Published:Updated:

``பட்டம் பெற்றுள்ளதால் எனக்கு பொறுப்புகள் அதிகமாகியுள்ளன’'-`டாக்டர்' எடப்பாடி பழனிசாமி நெகிழ்ச்சி!

`டாக்டர்’ எடப்பாடி பழனிசாமி
`டாக்டர்’ எடப்பாடி பழனிசாமி

துறைசார்ந்து பணியாற்றுபவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகின்றன.

ஒரு குறிப்பிட்ட துறையைத் தேர்ந்தெடுத்து, அதில் ஏதேனும் ஒரு தலைப்பை மையமாகக் கொண்டு ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கை சமர்ப்பித்தபின் `டாக்டர்’ பட்டம் வழங்கப்படும். நீங்கள் முனைவர் பட்டம் பெற விரும்பினால் இதுதான் நடைமுறை. ஆனால், கௌவுரவ டாக்டர் பட்டம் ஒன்றும் வழங்கப்படுகிறது. இந்தப் பட்டத்தை பல்கலைக்கழகங்கள் வழங்கும். துறைசார்ந்து பணியாற்றுபவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக இவை வழங்கப்படுகின்றன. சினிமா, இலக்கியம், அரசியல் உள்ளிட்ட துறையைச்சேர்ந்தவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இதற்கு முன்பு, மறைந்த முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், கருணாநிதி,விஜயகாந்த் உள்ளிட்டோர் பெற்றுள்ளனர். துணைமுதல்வராக இருக்கும்போது, ஸ்டாலினுக்கு அண்ணா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது. அதேபோல நடிகர்கள் விஜய், விஜயகுமார் உள்ளிட்டோருக்கும் கடந்த 2007-ம் ஆண்டு வழங்கப்பட்டது. இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், டாக்டர் எம் ஜி ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இருபத்தி எட்டாவது பட்டமளிப்பு விழா சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ் கான்வென்சன் மையத்தில் நடைபெற்றது. இங்கு 2481 மாணவ மாணவிகள் பி.டெக், எம்.பி.பி. எஸ் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளில் தேர்வில் வெற்றி பெற்று இளநிலை, முதுநிலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றனர். மேலும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கௌவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

ஹாரிஸ் ஜெயராஜ்
ஹாரிஸ் ஜெயராஜ்

அத்துடன், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், நடன மற்றும் திரைப்பட நடிகை ஷோபனா, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்புச் செயலாளர் சதீஸ் ரெட்டி, கங்கா மருத்துவமனை தலைவர் டாக்டர் ராஜ சபாபதி ஆகியோருக்கு கௌரவ டாக்டர் பட்டமும் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் துணை முதல்வர் ஓ. பன்னிர்செல்வம், அமைச்சர் பெருமக்கள் மாபா பாண்டியராஜன், பெஞ்சமின், எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன். கே.பி. அன்பழகன், முன்னாள் மக்களவை துணை சபா நாயகர் தம்பி துரை, பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி. சண்முகம் மற்றும் சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் வருகை தந்துள்ளனர்.

அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, ````மன உறுதி, சிறப்பான கல்வியாற்றல், பிறருக்கு உதவிசெய்தல் கல்லூரி வாழ்வை துவக்கிய நீங்கள், கல்லூரி முடிந்து பொறுப்புள்ள இளைஞர்களாக வந்துள்ள உங்களுக்கு வாழ்த்துகள். பட்டம் பெற்ற அனைவருக்கும்பாராட்டுகள். மனித சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கான உங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற உறுதி ஏற்றுக்கொள்ளும் தருணமும் இதுதான். நானும் இன்று கவுர முனைவர் பட்டம் பெற்றுள்ளதால் என்னுடைய பொறுப்புகளும் அதிகரித்துள்ளன. போற்றவேண்டியவை, உண்மை உழைப்பு உயர்வு. பின்பற்ற வேண்டியவ கனிவு, பணிவு, துணிவு. கடமை, கண்ணியம், கட்டுபாடு பேணவேண்டியவை. அண்ணாவின் இந்த அறிவுரையை நீங்கள் கடைபிடிக்கவேண்டும். ஒருவனுக்கு அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியாகும். தரமான கல்வி நிறுவனங்கள் மூலம் மனித வளம் மேம்படும். இந்த நிதியாண்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. கல்லூரியில் 50சதவீதத்துக்கு மேல் கல்வி பயில, 12 அரசு மற்றும் அறிவியல்கல்லூரிகளைதுவக்கியுள்ளது. பல்கலைகழகங்கள் அறிவுலகின் கோயில்கள். இளம் விஞ்ஞானிகள் உருவாக்குவதால் சமூக மாற்றத்துக்கான இடங்கள் அது” என்று தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

பட்டம் வழங்க என்ன காரணம்?

சுற்றுச்சூழல் பாதுகாக்க ஸ்டெர்லைட் ஆலைக்கு பூட்டு போட்டது. தமிழக அரசின் சார்பில் எம்ஜிஆர் நினைவை போற்றும் வகையில் நினைவு நாணயம் வெளியிட்டது.

2 ஆண்டுகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நலத்திட்ட பணிகள் அணைத்து துறைகளிலும் சிறப்பான செயல்பாடு, மற்றும் சட்டம் ஒழுங்கு சிறப்பான முறையில் கொண்டு செல்வது.

62 ஆண்டு கால போராட்டத்திற்கு பின் அத்திக்கடவு அவிநாசிதிட்டம் துவங்க பட்டு 40 லட்சம் மக்களின் தாகம் தீர்க்கப்பட வித்திட்டது.

மத்திய அரசிடம் முறையிட்டு தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பிரதமர் மோடி முன்னிலையில் அடிக்கல் நாட்டியது,

114 ஆண்டுகளாக இருந்து வந்த காவிரி நீர் சிக்கல் பிரச்சினைக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நீதிமன்றம் சென்று சட்ட போராட்டத்தினை நிகழ்த்தியது.

தமிழகத்தில் உள்ள ஏரி குளங்களை தூர்வாரி நீர்வளத்தை மேம்படுத்தும் திட்டமான குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்தி நீர் வளத்தை பெருக்கியது.

உள்ளிட்ட செயல்களை கருத்தில் கொண்டு, இந்த கவுரவ பட்டம் வழங்க பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது....

அடுத்த கட்டுரைக்கு