Published:Updated:

``வீட்டுக்காக அரசாங்கம் நடத்தும் கட்சி திமுக!" - திண்டிவனத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

எடப்பாடி பழனிசாமி

"ஸ்டாலின் அவர்களே... பகல் கனவு காணாதீர்கள். ஆட்சி, அதிகாரம் இருப்பதால் எது வேண்டுமானாலும் செய்துவிடலாம் என்று எண்ணாதீர்கள். அ.தி.மு.க-வை அழிக்கவோ, ஒழிக்கவோ, ஒடுக்கவோ எந்தக் காலத்திலும் முடியாது." - எடப்பாடி பழனிசாமி.

``வீட்டுக்காக அரசாங்கம் நடத்தும் கட்சி திமுக!" - திண்டிவனத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

"ஸ்டாலின் அவர்களே... பகல் கனவு காணாதீர்கள். ஆட்சி, அதிகாரம் இருப்பதால் எது வேண்டுமானாலும் செய்துவிடலாம் என்று எண்ணாதீர்கள். அ.தி.மு.க-வை அழிக்கவோ, ஒழிக்கவோ, ஒடுக்கவோ எந்தக் காலத்திலும் முடியாது." - எடப்பாடி பழனிசாமி.

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க-வின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தில் இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்வுசெய்யப்பட்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, இன்று சென்னையிலிருந்து சாலை மார்க்கமாக சேலம் செல்கிறார். இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வந்தடைந்த எடப்பாடி பழனிசாமிக்கு மேம்பாலம் அருகே முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான தொண்டர்களும் அங்கு திரண்டிருந்தனர். அங்கு பேசிய எடப்பாடி பழனிசாமி, "எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோரின் ஆசியோடும், உங்களின் பேராதரவோடும் அ.தி.மு.க எனக்கு அரிய வாய்ப்பைத் தந்திருக்கிறது.

திண்டிவனத்தில் எடப்பாடி பழனிசாமி
திண்டிவனத்தில் எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க ஆட்சி மீண்டும் மலர நாம் ஒன்றிணைந்து உழைப்போம். இன்றைய ஆட்சியாளர்கள், திட்டமிட்டு அ.தி.மு.க-வை அழிக்க நினைக்கிறார்கள், வளர்ச்சியை ஒடுக்க நினைக்கிறார்கள். அடுத்து வரும் தேர்தலில் தி.மு.க-வை வீழ்த்துவதே நம்முடைய லட்சியம். தீயசக்தியான தி.மு.க-வை வீழ்த்துவதற்காக... எம்.ஜி.ஆர் அவர்கள் அ.தி.மு.க கட்சியைத் தொடங்கினார்கள். அப்போது பல்வேறு சோதனைகளைச் சந்தித்தார் எம்.ஜி.ஆர். அவருடைய மறைவுக்குப் பிறகு, அம்மா அவர்கள் பல்வேறு துன்பங்களையும், துயரங்களையும் சந்தித்து அ.தி.மு.க இயக்கத்தைச் சிறப்பாக வழிநடத்தினார்கள். அ.தி.மு.க தலைமையிலான ஆட்சியை தமிழ்நாட்டில் அமைத்து, இந்தியாவிலேயே முதன்மை மாநிலம் தமிழ்நாடு என்ற நிலையை ஏற்படுத்தினார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
இரு பெரும் தலைவர்களுக்கும் வாரிசுகள் கிடையாது. நாம்தான் வாரிசுகள், அ.தி.மு.க தொண்டர்கள்தான் வாரிசுகள். எந்தக் கட்சிக்கும் கிடைக்காத பெருமை அ.தி.மு.க-வுக்கு கிடைத்திருக்கிறது.

ஆனால், இன்றைய ஆட்சியாளர்களை எண்ணிப்பாருங்கள்... அவர்களுக்கு, குடும்பம்தான் கட்சி; கட்சிதான் குடும்பம். நம்முடைய அ.தி.மு.க தலைவர்களுக்கோ மக்கள்தான் குடும்பம். மக்களுக்காகவே வாழ்ந்த தலைவர்கள் அவர்கள். தி.மு.க குடும்பத்துக்காக ஆட்சிசெய்துகொண்டிருக்கிறது. வாரிசு அரசியல் செய்கிறார்கள். ஏதோ மன்னர் பரம்பரைபோல... கருணாநிதி, அதற்குப் பிறகு ஸ்டாலின், அடுத்தது உதயநிதியும் முளைத்துவிட்டார். மக்களுக்கான திட்டங்களைத் தீட்டி செயல்பட்ட கட்சி அ.தி.மு.க. ஆனால், வீட்டுக்காக அரசாங்கம் நடத்தும் கட்சி தி.மு.க. மீண்டும் அ.தி.மு.க ஆட்சிக்கட்டிலில் அமர நாம் இரவு, பகல் பார்க்காமல் உழைக்க வேண்டும். தேனீக்கள், எறும்புகளைப்போல சுறுசுறுப்பாகச் செயல்பட வேண்டும்.

திண்டிவனத்தில் எடப்பாடி பழனிசாமி
திண்டிவனத்தில் எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க-வை வீழ்த்த எந்தச் சக்தியாலும் முடியாது. ஸ்டாலின் நினைக்கிறார்... அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்மீது பொய் வழக்குகளைப் போட்டு அ.தி.மு.க வளர்ச்சியை தடுக்கலாம் என்று நினைக்கிறார், அது ஒருபோதும் நடக்காது.

ஸ்டாலின் அவர்களே... காற்றுக்கு எப்படி தடை போட முடியாதோ, அதுபோல அ.தி.மு.க-வின் தொண்டர்களையும் உங்களால் தடுத்து நிறுத்த முடியாது. அடுத்து எந்தத் தேர்தல் வந்தாலும், `அ.தி.மு.க வெற்றி' என்ற முழக்கம்தான் ஒலிக்கும், சரித்திரம் படைப்போம். இந்தக் கூட்டம் சாதாரணக் கூட்டம் அல்ல, தி.மு.க என்ற தீய சக்தியை ஓட ஓட விரட்டி அடிக்கும் கூட்டம். தி.மு.க கட்சியை வேரோடு, மண்ணோடு ஒழிக்கின்ற கூட்டம்.

எடப்பாடி பழனிசாமி - திண்டிவனம்
எடப்பாடி பழனிசாமி - திண்டிவனம்
ஆக, ஸ்டாலின் அவர்களே... பகல் கனவு காணாதீர்கள். ஏதோ ஆட்சி, அதிகாரம் இருப்பதால் இன்றைக்கு எது வேண்டுமானாலும் செய்துவிடலாம் என்று எண்ணாதீர்கள். அ.தி.மு.க தொண்டர்களால் உருவான கட்சி; உழைப்பால் உருவான கட்சி; எந்தக் கொம்பனாலும் அ.தி.மு.க-வை அழிக்கவோ, ஒழிக்கவோ, ஒடுக்கவோ எந்தக் காலத்திலும் முடியாது. ஆகவே, வருங்காலம் அ.தி.மு.க-வுக்குப் பொற்காலமாக அமையும்" என்று கூறினார்.