஸ்பெஷலாக ஆர்டர் செய்திருந்த இளநீர் அல்வாவை அவர் முன் வைத்துவிட்டு, ''குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்துக்கொண்டிருக்கும்போது டெல்லிக்குப் பறந்துள்ளாரே முதல்வர் எடப்பாடி?'' என்று கேட்டோம். அல்வாவைச் சுவைத்துக்கொண்டே நம்மிடம் பேசினார் கழுகார்.

''சென்னையில் அவருடைய வீட்டை இஸ்லாமிய அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திக்கொண்டிருந்தபோது சேலத்தில் இருந்த அவர், அப்படியே டெல்லிக்குப் பறந்துவிட்டார். கூடவே மூத்த அமைச்சர்கள் குழுவும் சென்றுள்ளது. காந்தியின் 150-வது ஆண்டு விழாக் கொண்டாட்டம் குறித்து அனைத்து மாநில முதல்வர்களின் ஆலோசனைக்கு பிரதமர் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்தது. அதில் கலந்துகொள்ளத்தான் இந்தப் பயணம்.''

''தி.மு.க-வுடன் நெருங்குகிறாரா கமல்?''

''அதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தி.மு.க நடத்தும் பேரணி பற்றிய ஆலோசனைக்காக கூட்டணிக் கட்சிகளை அழைத்திருந்தார் ஸ்டாலின். அதற்கு கமலையும் அழைப்பதாக இருந்தார்களாம். ஆனால், `அவர் வந்தால் ஊடகத்தின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துவிடுவார்' என்று ஸ்டாலினிடம் சிலர் சொல்ல, அதுவும் சரிதான் என்று அழைக்கவில்லையாம். ஆனால், அதற்குப் பிறகு ஆர்.எஸ்.பாரதி நேரில் போய் கமலுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.''

''பேரணி பிரமாண்டமாக நடைபெறும்போலிருக்கிறதே?''

''ஆமாம். ஏற்கெனவே திருச்சியில் இஸ்லாமியர்கள் நடத்திய பேரணியே ஆளுங்கட்சியை அதிரவைத்திருக்கிறது. இந்தப் பேரணிக்கு எவ்வளவு கூட்டம் வருமோ, இது உள்ளாட்சித் தேர்தலிலும் பாதிப்பை ஏற்படுத்துமோ எனக் கவலைப்படுகிறது ஆளுங்கட்சித் தலைமை.''

ஹர்ஷ் மந்தர், ராமச்சந்திர குஹா என மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் பலரும் களமிறங்கிப் போராட ஆரம்பித்திருக்கிறார்கள்

''தமிழக காங்கிரஸ் சார்பில் தனியாக எந்தப் போராட்டமும் நடத்தவில்லை என்று அந்தக் கட்சியின் சிறுபான்மைப் பிரிவினர், தேசியத் தலைமைக்குப் புகார் அனுப்பியிருக்கிறார்களாமே?''

''நானும் கேள்விப்பட்டேன். குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச்சிறுத்தைகள் எனக் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் போராட்டம் நடத்தி வருகின்றன. ஆனால், காங்கிரஸ் மட்டும் எந்த ஒரு போராட்டத்தையும் அறிவிக்கவில்லை. ப.சிதம்பரம் கைதுசெய்யப்பட்டபோது நான்கைந்து போராட்டங்களை நடத்திய கே.எஸ்.அழகிரி, இப்போது மெளனமாக இருக்கிறார் என்று புகார் அனுப்பியிருக்கிறார்களாம்.''

''நானும் கேள்விப்பட்டேன். குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச்சிறுத்தைகள் எனக் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் போராட்டம் நடத்தி வருகின்றன. ஆனால், காங்கிரஸ் மட்டும் எந்த ஒரு போராட்டத்தையும் அறிவிக்கவில்லை. ப.சிதம்பரம் கைதுசெய்யப்பட்டபோது நான்கைந்து போராட்டங்களை நடத்திய கே.எஸ்.அழகிரி, இப்போது மெளனமாக இருக்கிறார் என்று புகார் அனுப்பியிருக்கிறார்களாம்.''

''முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திடீரென பாதுகாப்பை அதிகப்படுத்தியிருக்கிறார்களே?''

''குடியுரிமைச் சட்டத்துக்கு அ.தி.மு.க ஆதரவு அளித்தது தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருப்பதாக முதல்வரிடம் உளவுத்துறை நோட் போட்டிருக்கிறது. திருச்சி ஆர்ப்பாட்டத்தில் திரண்ட பொதுக்கூட்டமும் ஆளுங்கட்சியை யோசிக்கவைத்திருக்கிறதாம். முதல்வருக்கு பாதுகாப்புப் பிரச்னைகள் வரலாம் என்று அலர்ட் கொடுக்கப்பட்டதால், பாதுகாப்பை அதிகரித்திருக்கிறார்கள்.''

''குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிரான போராட்டம் இன்னும் வலுக்குமோ?''

''அப்படித்தான் தெரிகிறது... ஹர்ஷ் மந்தர், ராமச்சந்திர குஹா என மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் பலரும் களமிறங்கிப் போராட ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களை கைதுசெய்தது மேலும் பரபரப்பைக் கூட்டுகிறது. டெல்லியில் இணைய சேவையை முடக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகியிருக்கிறது. சில நாள்களில் எல்லாம் அடங்கிவிடும் என நினைக்கிறதாம் பா.ஜ.க தலைமை'' என்ற கழுகார் சட்டென சிறகுகளை விரித்துப் பறந்தார்.

தமிழகத்தில் வலுக்கும் போராட்டம்: எடப்பாடிக்கு உளவுத்துறை 'அலர்ட்' நோட்!

- இத்துடன், தமிழக ஐ.ஏ.எஸ் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படும் டெண்டர் விவகாரம் குறித்து கழுகார் திரட்டிய பகீர் தகவல்களை முழுமையாக ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க > மிஸ்டர் கழுகு: ரூ.2,000 கோடி டெண்டர்: ஆட்டுவிக்கும் பெரும்புள்ளி... ஐ.ஏ.எஸ் போர்க்கொடி! https://www.vikatan.com/government-and-politics/politics/mister-kazhugu-politics-and-current-affairs-dec-25

"அ.தி.மு.க தான் எனக்கு ஜமாஅத்!"

தமிழகத்தில் வலுக்கும் போராட்டம்: எடப்பாடிக்கு உளவுத்துறை 'அலர்ட்' நோட்!

குடியுரிமை திருத்தச்சட்ட மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த மாநிலங்களவையின் அ.தி.மு.கழக எம்.பி-யான முகமது ஜான் மீது, இஸ்லாமியர்கள் கொந்தளிப்பில் உள்ளனர். `'சொந்த சமூகத்துக்கு துரோகம் இழைத்துவிட்டார்'' என்று கூறி, ராணிப்பேட்டை அனைத்து 'ஜமாஅத்' காப்பாளர் பொறுப்பிலிருந்து முகமது ஜானை அதிரடியாக நீக்கியிருக்கிறது நிர்வாகக் குழு. ''இறை நம்பிக்கைக்கு எதிராகச் செயல்படுகிறார் முகமது ஜான்'' என்று கொந்தளிக்கிறார்கள் ஜமாத்அத் நிர்வாகிகள். ஆனால், எதற்கும் அசராமல் '`ஜமாஅத் பொறுப்பிலிருந்து நீக்கியதால் எந்த பாதிப்பும் இல்லை. என் கட்சிதான் எனக்கு ஜமாஅத்'' என்கிறார் எம்.பி-யான முகமது ஜான்.

- இது தொடர்பான செய்திக் கட்டுரையை ஜூனியர் விகடன் இதழில் விரிவாக வாசிக்க > "அ.தி.மு.க தான் எனக்கு ஜமாஅத்!"

https://www.vikatan.com/government-and-politics/politics/admk-mp-mohammed-john-favour-for-citizenship-amendment-bill

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |