Published:Updated:

ஒன் பை டூ

பாபு முருகவேல், இராஜீவ் காந்தி
பிரீமியம் ஸ்டோரி
பாபு முருகவேல், இராஜீவ் காந்தி

‘தமிழக அரசு கொரோனா பாதிப்பைக் குறைத்துக் காட்டுகிறது’ எனும் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டு...

ஒன் பை டூ

‘தமிழக அரசு கொரோனா பாதிப்பைக் குறைத்துக் காட்டுகிறது’ எனும் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டு...

Published:Updated:
பாபு முருகவேல், இராஜீவ் காந்தி
பிரீமியம் ஸ்டோரி
பாபு முருகவேல், இராஜீவ் காந்தி

பாபு முருகவேல், வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர், அ.தி.மு.க.

``மிகச் சரியானது. ஓமைக்ரானும் கொரோனாவும் வேறு வேறல்ல. ஆனால், ஓமைக்ரான் டெஸ்ட் எடுத்தால் ரிசல்ட் வருவதற்கு ஐந்து நாள்களுக்கு மேல் ஆகிறது என்பதற்காக, டெஸ்ட் எடுப்பதையே கைவிட்டுவிட்டார்கள். சோதனைக்கு அனுப்பினால் மட்டுமே உண்மையான பாதிப்பின் அளவு தெரியவரும். அப்போதுதான் எத்தனை பேர் சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள், எத்தனை பேர் மரணமடைந்திருக்கிறார்கள் என்கிற சரியான தகவலும் வரும். கொரோனா பாதிப்பால் மரணமடைபவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் நிதி கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றமும் மத்திய அரசும் சொல்லிவிட்டன. தமிழ்நாட்டில் இதுவரைக்கும் 6 லட்சம் மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால், எத்தனை பேருக்கு நிதி கொடுத்திருக்கிறார்கள் என்கிற தகவல் இல்லை. நிவாரணம் கொடுப்பதற்கு அரசாங்கத்திடம் பணம் இல்லை. அதுமட்டுமல்ல, எண்ணிக்கையை அதிகமாகக் காட்டினால், தேர்தலை நடத்தவோ, டாஸ்மாக்கைத் திறக்கவோ முடியாது. அதனால்தான், பாதிப்பைக் குறைத்துக் காட்டுகிறார்கள். இதுதான் யதார்த்த நிலை. மக்களிடம் உண்மை நிலவரத்தை வெளிப்படையாகச் சொல்லி, அரசு எந்திரங்களின் மூலம் அவர்களுக்குப் பாதுகாப்பளிக்க வேண்டுமே தவிர, மக்கள் பீதியடைவார்கள் என்பதற்காக உண்மைநிலையை மறைப்பது அவர்களுக்குச் செய்யும் துரோகம்!’’

ஒன் பை டூ
ஒன் பை டூ

இராஜீவ் காந்தி, செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க

``ஆதாரமில்லாத, கற்பனையான குற்றச்சாட்டு! அவர்கள் ஆட்சியில் இருக்கும்போது, கொரோனா சமயத்தில் மக்களை மனச்சிதைவுக்கு உள்ளாக்கியதைத் தவிர அவர்கள் எதையும் செய்யவில்லை. நிதி உதவிகளையும் சரியான காலத்தில் வழங்கவில்லை. ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் கடுமையான நிதி நெருக்கடியிலும் ரூ.4,000 நிதியளித்து, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினோம். எங்கள் அரசு கொரோனாவை எதிர்கொண்டவிதத்தை ஒட்டுமொத்த இந்தியாவும் பாராட்டியது. இப்போதும்கூட, பேரிடர் காலத்தில் மக்களை அச்சப்படுத்தக் கூடாது என்பதற்காகத்தான் தளர்வுகளை அறிவித்திருக்கிறோம். தவிர, வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. பாதிப்புகளைக் குறைத்துக்காட்டவேண்டிய எந்த அவசியமும் எங்களுக்கு இல்லை. அவர்களின் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க-வின் சுகாதாரத்துறை அமைச்சகம்தான், நோய்ப் பதிவுகளைக் கண்காணித்துவருகிறது. தவறு இருந்தால், ஒன்றிய அரசு எங்கள்மீது அந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கும். ஓமைக்ரான் பாதிப்பால் உண்டான மரண விகிதங்களில், மற்ற மாநிலங்களைவிட, தமிழ்நாடு குறைவாகத்தான் இருக்கிறது. மக்களிடம் வீண் வதந்திகளைப் பரப்புவதையும், அச்சத்தை உண்டாக்கும் வேலையையும்தான் அ.தி.மு.க செய்துவருகிறது!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism