Published:Updated:

``மக்களைப் பாதுகாக்கும் பணியில் உள்ள காவலர்களையும் காக்கத் தவறிய ஆட்சி'' - எடப்பாடி பழனிசாமி காட்டம்

எடப்பாடி பழனிசாமி

``முதலமைச்சரின் காதுகளில் அவரைப் பாராட்டுபவர்களின் குரல்கள் ஓங்கி ஒலிப்பதால், மக்களின் ஓலங்கள் கேட்கவில்லையா...'' - எடப்பாடி பழனிசாமி

``மக்களைப் பாதுகாக்கும் பணியில் உள்ள காவலர்களையும் காக்கத் தவறிய ஆட்சி'' - எடப்பாடி பழனிசாமி காட்டம்

``முதலமைச்சரின் காதுகளில் அவரைப் பாராட்டுபவர்களின் குரல்கள் ஓங்கி ஒலிப்பதால், மக்களின் ஓலங்கள் கேட்கவில்லையா...'' - எடப்பாடி பழனிசாமி

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி

கடலூர் சிறை அருகே உதவி ஜெயிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், ``திமுக பொறுப்பேற்றது முதல் நாள்தோறும் கொலை, கொள்ளை மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள்களின் கூடாரம் என்று கடந்த 15 மாத திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையால் தமிழகமே மயானபூமியாக மாறிவருகிறது.

இதை நான் சட்டமன்றத்திலும், அறிக்கைகள் வாயிலாகவும், செய்தியாளர்கள் பேட்டியிலும் பலமுறை சுட்டிக்காட்டியும் முதலமைச்சரோ, மூத்த அதிகாரிகளோ, காவல்துறையோ எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. சமூகவிரோத சக்திகளும் கொடுஞ்செயல் புரிபவரும் இந்த ஆட்சி தங்களுக்கு லைசென்ஸ் வழங்கியதுபோல் பல்வேறு குற்றங்களைப் புரிந்து மக்களை மிரட்டிவருகிறார்கள்.

ஸ்டாலின் உருக்கம்
ஸ்டாலின் உருக்கம்

சென்னை எண்ணுரைச் சேர்ந்த ரெளடி, வழக்கு ஒன்றில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அந்தச் சிறையின் உதவி ஜெயிலர், திடீர் சோதனை நடத்தும்போது, மேலே குறிப்பிட்ட கைதியிடமிருந்து செல்போன்கள் மற்றும் பேட்டரிகளைப் பறிமுதல் செய்திருக்கிறார் என்றும், இதனால் ஆத்திரமடைந்த அந்தக் கைதி உதவி ஜெயிலருக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 27.8.2022 அன்று கடலூர் சிறை வளாகத்துக்கு அருகில் காவலர் பாதுகாப்புடன்கூடிய காவலர் குடியிருப்பில் அமைந்துள்ள உதவி ஜெயிலர் வீட்டுக்குள் மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசி எறிந்திருக்கிறார்கள். உதவி ஜெயிலர் வெளியூர் சென்றிருந்தாலும், அவருடைய குடும்பத்தினர் வேறு அறையில் இருந்ததாலும் உயிர் தப்பியிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதே போன்று தமிழ்நாட்டிலுள்ள அனைத்துச் சிறைச்சாலைகளிலும் தடைசெய்யப்பட்ட பொருள்களான செல்போன், போதைப்பொருள்கள், ஆயுதங்கள் போன்றவை தாராளமாகக் கிடைப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நேர்மையான முறையில் சோதனைகளை நடத்தி, தடைசெய்யப்பட்ட பொருள்களைப் பறிமுதல் செய்த அதிகாரியை அச்சமூட்டும் வகையில், அவரின் வீடு தாக்கப்படும் சம்பவம் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

போலீஸ்
போலீஸ்

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை தங்கள் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பாற்ற சூழ்நிலை உருவாகி இருக்கிற காரணத்தால் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சி நடுங்குகிறார்கள். அதிமுக ஆட்சியில் அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த தமிழ்நாடு, இன்றைய விடியா திமுக ஆட்சியில் அழிவுப் பாதைக்குச் சென்றுவிட்டது.

முதலமைச்சரின் காதுகளில் அவரைப் பாராட்டுபவர்களின் குரல்கள் ஓங்கி ஒலிப்பதால், மக்களின் ஓலங்கள் கேட்கவில்லையா... மக்களைக் காக்கத் திறமை இல்லாமல், மக்களைப் பாதுகாக்கும் பணியில் உள்ள காவலர்களையும் காக்கத் தவறிய இந்த ஆட்சியாளர்கள் கும்பகர்ண தூக்கத்திலிருந்து விழித்தெழ வேண்டும். இல்லையென்றால் விடியா திமுக அரசை விழித்தெழவைக்கும் அறப்போரில் அதிமுக செயல்படும் என எச்சரிக்கிறேன்'' எனத் தெரிவித்திருக்கிறார்.